Friday, September 26, 2014

அமெரிக்க Tomahawk ஏவுகணைகளும், அராபிய விமானங்களும் சிரியாவில் என்ன செய்துள்ளன?


       செப்டம்பர் 23 அமெரிக்காவும் அதன் நேச சக்திகளும் தங்கள் முதலாவது தாக்குதலை சிரியாவின் ரக்கா, அலிபோவின் புறநகர் பகுதி, இட்லிப்பின் சில பகுதிகள் மீது மேற்கொண்டன. இவர்களின் இந்த இஸ்லாமிய அரசிற்கு (IS) எதிரான தாக்குதலில் முதல் பலியானது ஒரு தாயும் அவளது குழந்தையும். நேற்றைய தாக்குதலில் மட்டும் 120 முஸ்லி்ம்கள் பலியெடுக்கப்பட்டுள்ளனர். 300 இற்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்துள்ளனர். இறந்தவர்களில் 5 வீகிதம் கூட I.S.போராளிகளா என்றால் இல்லை என்பதே பதிலாகும். சாதாரண சிவிலியன்களே பலியாகியுள்ளனர். அமெரிக்கா மேற்கொள்ளும் “இஸ்லாமிய அரசிற்கு எதிரான யுத்தத்தின்” கசுவாலிட்டி கவுன்டிங் ரிப்போட் இது. 

      முஸ்லிம்களை படுகொலை செய்வதற்கு அமெரிக்கா நேற்று மட்டும் 47 Tomahawk ஏவுகணைகளை ஏவியிருந்தது. அமெரிக்க கடற்படையினர் பயன்படுத்தும் நீண்ட தூர ஏவுகணையிது. 1500-2500 கிலோ மீட்டர்கள் வரை 450 கிலோ எடையுடைய வெடிபொருளை தாங்கி செல்லக்கூடியது. மணிக்கு 890 கிலோ மீட்டர் வேகத்தில் இலக்கை வந்து தாக்கியழிக்கக் கூடிய பலம் வாய்ந்தது. இதனை தான் சிவிலியன் இலக்குகள் மீது ஏவியுள்ளது அமெரிக்கா. அதனை விட 14 தடவை (சோட்டீஸ்) விமானங்கள் மூலமும் குண்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது. 

        ஈராக்கிலும், சிரியாவிலும் பொதுமக்களையும் போராளிகளையும் தனியாக பிரித்த நிலையில் தாக்க முடியாது. அந்த வகையில் நோக்கினால் போராளிகள் இருக்கும் இலக்குகள் எல்லாமே சிவிலியன் இலக்குகளாகவே நோக்க வேண்டியுள்ளது. இந்நிலையில் அமெரிக்கா தனது ஏவுகணைகளை போராளிகளின் இலக்குகள் என்ற பெயரில் ஏவியுள்ளது. அது போராளிகளின் இலக்கென்றால் எப்படி பொது மக்கள் மரணிக்க முடியும் என்ற கேள்விக்கு வெள்ளை மாளிகை ஒரு போதும் பதில் சொல்லப் போவதில்லை. 

      I.S. போராளிகளை அமெரிக்க அழிப்பது என்பது வேறு விடயம். யுத்தம் என்றாலே அது தானே நடக்கும். அதில் பொது மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்படுவது என்பது எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும். ஆரம்பமே இப்படியென்றால் இனி வரும் காலங்களில் எத்தனை இலட்சம் முஸ்லிம் உயிர்கள் காவு கொள்ளப்பட போகின்றன. அங்கவீனமாகப் போகின்றன?. 

       இந்த முறை தாக்குதலிற்கு இலக்கானது I.S. (Ad Dawla al-Islamiyya) இலக்குகள் அல்ல. மாறாக ஜபாஃ அல் நுஸ்ராவின் (Jabhat an-Nusra/Victory Front (VF)) தளங்களாகும். அலிபோவின் மேற்குப்புறத்தில் உள்ள புறநகர் பகுதியில் நடந்த தாக்கதலில் அவர்களின் பயிற்ச்சித்தளம் அழிக்கப்பட்டதுடன் அதில் பயிற்ச்சி பெற்று வந்த 30 போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர். 

       அமெரிக்க இராணுவ வட்டாரங்கள் தாங்கள் வெற்றிகரமாக அல்-காயிதாவின் இலக்குகளை அலிபோ பிரதேசத்தில் அழித்ததாகவும், 08 முறை தங்கள் விமானங்கள் அல்-காயிதாவின் Victory Front (VF) தளத்தின் மீது தாக்குதல்களை நிகழ்த்தி அதனை நிர்மூலம் செய்ததாகவும் கூறியுள்ளனர். இந்த தாக்குதலில் ஜோர்டான், ஐக்கிய அரபு இராச்சியம், பஹ்ரைன், சவுதி அரேபியா போன்றவற்றின் விமானங்களும் பங்கேற்றுள்ளன. கட்டார் விமானத்தாக்குதலில் பங்கேற்காத போதும் அதற்கான ஆதரவை தெரிவித்துள்ளது. ஆக மொத்தத்தில் முஸ்லிம் தேசங்களின் விமானங்கள் இஸ்லாமிய அரசின் நிலங்களின் மீது குண்டு பொழிந்து 120 முஸ்லிம்களை வெற்றிகரமாக கொலை செய்துள்ளனர். 

         சிரியாவில் I.S.-ன் தலைமை தளம் ரக்காவிலேயே உள்ளது. இங்கு தான் கடுமையான தாக்குதலை அமெரிக்கா நடாத்தியுள்ளது. இதில் 47 சிவிலியன்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் அநேகர் பெண்களும் குழந்தைகளுமாகும். Tabqa, Deir ez-Zor பிரதேசங்களில் அஸாத்தின் இராணுவத்திடம் இருந்து போராளிகள் கைப்பற்றிய தளங்களே இலக்கு வைக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளன. துருக்கி எல்லையில் I.S. இடங்கள் என இனங்காணப்பட்ட பகுதிகளும் தாக்குதலிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. 

       இந்த தாக்குதலிற்கு முன்னரே I.S. தனது படையணிகளை வேறு இடங்களிற்கு ரீ-லொக்கேட் செய்திருந்தமையினால் அவர்களிற்கு இழப்புக்கள் ஏற்படவில்லை. இவை ஒரு நாளின் சில மணிநேரங்களில் பல பகுதிகளில் அமெரிக்க நேச நாட்டு அணிகள் நடாத்திய தாக்குதல் பற்றிய விபரங்களாகும். இந்த தாக்குதல்களிற்கான பழிவாங்கள் என்ற ஸ்டைலில் சில வேளைகளில் அரபு தேச நகரங்களில் குண்டுகள் வெடிக்கலாம். அதிலும் கூட பல அப்பாவி சிவிலியன் முஸ்லிம்கள் மரணிக்கத்தான் போகிறார்கள்....

No comments:

Post a Comment