Sunday, September 7, 2014

நவ காலனித்துவ ஏமாற்று அரசியலில் துருக்கியின் பாத்திரம் !


      இன்று சிலர் கிலாபா அரசு என்ற இஸ்லாத்தின் அரசியல் கோட்பாட்டை ஒரு அர்த்தமற்ற சாம்ராஜ்யக் கனவாக சித்தரிக்க நினைக்கின்றனர் . அல்லது அதன் அடிப்படையான யதார்த்த உருவத்தை சிதைத்த மாற்றீட்டு அரசியல் ஒன்று பற்றி பேசுகின்றனர் .இவ்வாறு பேசுபவர்கள் யூதர்களோ ,கிறிஸ்தவர்களோ அல்ல .மாறாக முஸ்லீம் உம்மத்தின் உதிரத்தில் உதித்த முஸ்லீம்கள் என்பது கவலைக்கிடமான விடயம் ஆகும் .


இஸ்லாமிய ஜனநாயகம் எனும் கலப்பட ஜாஹிலீயத்தை ஜீரணித்து அதன் வழி முஸ்லீம் உம்மத்தை புடம்பூட ஒப்பீடு செய்யும் இத்தகு நவ சிந்தனா வாதிகள் கூறுவது இதுதான் .குப்பார் விதித்த பிரிகோட்டு அரசியலான தேச ,தேசிய நவகாலனித்துவ பிரிகோட்டு அரசியலை தாண்டி இனி சிந்திக்க முடியாது ! அவ்வாறு சிந்திப்பவர்கள் யதார்த்தம் புரியாதவர்கள் என்பதே ஆகும் .

சுதந்திரம் என்ற பெயரில் போலியாக வழங்கப்பட்ட சுயநல சுரண்டல் தத்துவத்துக்கு சலாம் போட்டு, அதன் பின்னால் இருக்கும் ஏகாதிபத்திய சுரண்டல் சக்திகளை எஜமானர்களாக்கி, தமது விசுவாசத்தை காட்டும் மனித அடிமை அரசியல் ஒன்று பற்றியே அதிக பட்சமாக சிந்திக்க முடிகிறது .ஆனாலும் இஸ்லாத்தை ஒரு முதல்தர ஆன்மீக மதமாக இதற்கு நடுவில் இவர்கள் பேணுவதற்கு கூடிய கரிசனை எடுப்பார்கள் .

இத்தகு விசுவாச அடிமைகளுக்கு சற்று கெளரவம் அளிக்கும் புதிய பக்கேஜ் தான் நவீன துருக்கியாகும் . நோயுற்ற நாடு என்ற வடிவத்தில் இருந்து மீட்சி மருந்து செலுத்தப்பட்ட இன்றைய அதிவேக அரசியலின் வரலாறு துருக்கியில் இவ்வாறுதான் ஆரம்பிக்கிறது .

அதாவது தனது தேவைக்காக தனது பாதணி ஆக்கியதை முதலாளித்துவ மீடியாக்கள் மூலம் மீண்டும் தலையில் சுமந்து காட்டுகிறது .விடயம் அவ்வளவுதான் . அதாவது தன்னை சார்ந்த அரசியலின் பிரதி விளைவே துருக்கி என்ற நாடக பாணியே அதுவாகும் .

1924 களில் கிலாபா சாம்ராஜ்யத்தின் தலைமையாக துருக்கி இருந்த காலப்பகுதியில் ஆதிக்க பலம் ,பொருளாதார தன்னிறைவு என்பவற்றில் குறைவில்லாத துருக்கி ,அத்தகு நிலையை எவ்வாறு இழந்தது என்ற கேள்விக்கும் ,பின்னர் இன்றைய உதாரண வடிவ வளர்ச்சிக்கும் காரணம் என்ன !? அதன் விடயத்தின் அரசியல் பின்புலம் என்ன !? என்ற கேள்விக்கும் கிடைக்கும் ஒரே பதில் மேற்கின் முதலாளித்துவ அரசியல் என்பதே ஆகும் .
துரோகி முஸ்தபா கமால் மூலம் முதலாளித்துவம் துருக்கியை வீழ்த்தியது . இஸ்லாத்தின் அரசியல் அதிகார வடிவமாக எழுந்து நின்ற கிலாபா அரசை சாதாரண ஒரு தேசியமாக கமால் மாற்றியதோடு அது ஐரோப்பாவில் தங்கி
வாழும் கையேந்தி நிலைக்கு வந்து விட்டது .
அதன் பின்னால் ஐரோப்பிய யூனியனில் தன்னை இணைத்துக் கொள்ள பகீரத பிரயத்தனம் செய்தது . 1952 களில் நேடோ அமைப்பில் துருக்கி இணைக்கப்பட்டதன் பின்னர் அந்த கனவு துருக்கிக்கு நிஜமாகியது . அதாவது ஒரு வரலாற்று எதிரியிடம் மண்டியிட்டு பிச்சை கேட்கும் கேவலத்தை விட அதிகமாக எதுவும் செய்துவிட வில்லைதான் . (பிச்சைக்காரன்
ஆக்கி விட்டு பின்னர் கோட் சூட் கொடுத்து எஞ்சியதில்
மிஞ்சியதை கமகமக்க உண்ணக் கொடுப்பதில் 'அங்கிள் சாம்' படு கெட்டிக்காரன்! )இந்த சரணடைவை சாணாக்கியம் என்றால் தகுமா !?

அரபி அஜமி என்ற கோத்திரவாத அரசியலை முன்னிறுத்தி கிலாபா அரசில் இருந்து திட்டமிட்டு பிரிக்கப்பட்ட தேசமான சவூதி அரேபியா போல துருக்கி மசகு எண்ணை வார்த்து காபன் கோலா பருகும் ஊதாரி அரசியலை செய்ய வில்லைதான் .

ஆனால் அந்த கோலா கொடுப்பவர்களின் 'பாட்டில்' ஆக மாறிப்போனது துருக்கி !சவூதி யூத கிறிஸ்தவர்களிடம் கொஞ்சி வாழ ,துருக்கி யூத கிறிஸ்தவர்களிடம் கெஞ்சி வாழும் கேவலத்தையே இன்றுவரை செய்து கொண்டிருக்கிறது .

இன்னும் பல முஸ்லீம் பெருநிலங்களில் நேடோ ஆக்கிரமிப்பிற்கு இந்த துருக்கி தன்னை பங்காளி ஆக்கியுள்ளது . இன்று கூட நேடோ அமைப்பின் நிபந்தன தர கட்டளைக்கும் ,ஐரோப்பிய யூனியனின் விரல் அசைப்பிட்கும் மடங்கி விடும் இந்த துருக்கியின் அரசியலில் சாணாக்கியம் காண்போர்க்கு சொல்வதற்கு எதுவும் இல்லை . தம்மை பிறவிக்குருடன் ஆக்கிக் கொண்டோருக்கு காலைக் காட்சியை விளக்கி காட்ட முடியாதுதான்.

No comments:

Post a Comment