Monday, January 6, 2014

உரிமைகள் மற்றும் சுதந்திரம் பற்றிய இஸ்லாத்தின் அபிப்பிராயம்!(ஒரு முகநூல் பதிவில் இருந்து ...)


  மனித உரிமைகள் நிச்சயம் பாதுகாக்கப்படவேண்டும் என்பது முதலாளித்துவ சித்தாந்தம் வலியுறுத்தும் சிந்தனைகளில் ஒன்றாகும்! அவை குறித்த இஸ்லாமிய பார்வைகுறிப்பாக முஸ்லீம்களுக்கு 
  மிகவும் அவசியமாகும். 
முதலாளித்துவம் வலியுறுத்தும் கீழ்வரும்  நான்கு சுதந்திரங்களும் இஸ்லாத்திற்கும் அதன் சட்டங்களுக்கும் முறண்பட்டவையாகும்!
 

                                                   
நம்பிக்கைச்சுதந்திரம்:
நம்பிக்கை என்ற விஷயத்தில் முஸ்லிம்கள் சுதந்திரமானவர்கள் அல்ல ஏனெனில் ஒருவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறும் பட்சத்தில் அவர் தனது முடிவை மாற்றிக்கொண்டு இஸ்லாத்திற்கு திரும்புமாறு கேட்கப்படுவார். மறுக்கும் பட்சத்தில் அவர் மரண தண்டனை அடைய நேரிடும்!

கருத்துச் சுதந்திரம்:
ஒரு முஸ்லிமுக்கு இஸ்லாத்திற்கு புறம்பாக பேசுவதற்கோ அல்லது கருத்துக் கூறுவதற்கோ சுதந்திரம் கிடையாது. இஸ்லாத்தினுடைய கருத்தாகத்தான் அவருடைய கருத்து இருக்கமுடியும். இஸ்லாத்தின் அபிப்பிராயத்திற்கு புறம்பான அபிப்பிராயம் கொள்வதற்கு அவருக்கு அனுமதி இல்லை.

சொத்துரிமைச்சுதந்திரம்:
சரிஆவுக்கு முறனான வழியில் ஒரு முஸ்லிம் சொத்துச்சேர்க்கும் உரிமை கிடையாது. ஹறாம் ஹலால் அவர் பார்க்கவேண்டும். 

வட்டி வரவு செலவுகள் மூலமாகவோ அல்லது ஏகபோக வர்த்தகம், பதுக்கல் மதுபான விற்பனை, பன்றி வளர்ப்பு போன்ற தடுக்கப்பட்ட செயல்கள் மூலமாக அவர் சொத்து சேர்க்க முடியாது.

தனிமனித சுதந்திரம்:
இஸ்லாத்தில் தனிமனித சுதந்திரம் கிடையாது. ஏனெனில் ஒரு முஸ்லிம் தனது சொந்த விவகாகரங்களில் சுதந்திரம் பெற்றவனாக இல்லை. மாறாக இஸ்லாத்தின் இறை சட்டங்களால் அவன் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறான். மேற்கத்தைய முதலாளித்துவம் கூறும் தனி மனித சுதந்திரம் இஸ்லாத்தில் அறவே கிடையாது. அது இஸ்லாத்திற்கும் அதன் சட்டங்களுக்கும் முற்றாக முறண்பட்டது.

தனிமனித சுதந்திரம் என்ற பெயரில்….
அவன் பர்ளான தொழுகையை விட முடியாது. பர்ளான நோன்பை விடமுடியாது, மதுபானம் அருந்த முடியாது, விபச்சாரம் செய்ய முடியாது, ஒரு பெண் தான் விரும்பியபடி தன் அழகை பெருமைக்காக அன்னிய ஆடவர்களுக்கு வெளிக்காட்டும் விதத்தில் உடுக்க முடியாது, பிறருடைய சொத்துக்களை அபகரிக்க முடியாது, பிறருடைய மானத்தை பங்கப்படுத்த முடியாது, போன்ற செயல்களை தனிமனித சுதந்திரம் என்று செய்ய இஸ்லாத்தில் அனுமதி இல்லை. அது பாவம். அதற்கு தண்டணை உண்டு.

No comments:

Post a Comment