Thursday, January 30, 2014

ஜனநாயக நிழலில் முஸ்லிம்!!?? (காலத்தின் தேவை கருதிய மீள் பதிவு .)

                                                                                     இஸ்லாம் மனித வாழ்வின் அனைத்து செயற்பாடுகளுக்கும் தெளிவானதும் உறுதியானதுமான வழிகாட்டலை வழங்கியுள்ளது .என்பது முஸ்லீம்களாகிய எமது அசைக்கமுடியாத(அகீதா ) நம்பிக்கையாகும் . அந்த வகையில் தான் இஸ்லாத்தின் அகீதா விற்கும் அது காட்டிநிற்கும் நடைமுறை வாழ்விற்கும் மாற்றமாக சிந்திப்பது,செயற்படுவது (ஹராம் )முற்றாகவே தடைசெய்யப்பட்டுள்ளது .


                                     இதன் அடிப்படையில்தான் ' குப்ர், சிர்க்,ரித்தத் .பித்அத்,என்ற பதங்களின் பயன்பாடும் பிரயோகமும் இஸ்லாமிய 'ஷரீஆவின் ' அளவுகோலாக  குர்ஆன்,சுன்னாவால் வரையறை செய்யப்பட்டுள்ளது . ஆனால் தெளிவாக ஆராயாத காரணத்தாலும்  எமது  பொடுபோக்கின்  காரணமாகவும் நரகப் படுகுழிக்கு எம்மை ஆரத்தழுவி அழைத்துச்செல்லும் மிகப்பயங்கரமான ஒரு குப்ரின் நிழலில் எம்மில் அதிகமானோர் குளிர்காய்ந்து கொண்டிருக்கின்றனர்  என்றால் அது மிகையாகாது  அதுதான் "ஜனநாயகம்"  (Democracy ).

   மக்களால் , மக்களுக்கு ,மக்களுக்காக எனும் பசப்பு வார்த்தைகளின் பின்னால் உள்ள போளித்தன்மையும், பயங்கரமும் உணரப்படாது சர்வ சாதாரணமாக முஸ்லிம் உலகத்தை அதன் கீழ் அணி திரட்ட முயல்வது சில இஸ்லாமிய அறிஞ்சர்களும் ,இஸ்லாமிய இயக்கங்களும் எனும்போது...... 'பிரச்சாரகர்கள் நரகத்தின் வாயில்களில் இருந்து அழைப்பு விடுவார்கள் யார் அந்த அழைப்பை ஏற்பார்களோ அவர்கள் நரகில் தூக்கி வீசப்படுவார்கள் '....என்ற'ஸஹிஹ் புஹாரியில்  (7084 )' வரக்கூடிய ஒரு நீண்ட நபிமொழியின் முன்னறிவிப்பு தான் எம்முன் வருகின்றது !!

    ஜனநாயகம் என்பது மனிதர்கள் மனிதர்களை அடிமைப்பட்டு வாழத்தூண்டும் கிரேக்கர்களின் ஆட்சி முறையாகும் உண்மையில் இதன் தோற்றம் தெளிவான ஓர் ஏமாற்றாகும் ; பண்டைய கிரேக்க ஆளும் வர்க்கம் தமது குடிமக்களை திருப்திப்படுத்தவும் தமது அதிகாரத்தை தொடர்ந்து நிலைநாட்டவும் மேற்கொண்ட ஓர் தந்திரமாகும் எனும் விடையம் ஒருபுறமிருக்க இந்த கோட்பாட்டின் பிரதான அம்சமே மனிதர்களே தமது வாழ்வின் சட்டங்களை இயற்றிக்கொள்ளலாம் என்பதோடு பெரும்பான்மையின் முடிவுதான் இறுதி தீர்வாகவும் அமைந்துவிடும் . இது அல்லாஹ்(சுபு) வின் சட்டமியற்றும் அதிகாரம் எனும் விடயத்தோடு மோதி அல்லாஹ் (சுபு ) வை நேரடியாகவே சவாளுக்களைக்கின்றது !!!! இதுவரை காலமும் சிலையை இணைவைப்பது 'சிர்க்' எனத்தெளிவாக கூறினோம் .ஆனால் இந்த சிந்தனை இணைவைப்பை ஏன் 'சிர்க்காக ' இனம்காணத்தவரினோம் !(அதாவது வஹியின் வழி காட்டளுக்கு நிகராக மனித வழிகாட்டல் !!)

       ஆட்சி  ஆளர்களை தேர்ந்த்தேடுக்கும் உரிமை ,தட்டிக் கேட்கும் உரிமை ,போன்ற சில பண்புகளை அது சுமந்திருப்பதால் அது சத்தியமாகிவிடாது!! அதன் தோற்றம் ,நோக்கம் என்பன இஸ்லாத்தின் அரசியலான மக்களுக்கு நன்மை செய்தல் என்ற விடையத்தை அடிப்படையாககொண்டதுமல்ல .மாறாக 'குப்ரிய'ஆளும் வர்க்கத்தின் ஒரு எமாற்றுக்கருவி ; அதை இஸ்லாத்திற்கு எடுக்கும் தேவை ஏன்?

