Friday, January 31, 2014

அமெரிக்க சவூதி கூட்டுச் சதியில் ஒரு தூய சலபி எவ்வாறு ஏமாற்றப் படுகிறார் !! (இறுதிப் பகுதி )


         மேற்கின் சிலுவை இராணுவக் கூட்டணி ஈராக் குவைத்தை ஆக்கிரமித்ததை காரணம் காட்டி அராபிய முஸ்லீம் பெருநிலத்தில் தனது பூட்சுகளை மீண்டும் நேரடியாக 1990இல்  பதித்தது .இது தட்செயலாகவோ எதேசையாகவோ நிகழ்ந்த ஒன்றல்ல .அதற்குப் பின்னால் முதலாளித்துவ ஏகாதிபத்தியத்தின் ஆதிக்க அரசியல் பக்குவமாக திட்டமிடப்பட்டிருந்தது . அதற்கு அதன் சர்வதேச சட்டங்கள்,ஒப்பந்தங்கள்  என்ற பொறிமுறை நன்றாகவே பயன்பட்டது .

        அரபு தேசியவாதத்தை அடிப்படையாக வைத்து பிரிந்து இருந்த முஸ்லீம் உலகு ,அதன் வளத்தையும் பலத்தையும் தனக்குள் மோதிச் சிதைக்கும் நாசகாரிகளாக மாறி இருந்தனர் .இந்த ஒரே பிரதான காரணமே கொடிய குப்ரிய எதிரிகள்  நண்பனாக முஸ்லீம் உலகில் பாசறை அமைக்க காரணமாகியது . கம்யூனிசம் முதலாளித்துவம் எனும் ஆதிக்கப் பிசாசு ஏதோ அலாவுதீனிடம் அடைக்கலம் புகுந்த அற்புத விளக்கின் பூதம் போல முஸ்லீம் உலகத்தை ஆட்டிப்படைத்தது .பனிப்போரின் வடிவம் பாத் சோசலிசமாக ஈராக்கை பிடித்திருந்தது . இந்த தாகூத்திய அடிபணிவில் இருந்தே சதாம் ஹுசைன் ஈராக்கின் ஆட்சியை கொண்டு நடாத்தினார் .

           பெற்றோலியம் அகழ்வு தொடர்பான ஒரு சர்ச்சையே குவைத் ஆக்கிரமிப்புக்கு உடனடிக் காரணமாகியது . அதே பெற்றோலியமே சிலுவைச் சாத்தான்களை உதவி என்ற பெயரில் இழுத்தும் வந்தது . இந்த ஒன்றே போதுமே விடயங்களை ஊகிக்க ! சிந்தனை வீழ்ச்சியில் இருந்து உம்மாவின் வளமும் ஆதிக்கமும் குப்பாரின் கையில் செல்வதில் இருந்தே மத்திய கிழக்கின் அரசியல் தீர்மானிக்கப்பட்டது ,தீர்மானிக்கப் படுகிறது . அதற்கு முட்டுக் கொடுப்பதில் முதலிடம் மன்னரிசம் . அதை டிப்லோமடிக் வடிவில் கொடுக்க இஸ்லாத்தை பயன்படுத்துவது ஒரு மெகானிசம் . இந்த மெகானிசத்தை வஹியின் பெயரில் இயக்க  தவறான பயன்படுத்தல் மூலமும்  , விசுவாச நியமனங்கள் மூலமும் செய்வதற்கு  சலபிகள் கொண்டுவரப்பட்டார்கள் .

                        எது எப்படியோ தாக்கவரும் பாத் சோஷலிச சுமந்த ஒரு பிசாசுப் படை என்ற பிரமாண்ட காட்சியை நம்பியே சேக் அப்துல்லாஹ் பின் பாஸ் (ரஹ் ) திருப்பித் தாக்கவும் ,அதை துரத்தி அடிக்கவும் பத்துவா கொடுத்தார் . அதற்கு படைபலம் போதாது என்ற காரணத்தை நம்பியே சிலுவை இராணுவத்தின் உதவியையும் அனுமதித்தார் . ஆனால் 'பாலைவனச் சூறாவளி ' என்ற பெயரில் ஈராக்கை அமெரிக்க கூட்டுப்படை தாக்குவதட்கும் ,பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம் நிலங்களில் நிரந்தர 'டென்ட் ' அடிக்கவும் தான் குப்பார் வருகிறான் என அவருக்கு புரியவில்லை .சம்பவங்கள் யாவும் மிக வேகமாக நடந்தன ஏறத்தாள எல்லாம் தொடங்கப் பட்ட பின்னே கண் பார்வை தெரிந்த அவரது முதன்மை சலபி மாணவர்களுக்கே உண்மை புரிந்தது . 

