Thursday, January 23, 2014

இஸ்லாத்தின்படி வாழ்வின் விவகாரங்களை ஒழுங்குபடுத்தும் அரசு இருப்பது பர்ளு...!(ஒரு முகநூல் பதிவில் இருந்து ...)


(இஸ்லாத்தின் ஆட்சியும் சத்தியத்தின் பரவலும் .)

இஸ்லாம் என்பது அரசு, சமூகம் மற்றும் மனிதர்களின் வாழ்வியல் ஆகியவற்றை உள்ளடக்கிய சித்தாந்தம் என்பதால் ஆட்சிபுரிதல் என்பது அதன் பிரிக்கமுடியாத பகுதியாக உள்ளது.

ஆகவே அரசை நிர்ணயிப்பதன்வாயிலாக ஆட்சிபுரிதலை நிலைநிறுத்த வேண்டும் என்று இஸ்லாம் முஸ்லிம்களுக்குக் கட்டளையிட்டுள்ளது.

அல்லாஹ் அருளியவற்றைக் கொண்டு ஆட்சிபுரிதல் கட்டாயக் கடமை என்பதனை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு குர்ஆன் வசனங்கள் அருளப்பட்டுள்ளன.


அல்லாஹ் அவனது திருமறையில் இது குறித்து இவ்வாறு கூறுகிறான்.

"எனவே அல்லாஹ் அருளியவற்றைக் கொண்டு அவர்களிடையே தீர்ப்புச் செய்வீராக இன்னும் உம்மிடம் சத்தியம் வந்தபின்னர் அவர்களின் மனோஇச்சையைப் பின்பற்றாதிருப்பீராக." (அல்குர்ஆன் - 5: 48)

“இன்னும் அல்லாஹ் அருளியவற்றைக் கொண்டே அவர்களிடையே தீர்ப்புச் செய்வீராக மேலும் அவர்களுடைய மனோஇச்சையை பின்பற்றாதிருப்பீராக இன்னும் அல்லாஹ் உம்மீது இறக்கி அருளியவற்றில் சிலவற்றைவிட்டும் உம்மைத் திருப்பிவிடாதபடி அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பீராக.”
(அல்குர்ஆன் - 5: 49)

“இன்னும் எவர்கள் அல்லாஹ் அருளியவற்றைக் கொண்டு தீர்ப்புச் செய்யவில்லையோ அவர்கள் காபிர்களாவார்கள்.” (அல்குர்ஆன் - 5: 44)

“இன்னும் எவர்கள் அல்லாஹ் அருளியவற்றைக் கொண்டு தீர்ப்புச் செய்யவில்லையோ அவர்கள் அநியாயக்காரர்களாவார்கள். ” (அல்குர்ஆன் - 5: 45)

“இன்னும் எவர்கள் அல்லாஹ் அருளியவற்றைக் கொண்டு தீர்ப்புச் செய்யவில்லையோ அவர்கள் பாவிகளாவார்கள். ” (அல்குர்ஆன் - 5: 47)

“உமது இறைவன்மீது ஆணையாக, தங்களிடையே எழும் சர்ச்சைகளில் உம்மை நீதிபதியாக ஏற்று பின்னர் நீர் தீர்ப்புச் செய்தவற்றில் எத்தகைய அதிதிருப்பதியும் தமது உள்ளங்களில் கொள்ளாமல் முற்றிலும் ஏற்றுக்கொள்ளாதவரை அவர்கள் உண்மையாக ஈமான் கொண்டவர்களாக மாட்டார்கள்”
(அல்குர்ஆன் - 4: 65)

“ஈமான் கொண்டவர்களே அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கீழ்ப்படியுங்கள் இன்னும் உங்களில் அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்ப்படியுங்கள்” (அல்குர்ஆன் - 4: 59)

“மனிதர்களிடையே நீங்கள் தீர்ப்பு வழங்கினால் நீதமாகவே தீர்ப்புவழங்குங்கள்” (அல்குர்ஆன் - 4: 58)

ஆனால் துரதிஸ்டவசமாக இன்று இஸ்லாம் பகுதியாக சில முஸ்லிம் நாடுகளில் ஆளப்படுகிறது. இதனால் முஸ்லிம் உம்மத்திற்கு எதிரான குப்பார்களது சதித்திட்டம் மற்றும் படையெடுப்பு, இனச்சுத்திகரிப்பு போன்றவற்றில் இருந்து உம்மத்தை பாதுகாக்க உம்மத்தினது கண்ணியம் பேணப்பட முடியாத நிலையில் முஸ்லிம் உம்மத் திக்குமுக்காடி இருப்பதனைக் காணலாம்.