     ஆன்மீக வாழ்வையும் ,உலக வாழ்வையும் பிரிப்பது ! எனும் அடிப்படையில் கிறிஸ்தவ உலகம் இந்த ஜனநாயகத்தை தனது கட்டாயத்தேவையாக பண்டைய கிரேக்கரின் பின் மத்திய ஐரோப்பாவின் மதகுரு சர்வாதிகாரத்தை எதிர்க்க பயன்படுத்தி கடவுளுக்குரியதை கடவுளுக்கும் ,அரசருக்குறியதை அரசருக்கும். எனும் விதியின் கீழ் மதச்சார்பின்மை கோட்பாட்டை நோக்கியதாக திசை மாற்றி ஜனநாயகத்தின் நவீன பயண்பாடு ஆரம்பிக்கின்றது என்பதுதான் வரலாறு.முஸ்லிம் சமூகம் இதன்பக்கம் வழிகாட்டப்படும் நோக்கத்தை சரியாக புரிந்துகொள்ள வேண்டும் . இஸ்லாத்த்தினில் பிரத்தியோகமானதும் நிலையானதுமான ஒரு அரசியல் வழிகாட்டல் இல்லையா ?!! 'வஹி' இந்தவிடையத்தில் குறைபாடு செய்துவிட்டதா ?!!அல்லாஹ் (சுபு ) எம்மை பாதுகாக்க வேண்டும் .

அல்லாஹ் வெளிப்படுத்தியதை கொண்டு எவர் தீர்ப்பு செய்யவில்லையோ அவர்கள் நிராகரிப்பாளர்கள் ! (TMQ 5:44)


அல்லாஹ் வெளிப்படுத்தியதை கொண்டு எவர் தீர்ப்பு செய்யவில்லையோ அவர்கள் அநியாயக்காரர்கள் ! (TMQ 5:45)


அல்லாஹ் வெளிப்படுத்தியதை கொண்டு எவர் தீர்ப்பு செய்யவில்லையோ அவர்கள் பாவிகள் ! (TMQ 5:47)


(நபியே !)"நிச்சயமாக அல்லாஹ்விற்கே வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சிஉரித்தானதென்பதை நீர் அறியவில்லையா? ... (TMQ 5:40)


     போன்ற அல்குர் ஆன் வசனங்களும் இன்னும் பல ஏராளமான அல்குர் ஆன் வசனங்களும் தெளிவாக இருக்க முஸ்லிம்' உம்மாவை ' தவறான ஒரு படு பாவத்தை நோக்கி இந்த ஜனநாயகம் இட்டுச்செல்கின்றது என்பது ஒரு வெளிப்படையுண்மை.இப்போது அதன் பக்கம் அழைக்கிறார்கள் நம் மூத்த தாயிகள் !!!

   இதோ உதாரணம் துருக்கி ,எகிப்து ,பாகிஸ்தான் ,போன்ற முஸ்லிம் நிலங்களில் கூட இஸ்லாமிய 'ஷரியாவை ' அமுல் படுத்த 51% வாக்குகளை எதிர் பார்த்து நிற்கின்றது !!ஒரு முஸ்லிமின் முன் இஸ்லாமிய 'ஷரியா' வும் ஒரு தெரிவு !!!??? அவ்வளவுதான். இத்தகு எண்ணமே அகீதாவோடு மோதவில்லையா !?

   இந்த ஜனநாயகம் ஒரு மிகப்பெரிய தீமை என்பதை உணர்த்த இதை விடவேறு ஆதாரங்கள் வேண்டுமா??இந்த ஜனநாயகத்தை பயன்படுத்தி இஸ்லாத்தை மறுமலர்ச்சி அடையவைக்கமுடியும் எனும் வாதமே நகைப்புக்கிடமானது ! ஏனெனில்  இதனோடு இணைவு என்பதே முதலாளித்துவத்தை தலுவச்சொல்லும் 'கலிமா ' தான் ஆகும் .

  ஏனெனில் அது தனக்கென பிரத்தியோகமான ஓர் அரசியல் ,பொருளாதார, சமூகவியல் வழிமுறைகளை கொண்டது . அதனூடாக பயணிக்க நிணைப்பவர்களுக்கு தனது சிந்தனைகளோடும் , வழிமுறைகளோடும்  முரண்படாத வரை ஒரு செயல் சுதந்திரத்தை தாராளமாக அள்ளிவழங்கும் .அமெரிக்காவின் வாசிங்க்டன் முதல் இஸ்ரேலின் டெல்அவிவ்  வரை இதில் தடையே இருக்காது !  

                 அவர்கள் தனிமனித சுதந்திரமாக கருதுமிடங்களில் இஸ்லாம் தனது சட்டங்களை சொல்லவரும்போதுதான் ஆட்கள் தொகையே வாழ்வின் சட்டங்களையும் , அரசியலையும் ,அதிகாரத்தையும் தீர்மானிப்பதாக அது கூறும் !அதன் கொள்கை சார் சுயரூபத்தை கொடிய முகத்தோடு  புலப்படுத்தும்.

                               இன ,மத, குல, நிற ,வர்க்க, பிரிவுகளை மறைமுகமாகவோ ,வெளிப்படையாகவோ அங்கீகரித்து அது மனித உரிமையாகவும் ,தனி மனித சுதந்திரமாகவும் வரையறுக்கும் !தேச, தேசிய எல்லைகளை இயல்பாக்கி கீழ்த்தரமான எல்லை மோதல்களை தூண்டிவிடும் .இதுதான் ஜனநாயகத்தின் சுயரூபம் !!!! மேலே தந்த சுருக்கமான ஜனநாயகத்தின் விளைவுப்பொருட்கள் எந்த அடிப்படையில் இஸ்லாத்தோடு ஒத்துப்போகும் ! சற்று இது பற்றி சிந்திப்போமா? இந்த அசிங்கமான குட்டையில் இட ஒதுக்கீடு தேவையா !?


No comments:

Post a Comment