Friday, September 19, 2014

ரைபிள் ,மகசின் ,கொகிங் காண்டில் ,பிஸ்டல் கிரிப் ,ரிகர் அல்லாஹு அக்பர் ஒருபார்வை ....

   இலக்கு அதை அடைவதற்கான பாதைகளை நியாயப்படுத்தும் என்பது குப்ர் கற்றுத்தரும் அரசியல் மொழி .குறிப்பாக கம்யூனிசம் இந்த பாடத்தை அடிப்படை ஆக்கியது .அந்தவகையில் வன்முறை மற்றும் பலாத்காரத்தை பயன்படுத்தி அதிகாரத்தை கைப்பற்றுதல் ,ஆட்சி செய்தல் இவர்கள் பார்வையில் சரியானது .இங்கு சித்தாந்த மாற்றம் என்ற நோக்கில் சில செயல்களை அடிப்படை மனித விழுமியங்களை தாண்டி பிரயோகிப்பதை இவர்கள் சரிகாண்பார்கள்.

     எனவேதான் இவர்களின் பிரக்டிகள் குருவான லெனின் கிராடின் பிரதான அறிவுரை"ஆயிரம் துண்டுப்பிரசூரங்களும் நூறு பேச்சு மேடைகளும் சாதிக்காததை ஒரு துப்பாக்கித் தோட்டா சாதித்து விடும் "என்பதாக இருந்தது .இன்னோர் இடத்தில் "அதிகாரம் என்பது துப்பாக்கி பரல்களில் இருந்து பிறக்க வேண்டும் ."எனக் கூறுகிறார் .

அதாவது ஆயுத வலிமை மற்றும் அசாதாரண சர்வாதிகாரம் என்பன அரசியல் அதிகாரம் நோக்கிய வழிமுறையில் தவிர்க்க முடியாத ஒன்று என்பதே இவர்களின் கூற்று ஆகும் .இதே அடிப்படையில் 'ஜிஹாத் வல் கிதால்' பற்றிய கருத்தோட்டம் மற்றும் பிரயோகம் தொடர்பில் முஸ்லீம்களிடமும் ,முஸ்லீம் அல்லாதவர்களிடமும் மிகத் தவறான கருத்தோட்டங்கள் இருக்கின்றன .

ஆனால் யதார்த்தத்தில் ஜிஹாத் கடமையாக்கப்பட்ட ஒழுங்கு ,அதன் பிரயோக ஒழுங்கு பற்றிய இஸ்லாத்தின் பாடங்கள் பற்றிய தெளிவீனம் ,இஸ்லாத்தின் சித்தாந்த கட்டமைப்பில் இருந்து ஆராயப்படமையால் இன்று பல தவறுகள் முஸ்லீம்களால் விடப்படுகிறது .அதில் ஒரு பிரதான தவறே சகோதரனின் கழுத்தில் கத்தியை சானை தீட்டும் சகோதரப் படுகொலைகளாகும் .

(கலீபா உஸ்மான் (ரலி )அவர்களின் காலத்தின் பின் )சிதைந்த இஸ்லாமிய அதிகார அரசியலின் மூலோபாயம் இந்த கசப்பான இரத்த சுவடுகளை தாண்டி இன்றுவரை வந்துள்ளது .இதனால் யாருக்கு இலாபம் !? காழ்ப்புணர்வுடன் இருந்த யூத கிறிஸ்தவர்களுக்கு மற்றும் அல்லாஹ்வின் எதிரிகளுக்கு அது இன்றுவரை சாதகமாகியுள்ளது என்பதே மறுக்க முடியாத உண்மையாகும் .

இந்த அல்லாஹ்வின் எதிரிகள் இஸ்லாத்தை கருவறுக்கும் அரசியலுக்கு இத்தகு நிலைப்பாடுகளை வரவேற்றனர் .அது ஏன் என்றால் அது முஸ்லீம்களின் பலத்தை பிரிவினை என்ற பெயரில் சிதைத்து ,சகோதரத்துவத்தை கேள்விக்குறி ஆக்கியது . கைக்கு எட்டிய தூரம் வந்த பல வெற்றிகள் ,எதிரிகளால் கைகொட்டி சிரிக்கும் நிலைக்கு மாறியதும் இதனால் தான் ஆகும் .

இஸ்லாமிய ஆட்சி அதன்கீழ் வாழ்வு தொடர்பில் தெளிவற்ற அரசியல் கோணத்தில் இருந்து போராட முற்படும்போது இந்த நிலைகள் தவிர்க்க முடியாதது . ரைபிள் ,மகசின் ,கொகிங் காண்டில் ,பிஸ்டல் கிரிப் ,ரிகர் அல்லாஹு அக்பர் என புறப்படும் இராணுவ அரசியல் கோணம் மிக கண்டிப்பாக மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் . இது பற்றி உங்கள் கருத்துகளை பதிவிடுக .

No comments:

Post a Comment