இவற்றில் இருந்து மீள நபிவழியில் மீள இஸ்லாமிய அரசு ஒரே தலைமையின் கீழ் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். அவர் மூலமே முஸ்லிம் உம்மத்தின் கண்ணியம் காக்கப்படும்! இஸ்லாம் சகல துறைகளிலும் முழுமையாக அமுலாக்கப்படும். குர்ஆன சுன்னா முற்று முழுக்க பின்பற்றப்படும்!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
“இமாம் ஒரு கேடயமாவார். அவருக்கு பின்னால் நின்று மக்கள் போர் புரிவார்கள். அவர் மூலமாக பாதுகாப்புத் தேடிக்கொள்வார்கள்.”
(அபூஹூரைரா (ரலி), முஸ்லிம்)

முஸ்லிம்கள் மீது காஃபிர்கள் ஆளுமை செலுத்துவதை இஸ்லாம் முற்றாக மறுக்கிறது. அல்லாஹ் கூறுகிறான்:
முஃமின்களின் மீது அதிகாரம் செலுத்துவதற்கு எந்த வழியையும் அல்லாஹ் இறைநிராகரிப்பாளர்களுக்கு வழங்க மாட்டான்.
(அந்நிஸா:141)

விசுவாசிகள், விசுவாசிகளையன்றி இறைநிராகரிப்போரை தமது பாதகாவலர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
(ஆல இம்ரான்: 28)

இஸ்லாமிய ஆட்சி என்பது....? 

1.வாழ்வில் எழும் அனைத்துப் பிரச்சினைகளுக்குமான தீர்வை குர்ஆன் சுன்னாவில் இருந்து எடுத்து மனிதனது வாழ்வியல் விவகாரங்களை ஒழுங்குபடுத்தும் ஆட்சிமுறைதான் இஸ்லாம் கூறும் ஆட்சிமுறையாகும்!

2.இஸ்லாம் ஆட்சிசெய்யப்படுவதென்பது குறித்த தேசத்திற்குள் மட்டுப்படுத்தப்பட்டதாக அமைய முடியாது.

3.அது தாவாமூலமும் ஜிஹாத் மூலமும் அவ்வரசினால் முன்னெடுக்ப்படவேண்டும்.

4.அத்துடன் ஒரு முஸ்லிமுக்கு பிரச்சினை என்றால் அந்த ஆட்சியாளன் அது குறித்து தீவிரமான நடவடிக்கை எடுத்து குறித்த இஸ்லாத்தின் எதிரியுடன் கடும்போக்கை கையாளவேண்டும்.

5.மக்கள் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சியாளனை பதவிநீக்கம் செய்யும் வழிமுறையாக காலவரையறை என்பது கிடையாது.

6. நான்கு வருடத்திற்கு ஒருமுறை விரும்பியவரை தெரிவுசெய்து ஆட்சிசெய்வது என்பது எமது வழிமுறை இல்லை. ஆட்சித் தலைவராக ஒருவர் நியமிக்கப்பட்டால் அவரிடம் தெளிவான குப்ர் வெளிப்படும் வரை அந்த ஆட்சியாளரை பதவி நீக்கம் செய்ய முடியாது.

7. அவ்வாட்சியாளர் இன்று முஸ்லிம்கள் கருவறுக்கப்படும் போது கண்டுகொல்லாமல் மேற்கோடும் அமெரிக்கா போன்ற ஏகாதிபத்தியவாதிகளோடும் கைகுழுக்கியபடி முஸ்லிம்களது விவகாரங்களை கவனிக்க முடியாது.

8. அவ்வாட்சியாளர் எதிரிகளுடன் உரிய முறைப்படி நடந்து உம்மத்தை மீட்கவேண்டும்.

9. இவை யாவற்றையும் இந்த பல்கட்சி முறைகளுடன் கூடிய எதிர்கட்சி ஆளும்கட்சி அமைப்பினால் வடிவமைக்கப்பட்ட மனிதன் சட்டத்ததை ஆக்கும் சட்டசபை வடிவமைப்புக்குள் இருந்து கொண்டு நிறைவேற்ற முடியாது. நிறைய விட்டுக் கொடுப்பபுடன் பகுதியாக தீனுல் இஸ்லாத்தை அமுல்படுத்த முடியுமே தவிர முழுமையாக இஸ்லாத்தை ஆளுகை நிலைக்குள் வைத்துக்கொள்ள முடியாது.