          விபரம் அறிந்த ஷேக் பின் பாஸ் (ரஹ் ) அவர்கள் மிகுந்த கோபத்தோடு அவரது முதன்மை மாணவர்கள் சகிதம் மன்னர் பஹ்த் இன் மாளிகைக்கு வருகிறார் . அன்று அதற்கான விசேட அனுமதி அவருக்கு இருந்தது .அன்று கூறிய பிரகாரம் மன்னர் பஹ்த் நடக்கவில்லை என்பதையும் ,அவர் மன்னர் தரப்பினால் நயவஞ்சகமாக ஏமாற்றப் பட்டதாகவும் சூளுரைக்கிறார் . தன்னிடம் இருந்த ஒப்பந்தப் பிரதியை கிழித்து வீசுகிறார் . தனக்கும் நடக்கும் விடயங்களுக்கும் சம்பந்தம் இல்லை என கூறிவிட்டு மன்னர் மாளிகையை விட்டு வெளியேறுகிறார் .


         'இட்ஸ் டூ லேட் ' என ஜார்ஜ் எச். டபிள்யு. புஷ் அமெரிக்க வெள்ளை மாளிகையில் இருந்து சொன்னது சேக் பின் பாஸ் (ரஹ் )அவர்களுக்கு கேட்க வாய்ப்பில்லை .அதே நேரம் கோரசாக சிரித்துக் கொண்டு மன்னர் பஹ்த் அடுத்த ஆப்புக்கு தயார் ஆகிறார். சலபிசத்தில் இருந்து நியோ சலபிசத்தை பக்குவமாக பிரித்து  இனம் காட்டும் அற்புத விளக்கமாக அந்த அடாவடித் தனம் அமைந்தது .ஷேக் அப்துல்லாஹ் பின் பாஸ் (ரஹ் ) அவர்களின் முதவாக்களுக்கான தலமைப்பதவி பறிக்கப்படுகிறது . அவர்களது முதன்மை மாணவர்கள் நிர்ப்பந்த முற்றுகைக்கு ஆளாக்கப் படுகிறார்கள் . அதில் பலர் காரணம் இல்லாமல் காணாமல் போகிறார்கள்.சவூதியின் (குவாண்டநோமா ,அபூகரீப் போன்ற ஜித்தா ,ரியாத் ,தமாம்) பாதாளச் சிறைகளில் அடைக்கப் படுகிறார்கள் . இன்னும் சிலர் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள் . (அமெரிக்காவை விமர்சிப்பது இராஜ குற்றம் என்ற வடிவம் மறைக்கப்பட்டு மன்னரிசத்தை விமர்சிப்பது கவாரிஜ்களின் பண்பு , சியாக்களின் சதி என்ற போர்வையும் போர்தப் படுகிறது .)


        இஸ்லாத்தையும் ,முஸ்லீம் உம்மத்தையும் புரிந்த தூய சலபிகள் ஓரம் கட்டப்பட எஞ்சப் போவது யார் !? வெள்ளைக் காக்கா மல்லாக்கா பறக்குது !!என மன்னரிசம் சொன்னால் அதன் வாயில் சுடச் சுட வடையும் இருக்கிறது என சொல்லத்தக்க முல்லா சலபிகள் முதவாக்களாக முடிசூட்டப்பட்டார்கள் !இந்த நியோ சலபிச செம்மல்கள் மட்டுமே விட்டுவைக்கப் பட்டார்கள் .சிலுவையில்ஊஞ்சல் ஆடும்  மன்னரிசத்தை ஹலால் ரேஞ்சில் காட்டிப்போகும் யாரையும் இந்த மன்னரிசம் விட்டுவைக்கும் .அப்படி அல்லாமல் இஸ்லாமிய அரசு கிலாபா கலீபா என யாராவது பேசினால் ,செயற்பட்டால் அதை தடுக்கும் ,தகர்க்கும் ,தவிடு பொடியாக்கும் . எனவே கிலாபத்து ஆபத்து என பேசும் சிந்தனைத் தரத்தின் மூலவேர் எது என்பதும் ,அதன் காரணமும் புரிகிறதா !?


        இஸ்லாமிய கிலாபத் எனும் ஒரே தலைமையின் கீழ் முஸ்லீம் உம்மா வருவதை தடுக்க உலகெங்கும் இந்த பின்னணி கொண்ட அஜெண்டாக்கள் வேலை செய்து கொண்டிருக்கின்றன . இவை தமக்குள் பற்பல கருத்து வேறுபாடுகளை காட்டி நின்றாலும் , கிலாபத் அரசியலை எதிர்க்க பொது முகம் காட்டுவார்கள் என்பதே நடப்பு உண்மையாகும் .

         இவர்கள் பின்னால் அணிவகுக்கும் முஸ்லீம்கள் பாடுதான் பரிதாபம் .இவர்களும் தங்களை அறியாமல் சிலுவைச் சித்தாந்திகளுக்கு முட்டுக் கொடுக்கிறார்கள் . ஆன்மீக ரீதியாக அவர்களை எதிர்க்கும் அகீதாவை பேசிவிட்டு ,அரசியல் அகீதாவில் குப்பாரோடு கூட்டுச் சேர்ந்து விடுகிறார்கள் .இப்படி நாம் சொன்னால் கவாரிஜாக ,சியாவாக பார்க்கப் படுவோம் என்பதே நடப்பு நிகழ்வு . ஆனால் அதேநேரம் சவூதி மன்னர் ஈரானோடு இஸ்ரேலிய  பெப்சியை பருகியவாறே கை குழுக்கிக் கொண்டிருப்பார் !!!!

