
தேசிய வலையில் சில்வண்டுகளாய் முஸ்லீம் உம்மத் !
அது வேங்கைகளை பூச்சிகள் ஆக்கிய மெகா மேஜிக் !
வீரத்தையும் எல்லைகளால் வளைத்துப் பிடித்தது !
சகோதரத்துவத்தையும் சந்தி சிரிக்க வைத்தது !
சாத்தானோடு சமரசம் பேசி சமபந்தியில் அமர வைத்தது !
நண்பனா பகைவனா எதிரியா !? காட்டப்படும் காட்சிகள்
அடிக்கடி மாற்றப்பட வேட்டைப்பொருளாய் எங்கும்
ஆட்டப்படுகிறது முஸ்லீம் உம்மத் !!! அது
முதலாளித்துவ சிலந்திகளின் ஆதிக்க பசியடக்க !!!
அந்த வரிகளில் இன்றும் ஒரு அவமானப்பதிவு !!!
அடிப்பதற்கான ஒரு காரணம் நிறுத்துவதற்கான ஒரு
நியாயம் என கமா போட்டு வரையப்பட்டுள்ளதே
காசாவின் கந்தல் கதையில் சமாதான ஒப்பந்தம் !!!
வாங்கி கட்டிய பின் வழமை போலவே சமாதானப்
பொறியில் பக்குவமாகவே முஸ்லீம் உம்மத் சிக்கியுள்ளது !!!
தொடரும் இந்த இலவு காக்கும் அரசியலில் என்ன இருக்கிறது !?
பிரித்தாடும் இந்த ஆடு புலி ஆட்டத்தில் செம்மறிகளாக
முடியை சிலிர்ப்பிக் கொள்வதில் அர்த்தம் இல்லை !!!
தாகூதியத்தை ஜீரணித்து அல்ஹம்துலில்லாஹ் சொல்லும்
அயோக்கியத்தை அல்லாஹ்வின் எதிரி கற்றுத் தந்துள்ளான் !!!
அது திமோகிரசி கண்ணாடி போட்டு பார்க்கும் மகாதவறு !!!
அந்த பார்வையில் இஸ்ரேலும் ஒரு தேசமாகிப் போகும் !!!
அதுதான் முஸ்லீம் உம்மத்தின் வெற்றியா புரியவில்லை !!?
இப்போது அல் பதாஹ் வின் ஓரக்கண் பார்வையால் இஸ்ஸதீன்
அல் கசாம் தெளிவாகவே ஏளனம் செய்யப்படுகிறார் !!!
நாளை P L O போலவே ஹமாசிட்கும் நோபல் பரிசு கிடைக்கலாம்!!!
அதன்படி இஸ்ரேலும் பாலஸ்தீனும் மீண்டும்
வேற்றுமையில் ஒற்றுமை காணலாம் !!!
அப்போதும் இந்த இருட்டுப் பொலிடிக்ஸ் இனை நம்பி
குருட்டுத் தனமாக அல்லாஹு அக்பர் சொல்வார்கள் பலர் !!??
அவர்கள் காகிதக் கப்பல் விட்டு கண்டம் கடக்க நினைக்கும்
முஸ்லீம் உம்மத்தின் உதிரங்களே!! அப்போதும் வஹி
அவர் வீட்டுப் பரணில் பாதுகாப்பாய் வைக்கப்பட்டிருக்கும்!!!
No comments:
Post a Comment