10. இஸ்லாம் வாழ்வின் அனைத்து துறைகளிலும் அமுலாக்கப்படத் தேவையான அரசு கிலாபா அரசு அதுவாகும். இவ்வரசு முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளில் நபி வழியில் மீள் உருவாக்கம் செய்யப்பட வேண்டும். அதுவே இன்று முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் அனைத்து விதமான சவால்களுக்கும் முகம் கொடுக்கும் அரசாகும். இவ்வரசு முஸ்லிம் நாட்டு இராணுவ நுஸ்றாவுடன் நிறுவப்படுவது நபி வழியாகும்.

அவ்வாறு நிறுவப்படும் இஸ்லாமிய அரசானது..

1.இன்றுள்ள முஸ்லிம் நாடுகளுக்கு இடையிலான தேசிய எல்லைகளை களையச் செய்யும்.
2.முஸ்லிம்களை உம்மத் எனும் சகோதரச் சிந்தனையால் இணைக்கும்.
3.பொது எதிரியை எதிர்கொள்ளும்.
4.தீனுல் இஸ்லாத்தை முழுமையான தனது அரசின் எல்லைக்குள் அமுல்படுத்தும்.
5.வெளிநாட்டு கொள்கை மூலமும் ஜிஹாத் மூலம் அவ்வரசு தீனுல் இஸ்லாத்தை உலகமுழுவதிலும் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கும்.

எனவே, இன்று முஸ்லிம் உம்மத் இழந்துள்ள ஒரே தலைமை இல்லாததால் குப்பார்கள் இன்றுள்ள முஸ்லிம் ஆட்சியாளர்களுடன் சேர்ந்து உம்மத்தை மேலும் பலமிழக்கச் செய்வதுடன் இஸ்லத்திற்கும் முஸ்லிம்களுக்கும் கண்ணியம் இல்லாமல் செய்துவிட்டார்கள். இந்த நிலை மீள உருவாகாத வரை இஸ்லாத்தின் எதிரிகள் எம்மை கூறுபோட்டுக்கொண்டு மேலும் பேரழிவையே ஏற்படுத்துவார்கள். இவ்வாறான நிலையில் இருந்து மீள இஸ்லாத்தில் ஒரே தலைமைதான் இருக்க வேண்டும்!

ஒரு முஸ்லிம் ஆட்சியாளர் இஸ்லாத்தைகொண்டு ஆட்சிசெய்யும் போது அவருக்கு குர்ஆன் இவ்வாறு வழிகாட்டுகிறது.

“உம் இறைவன் மேல் சத்தியமாக, அவர்கள் தங்களிடையே எழுந்த சச்சரவுகளில் உம்மை நீதிபதியாக ஏற்றுப் பின்னர் நீர் திர்ப்பு செய்தது பற்றி எத்தகைய அதிருப்தியையும் தம் மனங்களில் கொள்ளாத வரையில் அவர்கள் நம்மை ஈமான் கொண்டவர்கள் ஆகமாட்டதர்கள்” (அல்குர்ஆன் 4:65)


“மேலும் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றி கட்டளையிட்டு விட்டால் அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்ராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை. ஆகவே அல்லாஹ்விற்கும் அவனுடைய து}தருக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்”
(அல்குர்ஆன் 33:36)

“நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள் இன்னும் (அல்லாஹ்வின்)தூதருக்கும் உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்ப்படியுங்கள். உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும் இறதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் அதை அல்லாஹ்விடமும் (அவன்) தூதரிடமும் ஒப்படைத்து விடுங்கள் இதுதான்(உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும்”(அல்குர்ஆன் 4:59)

இஸ்லாத்தை அமுல்படுத்துவதற்கான அதிகாரம் பெற்ற ஒரு ஆட்சியாளர் ஆட்சி செய்யத் தவறும் குறித்து அவரைப்பார்த்து குர்ஆன் இவ்வாறு கூறுகிறது.

“எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கட்டளைப்) படி தீர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக அவர்கள் நிராகரிப்பவர்களாவார்கள்” (அல்குர்ஆன் 5:44)

“எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு யார் தீர்ப்பு வழங்கவில்லையோ அவர்கள் தான் அநியாயக்காரர்களாவார்கள்” (அல்குர்ஆன் 5:45)

எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு யார் தீர்ப்பு வழங்கவில்லையோ அவர்கள் தான் பாவிகளாவார்கள்
(அல்குர்ஆன் 5:47)

