Tuesday, January 14, 2014

”ஒரு துப்பாக்கியின் கதை” - F.S.A. போராளியின் நாட்குறிப்பிலிருந்து.....!! (Re-Publish)


(தாகூத்திய சதிகளில் சிக்கி அற்ப உலக இலாபாங்களுக்காக தூய இஸ்லாமிய கிலாபா அரசின் மீள் வருகையை  தடுக்க நினைக்கும் தவறான இஸ்லாமிய பெயர்தாங்கி வடிவங்களை புரிந்து கொள்ள மீள் பதிவிடப் படுகிறது . ஆனால் சத்திய இலட்சிய படைகளோடு இந்த F.S .A அணியும் இணைந்து குப்பார்களின் முகத்தில் கரியை பூச வேண்டும் என்ற மனதார்ந்த பிரார்தனையோடு இப்பதிவை இடுகிறேன் .)



        எனது பெயர் யெஹ்யா ரம்ஸி. உலக மீடியாக்கள் சொல்லும் ஹோம்ஸ் எனும் ஹிம்ஸின் அர்-ரஸ்டான் நகரின் அருகில் உள்ள ஒரு விவசாய கிராமத்தை சார்ந்தவன். திமிஷ்கில் (டமஸ்கஸ்) உள்ள பல்கலைக்கழகத்தில் விவசாயத்துறையில் பட்டம் பெற்றேன். நவீன விஞ்ஞான நுட்பங்களை புகுத்தி எனது கிராமத்தில் எனது தந்தையின் விவசாயத்தை மேலும் முன்னேற்ற ஆர்வங்கொண்டு எனது கிராமத்திலேயே மணமுடித்து குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தேன். 

       ஒரு நாள் எங்கள் பிராந்திய பத்திரிகை ஹோம்ஸில் அரச எதிர்ப்பு ஊர்வலம் என செய்தி வெளியிட்டது. ஆவலுடன் வாசித்தேன். அரசின் அதிகரித்த வரிகளிற்கு எதிராகவும், குறைக்கப்பட்ட மானியங்களிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தின் புரட்சி என்பது புரிந்து போனது. நான் பிறந்த காலம் முதல் எனது நாடு சோவியத் ரஷ்ய சோஸலிச தாக்கங்களிற்கு உட்பட்டது. அதனால் பண்ணை முதலாளித்துவத்திற்கு எதிராகவும், பூட்சூவா வர்க்கத்திற்கு எதிராகவும் நடக்கும் புரட்சி என நானும் எண்ணினேன்.

        சில மாதங்கள் சென்ற பின் அதே பிராந்திய பத்திரிகை ஹோம்ஸின் அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் என கொட்டை எழுத்துக்களில் செய்தியிட்டது. கூடவே அரபு வசந்தம், ஜெஸ்மின் புரட்சி என்றெல்லாம் எழுது துவங்கியது. ஆம் சிரியாவில் எங்கள் ஹிம்ஸ் மாகாணமே முதல் முதல் அரசிற்கு எதிராக போராட ஆரம்பித்தது.

        மேற்கின் மீடியாக்கள் ஹோம்ஸின் தொழிலாளர் போராட்டம் என்று சொல்லிய சில நாட்களில் அதனை மக்கள் புரட்சி என செய்தி வெளியிட்டன. அலவி அரசிற்கு எதிரான புரட்சி என்றன. ஷியாக்களிற்கு எதிரான சுன்னிகளின் போராட்டம் என கூறின. திமிஷ்க்கில் உள்ள அலவிகளிற்கு எதிராக ஹோம்ஸ் மக்கள் போரட ஒரு தேவையும் இல்லையே என நான் நினைத்தேன். டையர், அலிபோ, இட்லிப் என இப்போது எங்கும் அரசு எதிர்ப்பு போராட்டம். பொலிஸார் தடியடி பிரயோகம் செய்தனர். கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். தண்ணீர் பீரங்கிகளால் தாக்கினர். பின்னர் ரப்பர் குண்டுகளால் சுட்டனர். இறுதியில் கலஷ்னிகோவ்களினால் எங்கள் சிரசுகளை குறிவைத்தனர்.

         இரவின் அமைதியை கிழித்துக்கொண்டு வரும் ஜீப் வண்டிகள் எங்கள் கிராமத்தின் ஆண்களையும் அள்ளிச் சென்றது. பலர் திரும்பி வரவேயில்லை. சிலர் திரும்பி வந்தனர். ஆனால் கொடூரமாக சிதைக்கப்பட்ட பிணமாக. “பழிக்கு பழி” இந்த உண்ர்வு தான் எம் கிராமத்து ஆண்களிடம் எஞ்சி நின்றது. மீண்டும் அல்-ஜஸீராவில் செய்தி பார்த்தேன். “விடுதலை போராளிகள்” என்றும் ‘விடுதலை இராணுவம்‘ என்றும் அது செய்தி சொல்லிக்கொண்டிருந்தது.

