Friday, September 12, 2014

இஸ்லாமிய எழுச்சியின் இயங்கு திசையில் ............

        இஸ்லாமிய தேசம் இஸ்லாத்தின் கீழ் வாழ்வு தொடர்பில் அடிப்படை தெளிவையும் அடையும் பாதை பற்றிய சுன்னா பற்றியும் மிகத் தவறாகவே சிந்திக்கப்படுகிறது ,சித்தரிக்கப்படுகிறது .பாமரத்துவமாக முஸ்லீம் சமூகமும் மதப் புரோகிதமாக தனிமனித வழிபாடும் இருக்கும் வரை இந்த தவறுகளை தவிர்க்க முடியாது .சில ஆரம்ப இலக்குகளை கூட அடைய முடியாது .

    இஸ்லாம் என்பது ஒரு சிறந்த மதம் என்ற பிரித்தாளும் அரசியல் பொறியை விட்டு முஸ்லீம் உம்மத் விடுபடவில்லை .மத்திய கால 
ஐரோப்பிய கிறிஸ்தவ பாதிரி ஆதிக்கத்தை தாண்டாத வறட்டு வாதத்தை உலமாக்கள் விடுவதாகவும் இல்லை !அதன் விளைவு வெள்ளிக்கிழமை நமாஸ் ,சனிக்கிழமை தமாஸ் எனற பாணியை நோக்கி சமூகம் கொண்டு செல்லப்படுகிறது .அதன் மூலம் மேற்கு சொல்லும் மதச் சார்பின்மை அல்ஹம்துலில்லாஹ் என ஜீரணிக்க வைக்கப்படுகிறது .

     அதாவது முதலாளித்துவ அகீதாவை மீறாத ஒரு வாழ்வு நோக்கியே ரேடிகல் இஸ்லாமிஸ்டுகளும் ,மொடர்ன் இஸ்லாமிஸ்டுகளும் அழைக்கிறார்கள்  . இந்த நிலைப்பாட்டில் இருந்தே குப்ரியத்தால் முஸ்லீம் உலகு வெற்றிகரமாக  ஆளப்படுகிறது . 

      நேற்று கடாபியின் பச்சை புத்தகத்தை எதிர்த்தவர்கள் இன்று ஐ .எம் .எப் .இன் பொருளாதார கொள்கையை நம்பி,மேற்கின் அரசியல் சிஸ்டத்தை இடைக்காலம் ஆக்கி  இஸ்லாமிய ஆட்சி நோக்கி நகரப்பார்க்கிரார்கள் !! இன்னும் ரேடிகல் ஆலிம்களின் பதுவாக்கள் ,சிலுவை பிளஸ் செக்கியூலர் வெஸ்டர்ன் ஆர்மியை நம்பி அராபிய மன்னரிசம் பயணிக்க உதவுகிறது .

         இத்தகு பிரதான தடைகளை தாண்ட தொடர் பிரச்சாரத்தை பரவலாக்கி அதன் மூலம் அவுஸ் ,கஸ்ரஜை ஒத்த ஒரு சாணக்கியம் மிக்க சமூகத்தின் நுஸ்ராவின் மூலம்  வளமும் பலமும் மிக்க ஒரு நிலப்பரப்பபையும்   கிடைப்பதற்கான முயற்சி செய்வதும் தவிர வேறு மாற்று வழிகள் சுன்னாவில் இல்லை .அதுதான் நபிவழியிலான  கிலாபா அரசு.

    இந்த அரசியல் பார்வையை முஸ்லீம் உம்மத்துக்கு (குப்ர் சிஸ்டத்தை
டிலீட் பண்ணி ) போர்மட் பண்ண வேண்டும் .இதை தவிர வேறு வழி இல்லை .இன்னும் ஒரு நூற்றாண்டை இழந்தாலும் ஒரு மாற்று வழி இல்லை .ஏனென்றால் அதுதான் சுன்னாஹ் . 





No comments:

Post a Comment