Friday, September 26, 2014

ஐ .எஸ் மீதான தாக்குதல் சொல்லும் செய்தி என்ன !?

         

    முஸ்லீம்களின் வளத்தையும் ,நிலத்தையும் தமது காலனித்துவ விதிக்குள் மீண்டும் முடக்குவதற்கான குப்ரிய முதலாளித்துவ யுத்தம் தொடங்கி விட்டது . ஐ .எஸ் என்ற காரண முகமூடியோடு அத்திவாரம் போடப்பட்ட எண்ணை கொள்ளையர்கள் மீண்டும் அதே கொலைகார நியாயங்களோடு கூட்டாக களம் இறங்கியுள்ளார்கள் .
                               
     ஐ .எஸ் இனை அழிப்பதற்கான இராணுவ நகர்வுகளில் ஜபாஹ் அல் நுஸ்ராஹ் அமைப்பின் முன்னணி நிலைகள் பல தகர்க்கப்பட்டதில் இருந்து இந்த யுத்தத்தின் தெளிவான இலக்கு புரியப்படுதப் பட்டுள்ளது .இப்போது பசர் அல் ஆசாத் மேற்கின் கட்சி . குப்ரிய முதலாளித்துவ ஜனநாயகத்துக்கு அடிபணியாத வரை இஸ்லாமிய போராளிகளை இந்த குப்ரியக் கூட்டு விடப்போவதில்லை . 

                                                                     ஐ .எஸ் போராளிகளின் உணர்வையோ ,இராணுவ உத்வேகத்தையோ குறைத்து மதிப்பிடவோ ,குறைகூறவோ இங்கு நாம் வரவில்லை .ஆனால் வலிந்து வரையப்பட்ட மேற்கின் பிரச்சாரப் போலிகளால் தான் அவர்கள் ஊதி பெருப்பிக்கப் பட்டார்கள் .இஸ்லாமிய அரசியல் இராஜ தந்திரத்தை முதலாளித்துவ குப்ரிய அகீதாவுக்கு சவாலாக சமர்ப்பிக்கும் சாணக்கியத்தில் பூச்சியமாக நின்று கொண்டு பெயரளவுப் பெறுமானமாக இஸ்லாமிய ஆட்சி பற்றி பேசியதன் அரசியல் தவறை முஸ்லீம்களாகிய நாம் மீண்டும் அனுபவிக்கப் போகிறோம் .

          சிரியா தொடர்பில் மேற்கின் நீண்டகால ,இருட்டடிப்பு மற்றும் மௌனம் என்பன ஒரு பக்குவமான திட்டமிடலுக்கு ஆனது என்பதை நாம்  முன்பும் பலதடவை பதிந்துள்ளோம் .முஸ்லீம்களின் உள்ளார்ந்த மோதல் ,மற்றும் தமது இழப்பற்ற ஒரு பொறியை தயாரிப்பதே அமெரிக்காவின் திட்டம் .அது இப்போது வெற்றியளித்துள்ளது .முஸ்லீம்களின் இராணுவமும் ,முஸ்லீம்களின் விமானப்படையும் முஸ்லீம்களை தாக்குகிறது ! 

                              நாளுக்கு நாள் அதிகரித்த முஸ்லீம் உம்மத்தின் இஸ்லாமிய ஆட்சி தொடர்பான தேடலின் சாத்தியப்படு தொடர்பில் ,அதிர்ப்தியையும் ,விரக்தியையும் ஏற்படுத்துவதன் ஊடக ஏற்படக்கூடிய இடைவெளியில் ஜனநாயகம் ,பன்மைத்துவம் என்ற விதிகளை புகுத்துவதன் ஊடாக இஸ்லாமிய மதத்தை ! வாழவிடுதல் என்ற ஜென்டில்மன் இசத்தை திணிப்பதே இந்த மேற்குக் கூட்டின் இறுதி முடிவு .

                                                                       இஸ்லாமிய இராணுவ போராளிகள் மேற்கின் இராஜதந்திரத்துக்கு சவாலாக இருந்ததை விட ,அவர்களின் நிர்ணயங்களுக்கு சாதகமாகியுள்ளார்கள் என்பதே கசப்பான உண்மையாகும் . தற்காலிகமான சில இராணுவ வெற்றிகளில் மட்டும் இஸ்லாமிய அரசியல் தங்கிவிடாது என்பதை முஸ்லீம் உம்மத் தெளிவாக உணரவேண்டும் .இஸ்லாமிய அரசியல்,அதன் அதிகார உருவாக்கம் என்பன தொடர்பில் அல்லாஹ்வின் தூதரின் (ஸல்) சீரா மீண்டும் முஸ்லீம் உம்மத்தால் பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும் .

No comments:

Post a Comment