       ஷியாக்களிடம் இருந்து சுன்னிகளிற்கு விடுதலை வேண்டும் என்பது சரி. ஆனால் அங்கே இருப்பது சூபி அடிப்படை கொண்ட அலவிகள் அல்லவா. அவர்கள் எப்போது ஷியாக்களாகினார்கள் என்ற கேள்விக்கு விடை கிடைக்கவில்லை. நானும் மேற்கொண்டு அதை பற்றி யோசிக்கவும் இல்லை.

        இரவில் நாமும் கைது செய்யப்பட்டு காணாமல் போவோமோ என்ற பயம். அதனால் சற்று தள்ளி பற்றை மண்டிய புதர்களில் இரவில் ஆண்கள் நித்திரை செய்தனர். நானும் அவர்களுடன் சென்றேன். ஒரு நாள் ஒரு வோக்ஸ் வேகன் வேனில் வந்த சிலர் சிரிய இராணுவத்தை எதிர்த்து போராட யார் தயார் என எம்மை பார்த்து கேட்டனர். சிரிய இராணுவம் செய்த கொலைகளையும் ஜனாஸாக்களையும் லப்டொப்பில் போட்டு சிலைட் ஸோ காட்டினர். அவர்களில் எனக்கு தெரிந்த சிலரும் இருந்தனர். நாங்கள் தயார் என்றோம். இது தான் என்னை எப்.எஸ்.ஏ. ஒருபோராளியாக்கிய சம்பவம்.

        தாக்குதல்கள் அதிகரித்தன. சிரிய இராணுவத்தை நாம் சுட்டோம். சிரிய மக்களை இராணுவம் சுட்டது. சண்டைகள் சமர்களாயின. ஒரு நாள் டயரில் நடந்த சண்டைக்கு ஆள்வளம் போதாதென கூறி என்னை ட்றக்கில் ஏற்றி அங்கனுப்பினர். சில மாதங்கள் அங்கு சண்டையிட்டேன். மீண்டும் ஹிம்ஸிற்கு வந்த போது தான் தெரிந்தது எனது கிராமத்தை சிரிய டாங்கிகள் துவம்சம் பண்ணி விட்டன என்ற செய்தி.

         எனது குடும்பம் புலம்பெயர்ந்து ஜோர்தானில் ஐ.சீ.ஆர்.சி. அமைத்துள்ள அகதி முகாமிற்கு சென்று விட்டது. என் அழகிய மனைவி. என் மூன்று குழந்தைகள். என எல்லோருமே. அவர்கள் நான் இறந்து விட்டதாக கூட நினைத்திருக்கலாம்.

         இப்போதெல்லாம் நான் பொழுது போகாவிட்டால் துருவ நட்சத்திரத்தை பார்த்து சுடுவேன். சுட்டு விட்டு பார்த்தால் துருவ நட்சத்திரம் நட்சத்திரமாகவே இருந்தது. எனது துப்பாக்கியும் துப்பாக்கியாகவே இருந்தது. ஆனால் ரவைகள் மட்டும் தீர்ந்து போயிருந்தன. சிரிய இராணுவத்தை நோக்கி நாம் சுட்டோம். இராணுவமும் சுட்டது. இராணுவம் இராணுவமாக இருந்தது. நாமும் நாமாக இருந்தோம். ஆனால் மக்கள் மட்டும் செத்துப்போனார்கள்.

       இன்றைய சண்டை வரை நாங்கள் பல வெற்றிகளை அடைந்துள்ளோம். ஜபாஃவின் போராளிகள் எம்முடன் இணைந்து சண்டையிட்டுள்ளனர். நான் தொழுவது போலவே அவர்களும் தொழுதனர். நான் ஓதிய குர்ஆனையே அவர்களும் ஓதினர். எனது மனதில் வட்டமிடும் ஷஹாதத்தும், ஜன்னத்தும் தான் அவர்கள் மனங்களிலும் அலையென எழும். முஜாஹிதாவில் எந்த வித்தியாசத்தையும் நான் காணவில்லை.


