Friday, September 26, 2014

அமெரிக்க ஐ .எஸ் யுத்தமும் துருக்கியின் அந்தர் பெல்டியும்...!!

  
              ஐ .எஸ் இற்கு எதிரான அமெரிக்க கூட்டு தாக்குதலில் தான் பங்களிக்கப் போவதில்லை என துருக்கியின் அர்தூர்கான் அரசு தெரிவித்துள்ளது .இது சற்று நிதானமாக அலசவேண்டிய அரசியல் .கமால் பாட்சாவின் கிலாபா கவிழ்ப்பு துரோகத்துக்கு பின்னர் முதலாளித்துவ மேற்குலகின் விசுவாசம் மிக்க பொக்கட் பப்பியாகவே துருக்கி செயற்பட்டுள்ளது .இப்போது என்ன நடந்தது இந்த உஞ்சுக்கு!? அர்தூர்கானின் இஸ்லாமிய விழிப்புணர்வு வேலை செய்துள்ளதா !? அதுதான் இல்லை .

              செக்கில் இருந்தாலும் சிலையில் இருந்தாலும் நக்கி இலாபம் காண்பதே முதலாளித்துவ வழிமுறை .அந்தவகையில் அமெரிக்கன் 'பெட்ரோல் கேமில்' வழமையான டிபெண்டர் லைன் இனை மீறி உத்தியோக பூர்வமற்ற முறையில் சில கோள்களை அடிக்கவே துருக்கி ஆசைப்படுகிறது . அதற்கு ஐ .எஸ் இன் தயவு இப்போது சற்று தேவைப்பட்டுள்ளது .ஆனால் இது நட்பு அல்ல மாறாக பொருளாதார விபச்சாரம் .

           விடயம் இதுதான் துருக்கி மிக நீண்ட காலமாக ரஷ்யாவிடம் இருந்தே பெற்றோலியத்தை கொள்வனவு செய்தது .அது உக்ரைன் ஊடாக தரைவழி குழாய்கள் மூலமாக துருக்கியை அடைந்தது .உக்ரைன் அண்மைக்காலமாக இந்தக் குழாய்களில் தடைகளை செய்ததால் துருக்கியின் உற்பத்திக்கு தேவையான பெற்றோலியம் கிடைப்பதில் தடங்கல்கள் நிகழ்துள்ளது .அத்தோடு ரஷ்யாவின் விலை நிர்ணயமும் மூன்று இலக்க டொலர் பெறுமானத்தை கொண்டது .

           இந்த நிலையில் ஐ .எஸ் அமைப்பினர் ஈராக்கின் பெரும்பகுதியை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்த பின்னர் மசகு எண்ணை பீப்பா ஒன்றின் விலையை வெறும் 9 டொலர்களாக குறைத்து துருக்கிக்கு வழங்கியது .அமெரிக்கா சவூதியிடம் வெறும் 1 டொலருக்கு மசகு எண்ணை பீப்பாவை வாங்கி ஏறத்தாள 300 டொலருக்கு விற்க ,அதே பீப்பா ஒற்றை இலக்க டாலருக்கு கிடைத்தால் !!!அந்தர் பெல்டி அடிக்காமல் இருக்க முடியுமா !? இதுதான் முதலாளித்துவம் .

          இதற்கு பிரதி உபகாரமாக ஐரோப்பாவில் இருந்து ஐ.எஸ்.அமைப்பில் இணைய வருபவர்களை துருக்கி கண்டும் காணாமல் விட்டுவிடும் இன்னும் ஆயுதங்களும் கூட எல்லை கடக்கும் ! கண்துடைப்புக்கு சில மீடியா கைதுகள் நடக்கும் .என்ன ஒரு தியாகம் ! சரி அபூபக்கர் அல் பக்தாதிக்கும் பழசுகள் மறந்து போய் விட்டதா .1990 களில் ஈராக் மயானமாக மாற்றப்பட தள உதவி புரிந்த நாடு துருக்கி .அதன் சிந்தனை மற்றும் அரசியல் ஒழுங்கில் மாற்றம் எதுவும் இல்லை .அப்படி இருந்தும் இந்த மசகுப் பீப்பா 'அக்ரிமெண்ட்' செய்துள்ளார் !? இதுவும் முதலாளித்துவம் ! ஜனநாயக இஸ்லாமும் ,கபிடலிச ஜிஹாதும் கைகோர்ப்பதாக இதை எடுத்துக் கொள்ளலாமா !?



1 comment:

  1. WynnCasino.com | New Orleans Hotel & Casino - JT Hub
    Join a 보령 출장안마 world of luxury at Wynn Las Vegas 전라남도 출장샵 and experience the excitement of Las Vegas from 김천 출장샵 the top resort on 강릉 출장샵 the Las Vegas 순천 출장안마 Strip.

    ReplyDelete