அதேவேளை முஸ்லிம் உம்மத்திற்கு ஒரு கலீபா இருக்க வேண்டும். அவர்மூலமே முஸ்லிம்களது பாதுகாப்பும் கண்ணியமும் உறுதிசெய்யப்படவேண்டும் என்று இஸ்லாம் எம்மைப் பணிக்கிறது. அத்துடன் அவறுக்கு நாம் கீழ்படிந்து நடக்கும்படியும் கட்டளையிடுகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
“இமாம் ஒரு கேடயமாவார். அவருக்கு பின்னால் நின்று மக்கள் போர் புரிவார்கள். அவர் மூலமாக பாதுகாப்புத் தேடிக்கொள்வார்கள்.”
(அபூஹூரைரா (ரலி), முஸ்லிம்)

அபூஹாஸிம் அறிவித்து முஸ்லிமில் பதிவு செய்யப்பட்ட ஹதீஸ்:
அபூஹூரைராவுடன் நான் 5 வருடம் பிரயாணம் செய்துள்ளேன். அப்போது அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக அறிவித்ததை செவியுற்றேன்.
“பனீ இஸ்ராயீல் மக்களை நபிமார்கள் ஆட்சிசெய்தார்கள். ஒரு நபி மரணமடைந்த பொழுது மற்றொரு நபி அவருடைய இடத்திற்கு அனுப்பப்பட்டார். நிச்சயமாக எனக்குப் பின் நபிமார்கள் வரமாட்டார்கள். ஆனால் கலீபாக்கள் வருவார்கள். அவர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள். (அல்லாஹ்வின் தூதர் அவர்களே அது குறித்து) எனக்கு என்ன கட்டளையிடுகிறீர்கள்? என்று ஸஹாபாக்கள் வினவினார்கள். “அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒன்றன் பின் ஒன்றாக பைஆச் செய்யுங்கள். அவர்களின் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு நடந்துகொள்ளுங்கள். நிச்சயம் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது (ஆட்சிப்பொறுப்பு) பற்றி அல்லாஹ் அல்லாஹ் அவர்களிடம் விசாரித்துக் கொள்வான்' என்று நபி (ஸல்) கூறினார்கள்.”

இப்னு அப்பாஸ் அறிவித்து முஸ்லிமில் பதிவுசெய்யப்பட் ஹதீஸ்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
“எவரேனும் தனது அமீரிடம் விரும்பாதவற்றைக் காண்பாரானால் அப்போது அவர் பொறுமையாக இருக்கட்டும். ஏனெனில் அறிந்து கொள்ளுங்கள்! முஸ்லிமான மனிதர்களில் எவரேனும் ஒருவர் சுல்தானிடம் இருந்து ஒரு கையளவு விலகிய நிலையில் மரணமடைந்தாலும் நிச்சயமாக அவர் ஜாஹிலிய்ய மரணமடைந்தவராவார்.”

இவ்வாறான கிலாபா அரசின் முக்கியத்துவம் குறித்து முக்கியமாக இஸ்லாமிய அறிஞர்களது கருத்துக்கள் கவனத்திற்கொள்ளப்பட வேண்டிய அம்சமாகும்.

இமாம் அஹ்மது இப்னு ஹம்பல் (ரஹ்)அவர்கள் தனது அல் மவ்சூஆ அல் அக்தியா என்ற நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்!
'இமாம் (கலீபா) நியமிக்கப்படாவிட்டால் மக்களுடைய விவகாரங்களில் பித்னா ஏற்பட்டுவிடும்.'

இமாம் நஸஃபி (ரஹ்) அவர்கள் தனது அல் அகீதா அல் நஸஃபியா எனும் நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்!
'முஸ்லிம்களுக்கு ஓர் இமாம் கட்டாயம் இருக்க வேண்டும் அவர் சட்டங்களை நடைமுறைப்படுத்துவார் மேலும் குற்றவியல் சட்டங்களை நிலைநாட்டுவார்'

இமாம் குர்துபி (ரஹ்) அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்:
'நிச்சயமாக கிலாபா என்பது மார்க்கத்தின் தூண்களில் ஒரு தூணாகும் அதைக்கொண்டுதான் முஸ்லிம்களின் ஆற்றல் உறுதிபெறும்'

இப்னு தைமியா தனது அஸ்ஸியாஸா அஷ் ஷர்இய்யா எனும் நூலில் இவ்வாறு கூறுகிறார்கள்.
'மக்களின் விவகாரங்களில் பொறுப்பேற்கும் ஒரு தலைமைத்துவம் அமைவது கடமைகளில் மிகவும் தலையாய கடமையாகும். இல்லாவிடில் தீன் என்பது நிலைநாட்டப்பட முடியாத ஒன்றாகிவிடும். .....'



No comments:

Post a Comment