        சில வாரங்களாக சில மாறுதல்களை காண்கிறேன். ஜபாஃவுடன் இணைந்து நீண்ட நாட்கள் போராடிய எமது அணியின் அங்கத்தவர்கள் தனியாக பிரிக்கப்பட்டு களமுனைகளிற்கு அனுப்பப்படுகின்றனர். அதுவும் எதிரி எங்கு பலமாக உள்ளானோ, அவ்வாறான களமுனைகளிற்கு. இஸ்லாமிய ஆட்சியை நிலைநாட்ட துடிக்கும் எமது F.S.A. போராளிகளிற்கும், எல்லா இஸ்லாமிய ஜிஹாதிய அணிகளுடனும் இணைந்து சிரியாவில் ஆட்சியமைக்கும் எண்ணும் போராளிகளிற்கும் கூட இதே நிலைதான். இழப்புக்களை அதிகம் சந்திக்கும் களமுனைகள் நோக்கி அனுப்பப்படுகிறார்கள். இயக்கம் எமக்குள்ளேயே உளவு பார்ப்பது புரிந்து போனது.

       எனது ஊரை சேர்ந்த எனது அண்ணனின் நண்பர் தான் இப்போது எமது பிரதேச F.S.A. -யின் கொமாண்டர். அவரிற்கு என் மேல் அதீத அன்பு. அக்கறையும் கூட. அவரிடம் இது பற்றி வினவினேன்.அதற்கவர் நாம் சவுதி அரேபிய நிகழ்ச்சி நிரலிற்கு அமைய இயக்கப்படுகிறோம். அதன் பின்னால் அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற பலம் வாய்ந்த எமது நண்பர்கள் உள்ளனர். வெகு சீக்கிரம் எதுவும் நடக்கலாம். அப்போது நாம் ஜபாஃ அல் நுஸ்ரா போன்ற அமைப்புக்களுடன் நேரடி மோதலில் இறங்க வேண்டி வரும். அதன் பின் உருவாகும் ஆட்சியில் நான் ஜெனரல் நீ மேஜர் என்றார் சிரித்து கொண்டே.

     எனக்கு எல்லாமே புரிந்து போய் விட்டது. சிரிய அரசியலின் அடித்தளங்கள், சிரிய விடுதலை போராட்டத்தின் அடித்தளங்கள். ரியாள்களினதும், டொலர்களினதும் செல்வாக்குகள் என எல்லாமே.

     இதை நான் எழுதும் போது கூட அவர் என்னை சந்தித்தார். மீண்டும் கள நிலமைகள் பற்றி கேட்டேன். அவர் சொன்னார், கவலைப்படாதே யெஹ்யா. நாம் சிரியாவை மீட்டு விடுவோம். இன்னும் சில தினங்களில் உனக்கு நாளாந்த ஊதியம் வழங்கப்படும். நீ தேறி விட்டாய். சிறந்த F.S.A. போராளியாக. உனக்கு வழங்கப்படும் ஊதியம் டொலர்களில் கிடைக்கும். அதன் வாசமே தனி சுகம் என கடகடவென சிரித்தார்.

     மீண்டும் சொன்னார். கவலைப்படாதே. ஜோர்தானில் நிறைய எம் சிரிய அழகிய பெண்கள் விதவைகளாக உள்னர். அவர்களில் எவளையாவது இரண்டோ மூன்றோ என நீ திருமணம் முடித்து கொள். உன் துப்பாக்கியின் முன் அவர்கள் மண்டியிடுவர். இல்லையென்றால் நீ வைத்திருக்கும் டொலர்களிற்காகவாவது மண்டியிடுவர். இஷ்டப்படி விளையாடலாம் எனச்சொல்லி மீண்டும் சிரித்தார்.

       என்னை விட்டு அகன்று சென்ற அவர் இன்னொரு F.S.A. போராளியிடம் ஏதோ சொல்லி சிரிப்பதும் பின் அவன் தோள்களை தட்டி குளுக்குவதும் தெரிந்தது. அநேகமாக எனக்கு சொன்னவற்றையே அவனிற்கும் அவர் சொல்லியிருக்கலாம். அப்படியென்றால் போர் முடிந்ததும் சிரியா திரும்பும் பெண்களை அவன் துப்பாக்கி முனையில் தேர்வு செய்வான். அல்லது அவனிற்கு கிடைத்த டொலர்களை காட்டி நிகாஹ் செய்வான். யாரோ ஒரு F.S.A..போராளி என் மனைவியை கூட அப்படி செய்யலாம். நினைத்து பார்க்க தலை சுற்றியது. போராட்டமே வெறுத்து போனது.

