Friday, September 19, 2014

சிரியாவில் “அஹ்ரார் அஷ்-ஷாமும்”, “அல்-காயிதாவும்” தம் தளபதிகளை இழந்தது - தாக்குதலின் பின்னணியில் I.S.I.S. ??



     ஒரு குண்டு வெடிப்பில் எல்லாமே நடந்து முடிந்து விட்டது. இட்லிப்பில் நடந்த குண்டு தாக்குதலில் இஸ்லாமிக் புரன்டின் முதன் நிலை தலைவர்கள் 28 பேர் மரணித்து விட்டனர். இது இஸ்லாமிக் புரன்டிற்கு ஒரு பெரிய இழப்பு. அஹ்ரார் அல்-ஷாமின் தலைவரும் Hassan Abboud இதில் பலியாகியுள்ளார். இஸ்லாமிக் புரன்டின் பொலிடிக்கல் லீடராகவும் இவர் செயற்பட்டிருந்தார்.அடுத்தவர் Abu Khalid al-Suri (Mohammed al-Bahaiya). முக்கியமான தலை. அல்-காயிதாவின் தலைவர் அய்மன் அல்-ஸவாஹிரியினால் சிரியாவிற்கான பிரதிநிதியாக நியமனம் செய்ய்ப்பட்டவர். இவரும் இந்த குண்டு வெடிப்பில் பலியாகியுள்ளார்.

       உஸாமா பின் லாதின் அவர்களின் நம்பிக்கைக்கு உரிய தோழர்களில் இவர் முக்கியமானவர். ஆப்கானில் களப்பயிற்ச்சிகளை முடித்துக்கொண்டு அல்-காயிதா வலையமைப்பபின் அனைத்து மஹ்ரிப்களுடனும் தொடர்புகளை பேணியவர். பல தேசங்களிலும் உள்ள சிலீப்பர் செல்களிற்கு தேவைாயன பண வசதிகளை இவரே ஏற்பாடு செய்து வந்தார். இவரது மறைவு அமெரிக்காவிற்கும் மேற்கு முகாமிற்கும் கிடைத்த போனஸ் வெற்றி என்றே சொல்லலாம். 

     இவர்களின் மறைவிற்கு அல்காயிதாவின் இரண்டு பெரும் பிரிவுகளான, al Qaeda Islamic Maghreb (AQIM) மற்றும் al Qaeda Arabian Peninsula (AQAP) தங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிட்டுள்ளன. இதிலிருந்து இறந்தவர்கள் போராட்டத்தில் எத்தனை முக்கியத்துவம் மிக்கவர்கள் என்பதனை உணர முடியும். 

   மேலும் பல அஹ்ரார் அஷ்-ஷாம் முதன்மை தளபதிகளும் இதில் பலியாகியுள்ளனர். இஸ்லாமிய முன்னணி என்ற பெயரில் அஹ்ரார் அஷ்-ஷாம், ஜபாஃ அல்-நுஸ்ரா, F.S.A., ஜெய்ஸ் அல்-இஸ்லாம் போன்ற 09 அணிகள் ஒன்றாக இணைந்து I.S.I.S. இற்கு எதிராக வலுவான இராணுவ கூட்டை அமைத்திருந்தன. 

      அஹ்ரார் அஷ்-ஷாம் (Harakat Ahrar ash-Sham Al Islami) சிரியாவில் சண்டையிடும் பலம் பொருந்திய போராளிக்குழுக்களில் ஒன்று. ஜபாஃ அல்-நுஸ்ராவுடன் நெருங்கிய அரசியல் இராணுவ உறவுகளை கொண்ட அமைப்பு. ஜபாஃ அல்-நுஸ்ராவின் பெனரில் அங்கே இயங்குவதும் சண்டையிடுவதும் அல்-காயிதா அணியினர். I.S.I.S.-இற்கு எதிராக இந்த அணிகள் இரண்டும் பல முனைகளில் இணைந்து செயற்படுகின்றன. சிரியாவில் அந்நிய போராளிகளின் வரவை இந்த அமைப்பு விரும்பவில்லை. குறிப்பாக அந்நிய தேச போராளிகள், “குற்றவாளிகள்” என்ற குற்றச்சாட்டில் சிரியர்கள் மீது மரண தண்டனை விதிப்பதை இது விரும்புவதேயில்லை. சிரியர்களின் தலைமையிலேயே சிரியர்களிற்கான போராட்டம் முன்னெடுக்கப்படல் வேண்டும் என்பதையும் இது விரும்புகிறது. 

