
மேற்கின் சிலுவை இராணுவக் கூட்டணி ஈராக் குவைத்தை ஆக்கிரமித்ததை காரணம் காட்டி அராபிய முஸ்லீம் பெருநிலத்தில் தனது பூட்சுகளை மீண்டும் நேரடியாக 1990இல் பதித்தது .இது தட்செயலாகவோ எதேசையாகவோ நிகழ்ந்த ஒன்றல்ல .அதற்குப் பின்னால் முதலாளித்துவ ஏகாதிபத்தியத்தின் ஆதிக்க அரசியல் பக்குவமாக திட்டமிடப்பட்டிருந்தது . அதற்கு அதன் சர்வதேச சட்டங்கள்,ஒப்பந்தங்கள் என்ற பொறிமுறை நன்றாகவே பயன்பட்டது .