       முன்பு பார்த்த யுனிவேர்சல் சோல்ஜர்ஸ் திரைப்படம் ஞாபகம் வந்தது. நான் என்னதான் சிரியாவின் இஸ்லாமிய ஆட்சிக்காக போராடினாலும், அர்ப்பணங்கள் செய்தாலும் எங்கள் தலைமை இயக்கப்படுவது அமெரிக்க ஏகாதிபத்தியத்தினால். அமெரிக்காவை இயக்குவது ஸியோனிய பயங்கவரவாதம். அப்படியென்றால் நான் இதுவரை சண்டையிட்டது, போராடியது எல்லாம் இறைவன் சந்நிதானத்தில் என்ன பெறுமதியினை அடையப்போகிறது.

     எனக்கு அழுவதை தவிர வேறு வழியில்லை. F.S.A.-யை விட்டு ஓடிச்செல்ல முடியாது. அப்படி ஓடினால் நான் சிரிய அரசின் உளவாளி என்றோ, ஹிஸ்புல்லாஹ்வின் கைக்கூலி என்றோ என் சகோதரனின் நண்பரான கொமாண்டரின் பிஸ்டலினாலேயே பின் மண்டையில் சுட்டுக்கொள்ளப்படலாம்.

       இன்றும் கூட சுமார் 23-30 போராளிகள் என் அணியுடன் வந்து இணைந்து கொண்டனர். அவர்கள் ஜோர்தானில் அமெரிக்க பயிற்ச்சி பெற்றவர்கள். நவீனரக ஆயுதங்களை கையாள தெரிந்தவர்கள். டமஸ்கஸ் நோக்கி செல்லவிருக்கும் அணியில் என்னுடன் அவர்கள் சேர்ந்து பயணிக்க வந்திருந்தனர். அமெரிக்க சிக்ரட்டுகள், அமெரிக்க லைட்டர்கள், அமெரிக்க சப்பாத்தக்கள் என அவர்கள் யூ.எஸ். எலைட் போஸஸ் போல கம்பீரமாக இருந்தார்கள். அதில் ஒருவன் என்ன பார்த்து சிரித்தான். ஸலாம் சொன்னான். சில நிமிடங்களில் நண்பனானான்.

     தான் ஒரு பழ வியாபாரி என்றான். சண்டையினால் சந்தையில் வியாபாரம் செய்ய முடியாத நிலையில் F.S.A.-யில் இணைந்ததாக கூறினான். டமஸ்கஸ்ஸிற்கு தனது தந்தை பாட்டன் கூட சென்றது கிடையாது என்றான். ஆனால் தான் டமஸ்கஸ்ஸை கைப்பற்றப்போவதாக கர்வமாக கூறினான். இஸ்லாமிய சட்டங்களை பற்றி பேச்சு வந்த போது அவன் சிரித்தான். ஷியாக்களை கொல்வதுதான் இஸ்லாம் என்று அவனிற்கு அவனது பயிற்ச்சியின் போது கற்றுக்கொடுக்கப்பட்டதாக அவன் கூறினான். அதை அவன் சரியெனவும் நம்பினான். நிறைய ஷியாக்களை கொன்றால் நிறைய டொலர் கிடைக்கும் என்பதே அவன் கனவு. அதுதான் அவனது சண்டையிடுதலின் உயரிய நோக்கமும் கூட.

         முஸ்லிமின் இரத்தம் தொட்டு ரஷ்ய கலஷ்னிகோவ்களினால் அமெரிக்கா சிரியாவின் இரத்த சரிதம் எழுதுகிறது. அமெரிக்க எழுதும் அந்த ரத்த சரிதத்திற்கான மைய முடியாமல் இருக்க மீண்டும் மீண்டும் முஸ்லிம்களை கொலை செய்து அந்த மை குவளையை நிறைக்க F.S.A.. தயாராக இருக்கிறது. இது தான் நான் சிரிய போராட்டத்தின் கண்ட உண்மை. என்னால் கொல்லப்படுபவர்களின் இரத்தம், என்னை கொல்பவர்களின் இரத்தம் என எல்லாவற்றாலும் அமெரிக்க மத்திய கிழக்கின் சரிதத்தை எழுதும். தெளிவாக எல்லாமே புரிந்து போயிற்று.

       இது ஹோம்ஸின் பண்ணை புரட்ச்சியின் கதை. இது அங்குள்ள ஒரு தொழிளாளியின் கதை. எனது மரணத்தின் முன் இதனை நான் எழுதி முடித்து விட்டேன். எனது நண்பனிற்கு அனுப்பி வைக்கவுள்ளேன். உயிருடன் இருந்தால் என் குழந்தைகளிடம் அவர்கள் தந்தையின் துரோக சரித்திரத்தை வாசிக்கும்படி....

                                                                                                      யெஹ்யா ரம்ஸி...









    

No comments:

Post a Comment