       அஹ்ரார் அஷ்-ஷாம் அமைப்பு தம்மை பற்றியோ, தங்களது தாக்குதல்கள் பற்றியோ பெரிய விளப்பரப்படுத்தல்களை விரும்புவதில்லை. சமூக வலைத்தளங்களின் தங்களை பற்றிய செய்திகளை உத்தியோகபூர்வமாக வெளியிடுவதில்லை. சிரியாவில் சண்டையிடும் அணிகளில் ஒரு நிழல் அமைப்பு போலவே அது செயற்பட்டு வந்தது. ஜபாஃ அல் நுஸ்ராவின் தலைமை தவிர்ந்த ஏனைய தலைமைகளுடன் இவர்கள் உறவுகளையும் பேணியது கிடையாது. ஸலபி சிந்தனைவாத போராளிகளை அதிகம் உள்வாங்கிய அமைப்பாகவும் இது இருந்து வந்தது. I.S.I.S.-ஐ எதிர்ப்பதிலும், அழிப்பதிலும் உறுதியாக செயற்பட்டு வந்தது. 

     சிரியாவின் பல முனைகளில் போராளிகள் கடத்தப்பட்டதற்கும் கொல்லப்பட்டதற்கும் அஹ்ரார் அஷ்-ஷாம் பிராந்திய கொமாண்டர்களிற்கும் நேரடி தொடர்புகள் இருந்தமை அண்மைக்காலங்களில் தெரியவந்த விடயங்களாகும். இதன் தலைவர்கள் கொல்லப்பட்டது கார் குண்டு தாக்குதல் அல்லவென்றும் ஒரு பங்கரினுள் வைத்தே இவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் என்றும் சில உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன. 

         அஹ்ரார் அஷ்-ஷாமின் தலைவர் (தாடியில் கைவைத்திருப்பவர்) Hassan Abboud மற்றும் அல்-காயிதாவின் சிரிய விவகார பொருப்பாளர் தளபதி Abu Khalid al-Suri I.S.I.S.-இற்கு எதிராக அமெரிக்கா ஆரம்பிக்கவுள்ள தாக்குதல்களின் சமகாலத்தில் இஸ்லாமிய முன்னணியும் I.S.I.S. மீது தாக்கதல்களை ஆரம்பித்து அவர்கைளை சிரிய மண்ணில் இருந்து துடைத்தெறியும் மெகா பிளேன் பற்றிய டிஸ்கஸ்ஸனின் போதே இந்த குண்டுத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. நிலவறையில் நிகழ்ந்த இந்த சந்திப்பில் பல தலைவர்களும் பங்கு பற்றியிருந்தனர். இடமும், விடயமும் மிக இரகசியமாக வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த அனர்த்தம் நிகழ்ந்தமையானது இரு தரப்பினுள்ளும் போராளிகள் என்ற பெயரில் உளவாளிகள் நிறைந்துள்ளதையே உணர்த்துகின்றது. 

  அன்டர்கிறவுன்ட் பங்கரினுள் வைத்தே குண்டுத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. I.S.I.S. நிகழ்த்திய தற்கொலை தாக்குதல் என தகவல்கள் வெளியான போதும் இது அவர்களால் நன்கு திட்டமிடப்பட்டு ஏலவே கிடைக்கப்பெற்ற தகவல்களின் உதவியுடன் நிகழ்த்தப்பட்ட ஒன்று என்பது தாக்குதல் நிகழ்ந்த இடத்தில் உள்ள தடயங்களின் ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த பங்கரின் மற்றைய சேம்பர்களில் வெடிபொருட்கள் இருந்தமையால் அவையும் டெட்டனேட்டாகி பாரிய சேதத்ததை ஏற்படுத்தியதால் யாருமே மிஞ்சவில்லை. 

      இந்த தலைவர்களின் மறைவு சிரிய போராட்டத்தில் சில வெற்றிடங்களை ஏற்படுத்தும் அதே வேலை அபூ காலித் அல் சூரியின் மறைவானது அல்-காயிதாவை பொருத்த வரை பேரிழப்பாகும். அதே நேரம் அமெரிக்கா, மேற்கு நாடுகள், சிரியா, இஸ்ரேல், I.S.I.S. போன்றவற்றிற்கு ஒரு வெற்றியாகவும், சாதகமாகவும் அமைந்துள்ளது.

No comments:

Post a Comment