Sunday, September 7, 2014

இஸ்லாமிய அடிப்படைவாதம் & இஸ்லாமிய பயங்கர வாதம் இலங்கையிலுமா !?


இது ஆதிக்க அரக்கர்களின் அராஜக மொழி !
முஸ்லீம் இரத்தம் குடிக்க கொடிய பொறி!
பூர்சுவா சந்தையில் என்றும் மலிவான சத்திய எதிர்ப்பு சதி !!
நேற்று ஒபாமா வரை உரித்த அதே வெங்காயத்தை 
பக்தியோடு வாங்கி அரசியல் சாக்கடை சாம்பாரை 
சுவையூட்ட நினைக்கிறார்கள் சில லோக்கல் பன்னாடைகள் !

அமெரிக்காவுக்கும் தாம் பொக்கெட் பெட் தான் என்பதை 
(அ)சிங்க குட்டிகள் மீண்டும் அம்பலப்படுத்தி உள்ளன !!
அதன்படி அநீதியை நீதியாக்கி அசுரன் அம்பலமாடுவான் !!
இனியென்ன தொட்டில் குழந்தைக்கும் மரண 
தண்டனை விதிக்கப் படலாம் !! மாதர்களை 
மானபங்க படுத்தி விட்டு மனித வெடிகுண்டை 
செயல் இழக்க செய்ததாக அறிக்கை விடலாம் !
முஸ்லீம் என்ற ஒரு காரணம் மட்டும் போதும் !

கசாப்பு கலாச்சாரம் தேசிய பாதுகாப்பு என ஆகும் !!
அதில் சட்டங்கள் சாவகாசமாக இரத்தம் குடிக்கும் !!
அதன் பின் காணாமல் போனவர்களுக்காக தயங்காமல் 
ஜனாஸா தொழுகை நடாத்தலாம் !! தப்பிக்க என்ன வழி?
வேண்டுவது இதுதான் ;இஸ்லாத்தை அவுட் ஒப் பேஷன் ஆக்கு !
கொத்தடிமை நிய்யத்தை கொள்கையாய் மாற்று !
சத்திய தீனுக்கு அடிவருடி தாகூதிய அடிகழுவு !
வஹியை 'எலாஸ்திக்காக' நெகிழச் செய் !
அதனால் குப்பார் மனம் மகிழச் செய் !

சுய கௌரவத்தை சுட்டெரித்து அந்த சாம்பலையும் 
தன்மான கபனில் போர்த்தி கபுருக்கு அனுப்பிவை !!
அப்போதுதான் பேயின் தயவில் பிணம் தின்னும்
சாத்திரத்தில் சற்று தயவு கிடைக்கும் !! கவலை விடு 
உல(க) மாக்கள் உனக்காக 'சயன்டிஸ்ட்' ஆவார்கள் ! 
பசைக்குப்ரை இஸ்லாமாக்கும் 'எக்ஸ் பரிமன்ட் செய்வார்கள் !
துர்நாற்றத்தை அத்தர் ஆக்கி அள்ளிப் பூச சொல்வார்கள் !
'கிளீன் சேவோடு' இருந்தால் விழுந்தாலும் தாடியில் 
மண் ஒட்டாது ! என தத்துவ முத்துக்கள் இடுவார்கள் !!
அடிமாடாய் சாவதை விட நடைபிணமாய் நடமாடலாம்!!
என 'ஹுப்புத் துன்யாவுக்கு ஹுகும்' சொல்வார்கள் !!

அதன் பின் அரச ஓடரில் அமாவாசையிலும் பிறை தெரியும் !!
மாடு சமன் கோழி முட்டை என குர்பான் செலவு குறையும் !!
'பனைக்கு' பின்னாலே பயான் என போதி தர்மர்கள் 
மிம்பரிலும் ஏறலாம் !! ஹிஜாப் விவகாரம் கிளீன் போல்ட் !!
சகவாழ்வு என்ற தரித்திரம் சரித்திரமாய் மாறலாம் !!
முஸ்லிம் உம்மத்தே இந்த அசிங்கத்தை 
அரவணைப்பதா உன் முடிவு !!!!!!!!!!!!???????

No comments:

Post a Comment