Friday, January 24, 2014

இதோ நியோ சலபிகள் ! முஸ்லிம்களே ஜாக்கிரதை !!


         முன்னோர்களான சஹாபாக்களின் பெயர் கூறி அராபிய மன்னரிசத்தை போசித்து பாதுகாப்பது ,தக்கவைப்பது இதுதான் நியோ சலபிசத்தின் உருவாக்கத்திற்கான உடனடி எண்ணக்கரு . அதன் திட்டவட்ட இலக்கு முதலாளித்துவ ஏகாதிபத்தியத்தின் மத்திய கிழக்கு பிராந்திய ஆதிக்கம் ,நலன் என்பதுவே ஆகும் .எனவே இதனடிப்படையில் இஸ்ரேலின் எதிர்காலத்தையும் பாதிப்பில்லாமல் பார்த்துக் கொள்வதும் உள்ளடங்கும் ! என்ன இஸ்லாத்தின் பெயரில் இஸ்ரேலின் பாதுகாப்பா !? என நீங்கள் கேட்கலாம் அதன் விடையை இஸ்லாமிய நிலங்களில்' காமப்' போட்டு அவர்களின் இஷ்டப்படி சுதந்திரமாக தமக்கென தனிச் சட்டம் அமைத்து ராஜாங்கம் செய்துவரும் அமெரிக்கப் படைகள் சொல்லும் .


          இவைகளை எல்லாம் இஸ்லாத்தின் பெயரில் சரியாக காட்டும்  இன்றைய கௌரவ எடுபிடி பந்தர் பின் சுல்தான் . அவர்தான் சவூதியின் ஆஸ்தான   ஒட்டர் படை தலைவர் . இத்தகு நிலைப்பாடுகளுக்கு அனுசரித்துப் போகும் முஸ்லீம்களை சில நிபந்தனைகளோடு விட்டு வைப்பது . ஒத்துப் போகாதவர்களை சிந்தனை ரீதியாகவும் ,கருத்தியல் ரீதியாகவும்  ஓரம் கட்டுவது ,இன்னும் சிலபோது இராணுவ ரீதியாக ஒழித்துக் கட்டுவது மற்றும் சர்வதேசம் எங்கும் இந்த நிலைப்பாட்டை தழுவிய 'தவ்வாவை' !! எடுத்துச் செல்வது ; அதற்கான வடிவம்தான் நியோ சலபிசம் .

         உசூல் முரண் பாடுகளைக் கூட ,அகீதா முரண்பாடு போல் காட்டி இஸ்லாத்தின்  அடிப்படையில் மிக முக்கிய விடயமான சகோதரத்துவத்தை சந்தி சிரிக்க வைக்கும் மார்க்கம் தந்த வரலாற்றின் பிறப்பிடம் இந்த நியோ சலபிசம் தான் என்றால் அது மிகையாகாது . உடன்பாடுகளுக்கு மத்தியிலும் முரண்பாட்டை தேடும் இவர்களது வாத விவாத ஆர்வ அழைப்பு கவர்ச்சியில், இவர்கள் பின்னால் இழுபட்டுச் சென்ற முஸ்லீம் உம்மத்தினர் இன்று அதற்கு உள்ளும் பலதாக பிரிந்து தனிப்பள்ளி கட்டி தனித்துவம் காட்டுவதுதான் இஸ்லாம் என்பதாக பிரிவினைக்கான நியாய நூதனம் தொடர்ந்தும்  பேனப்படுகிறது . அந்த வகையில் மன்னர் ,சியோனிச கூட்டின் எதிர்பார்ப்புகள் உலகளாவிய ரீதியில் சிறப்பாக நிறைவேறி வருகிறது எனலாம் .

           இவர்களை இனம் காண்பது முஸ்லீம் உலகில் மிகச் சுலபமானது . எவனாவது ஒருவன் 'மைய்யத்து ' வீட்டுக்கு சென்றால் நான்தான் மைய்யத்து !! எனவும் ,திருமண வீட்டுக்கு சென்றால் நான்தான் மாப்பிள்ளை !!என்பதாகவும் முரண்டு பிடித்து மார்க்க விளக்கம் கொடுத்து முஸ்லீம் உம்மத்தை தரக்குறைவாகவும் பேசுகிறானோ ,இஸ்லாமிய சர்வதேச பொதுத் தலைமை பற்றி தெளிவாக பேசிய இமாம்களையும் ,முஜ்தஹித் களையும் தரக்குறைவாக விமர்சிக்க முட்படுகிறானோ ,அதுவே நியோ சலபிச தாக்கத்தின்  பிரதான அறிகுறியாகும் .இறுதியாக இவர்கள் தாம் பிடித்த 'திரீ வீலருக்கு ' நான்கு சக்கரம் என கூறி எதிர் தரப்பை "உங்களுக்கு உலகமும் தெரியாது மார்க்கமும் தெரியாது " என மட்டம் தட்டிப் பேசுவது அதி முற்றிய நிலையாகும் .


       ரெடிமேட் பத்துவாக்களோடு நிகழ்கால குப்ரிய அரசியலை அனுசரித்து , பெரும்பாலும் அண்டி வாழ்ந்து இஸ்லாத்தை ஒரு மத வியாக்கியானமாக சொல்லாமல் சொல்லி எவரெல்லாம் குப்ரோடு உறவாடு ! முஸ்லிமை வசைபாடு ! முரண்பாட்டில் பிடிவாதம் எனும் 'பொலிசியோடு ' இஸ்லாமிய கிலாபத் எனும் தனித் தலைமை அரசியலை இப்போது தேவையில்லை என சொல்கிறார்களோ ,அவர்கள் விடயத்தில் சற்று எச்சரிக்கையாக இருங்கள் . இவர்கள் தான் பந்தர் பின் சுல்தானுக்கு சலாம் போட்டு குப்ரிய ஏகாதிபத்தியத்தை முஸ்லீம் உலகில் வளர்க்க உதவுபவர்கள் . இவர்கள் அறிந்து செய்தாலும் அறியாமல் செய்தாலும் அடையப்போவது இத்தகு தவறான இலக்கே தவிர வேறு இல்லை .

No comments:

Post a Comment