Friday, September 12, 2014

மேற்குலகு முஸ்லீம்களை மொழியைச் சொல்லும் மூன்று ஆபத்தான கலிமாக்கள் !

    1924 களில் இஸ்லாமிய கிலாபா சாம்ராஜ்யம் துருக்கியில் வீழ்த்தப்பட்ட போது அதன் விளைவுகள் முஸ்லீம் உம்மத்துக்கு எத்தைகைய பாதிப்பை ஏற்படுத்தப் போகிறது ? என்ற அரசியல் பார்வை மிகத் தெளிவாக உம்மத்துக்கு இருக்கவில்லை .தலைவர்கள் முதல் பாமரர்கள் வரை சிந்தனை வீழ்ச்சியில் இருந்தனர் .அந்த சிந்தனை வீழ்ச்சி என்பது குப்ரிய சித்தாந்த கவர்ச்சியில் இருந்து வாழ்வை நோக்கும் அகீதா புரள்வு அரசியலே ஆகும் .


     

 பிரித்தானிய பொறிமுறையில் அரபிகளுக்கான அரசியலை W .D .லாரன்ஸ் சவூதியை எல்லைப்படுத்தி அமைத்தார். அதற்கு நியோ சலபிசம் எனும் மார்க்க சாயம் இஸ்லாமிய ஷரீயா எனும் தூரிகை மூலம் பூசப்பட்டது .அது அப்பட்டமான துரோக முகமூடி .மறுபக்கம் அஜமி தேசியத்துக்கான ஆதார வடிவமாக்கப்பட்டது துருக்கி .கமால் பாட்சா அதன் ஹீரோ .செக்கியூலரிசம் எனும் ஆபாசம் இங்கு அடிப்படை ஆக்கப்பட்டது .


                    இந்த இரண்டு பாத்திரங்களும் இன்றுவரை தமது பணியை சிறப்பாக 
செய்து கொண்டிருக்கின்றன .அது முதலாளித்துவத்துக்கு சேவகம் புரியும் இஸ்லாமிய துரோகம் என்பது பலருக்கு புரிவதில்லை .அமெரிக்க 'சீமெண்டால்' அரேபிய நிலத்துக்கு 'கொங்கிரீட்' போட்டால் விழுந்தாலும் தாடியில் மண் ஒட்டாது என்பது சவூதி கூறும் அரசியல் தாரக மந்திரம் . துருக்கி கூறுவது சற்று வித்தியாசமாக நாம் தயங்காமல் ஐரோப்பிய 'சேவிங் ரேசரால் புல் செர்வ்' செய்து விட்டு பல்டியே அடிப்போம் என்பதே துருக்கி கூறும் அரசியல்.


                     அதாவது அரபி அஜமி பாகுபாட்டை தாண்டி பாரம்பரிய இஸ்லாத்துக்கு சவூதியும் ,மொடர்ன் இஸ்லாத்துக்கு துருக்கியும் என மிக விரிவான பணி.அடிப்படையில் மோதல் ஆனால் அல்லாஹ்வின் எதிரிக்கு பொது நண்பன் என்ற வேலியை தாண்டினால் இவர்களது பகட்டு அரசியல் அப்பளம் போல் ஆகிவிடும் .அஞ்சி நடுங்க வைக்கும் ஒரே வார்த்தை கிலாபா அரசு என்ற இஸ்லாத்தின் அரசியல் மட்டுமே .முஸ்லீம் உலகில் அதன் தேடல்கள் அதிகரித்த நிலையில் அத்தகு நிலைப்பாட்டை சிதைப்பதற்கும், அத்தகு தேடல்களை நிராசைப் படுத்துவதற்கும் இவர்களது உளவுப்பிரிவுகள் மிக மும்முரமாக பணியாற்றிக் கொண்டிருக்கின்றன .

         நேட்டோ எனும் கொடிய எதிரியின் அரசியல் இராணுவ பாதுகாப்பிலும் ,ஆலோசனையின் கீழும் இன்றைய மத்திய கிழக்கை சுடுகாடாக்கிய இவர்களது சேவை பலருக்கு புரிவதில்லை .இவர்களை     இப்படி நாம்  சொல்லும்போது இன்னொரு பிரேமுக்குள் எம்மை புகுத்தி விடுவார்கள் .அது  குப்ரிய மேற்குலகு முஸ்லீம்கள் தழுவத் தேர்ந்துள்ள மூன்றாம் கலிமா அதோடு முதலாளித்துவ அரசியலை எதிர்ப்பதாக காட்டும் முரட்டுக் கலிமா .அது ஈரான் இஸ்லாமிய குடியரசு எனும் இன்னொரு ஜாஹிலீயத் .

         

No comments:

Post a Comment