(நபியே !தேய்ந்து ,வளரும்)பிறைகளை பற்றிஉம்மிடம் கேட்கிறார்கள்;அதற்கு நீர் கூறும் அவை மனிதர்களுக்குகாலம் காட்டியாகவும் ,ஹஜ்ஜை அறிவிக்கக் கூடியதாகவும்இருக்கின்றது. (சூரா அல் பகரா :வசனம் 189)
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் ,அல்லாஹ்வின் பதிவுப்புத்தகத்தில் வானங்களையும் ,பூமியையும் படைத்த நாளில்இருந்து மாதங்களின் எண்ணிக்கை 12 ஆகும் அதில் (துள்கஹதாஹ்,துள் ஹஜ் ,முஹர்ரம் ,ரஜப் ) ஆகிய நான்குமாதங்கள் புனிதமானவை ஆகும் .(சூரா அத் தௌபா :வசனம் 36)
அவன்தான் சூரியனை (சுடர்விடும்) பிரகாசமாயும் சந்திரனைபிரகாசிக்கும் ஒளி உள்ளதாகவும் ஆக்கினான்.ஆண்டுகளின்எண்ணிக்கையையும் ,காலக்கணக்கையும் நீங்கள் அறிந்துகொள்ளும் பொருட்டு (சந்திரனாகிய )அதற்கு மாறி மாறி வரும்பல படித்தரங்களை உண்டாக்கினான் ;அல்லாஹ் உண்மை(யாகதக்க காரணம் )கொண்டல்லாது இவற்றைபடைக்கவில்லைஅவன்இவ்வாறு அறிவுள்ள மக்களுக்கு தன் அத்தாட்சிகளை விவரிக்கிறான்(சூரா அல் யூனுஸ் :வசனம் 5)