 வளைகுடாப் போர் பற்றிய விபரங்கள் .இது உங்கள் சிந்தனைக்கு !!!


 வளைகுடாப் போர் என்பது 2 ஆகஸ்ட் 1990 முதல் 28 பிப்ரவரி 1991 வரை ஈராக்கிற்கும் அமெரிக்கா தலைமையிலான் 28 நாடுகள் அடங்கிய கூட்டுப் படையினருக்கும் இடையே நடந்த சண்டை ஆகும். இந்தப் போர் முதலாம் வளைகுடாப் போர் அல்லது பாரசீக வளைகுடாப் போர் அல்லது பாலைவனப் புயல் படை நடவடிக்கை என்றும் அழைக்கப்படுகிறது.

ஈராக் 2 ஆகஸ்ட் 1990 அன்று குவைத் நாட்டை ஆக்கிரமித்து தன்னுடன் இணைத்துக்கொண்டதை அடுத்து, ஈராக்கியப் படைகளை குவைத்திலிருந்து வெளியேற்றும் நோக்கில் ஈராக், குவைத் மற்றும் சவுதி அரேபியாவின் சில பகுதிகளிலும் போர் நடந்தது. குவைத் மீதான ஆக்கிரமிப்பை அடுத்து உடனடியாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை ஈராக் மீது பொருளாதாரத் தடை விதித்தது. அமெரிக்க அதிபர் ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ் தன் நாட்டுப் படைகளை சவுதி அரேபியாவில் நிறுத்தி மற்ற நாட்டுகளும் தங்களது படைகளை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

பல நாடுகளும் அமெரிக்காத் தலைமையிலானக் கூட்டுப் படையில் இணைந்தன. அவற்றில் சவுதி அரேபியா, ஐக்கிய இராச்சியம் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளேப் பெரும் பங்கு வகித்தன. மொத்தச் செலவான 60 பில்லியன் அமெரிக்க டாலரில் 40 பில்லியன் அமெரிக்க டாலர் பணத்தை சவுதி அரேபியா செலுத்தியது இந்தப் போரில் வான்வழித் தாக்குதல் 17 சனவரி 1991 அன்றும் தொடர்ந்து தரைவழித் தாக்குதல் 23 பிப்ரவரி 1991 அன்றும் தொடங்கியது.

குவைத்திலிருந்து ஈராக்கியப் படைகளை விரட்டி அடித்த கூட்டுப் படையினர் ஈராக் நிலப்பகுதிக்குள் முன்னேறினர். தரைவழித் தாக்குதல் தொடங்கிய 100 மணி நேரத்துக்குள் கூட்டுப் படையினர் வெற்றி பெற்று போரை முடிவுக்குக் கொண்டு வந்தனர்.ஈராக்கின் குவைத், சவுதி அரேபிய எல்லை பகுதிகளில் வான்வழி மற்றும் தரை போர் நடவடிக்கைகள் தீவிரமாக நிகழ்ந்தது.இதற்க்கு பதிலடியாக ஈராக் சவுதி அரேபியா மற்றும் இஸ்ரேலுக்கு பகுதியில் இருந்த கூட்டணி இராணுவ முகாம்களை நோக்கி விரைவு ஏவுகணைகளை அனுப்பியது. ஏப்ரல் 1991 ல் இயற்றப்பட்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 687 தீர்மானத்தின் படி போர்நிறுத்த உடன்படிக்கை கொண்டுவரப்பட்டது.இந்த தீர்மானங்களை செயல்படுத்துவதில் ஏற்ப்பட்ட சர்ச்சைகள் காரணமாக 12 ஆண்டுகளுக்கு பின்னர் ஈராக்கிய போர் வெடித்தது.

அமெரிக்க செய்தி தொலைகாட்சியான சிஎன்என் இப்போரின் முக்கிய நிகழ்வுகளை போர் நடக்கும் இடங்களுக்கே சென்று நேரடி ஒலிபரப்பு செய்தது.இது அக்காலத்தில் முதல் முயற்சியாகும்.இப்போர் முடிவடைந்த பின்னர் டெசர்ட் ஸ்ட்ரோம் நடவடிக்கையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை கொண்டு ஒரு கணனி  விளையாட்டு உருவாக்கப்பட்டது.இதனால் இப்போர் காணொளி விளையாட்டுப் போர் (video game war) என அழைக்கபடுகிறது 

யுத்த காலகட்ட பரவல்[தொகு]

அமெரிக்க தாக்குதல் 3 முக்கிய பரவல்களை கொண்டிருந்தது.அவை
1991 ஜனவரி 16 முதல் 2 ஆகஸ்ட் 1990 சவுதி அரேபியா பாதுகாப்பு
1991 ஏப்ரல் 11 முதல் 1991 ஜனவரி 17 வரையான காலகட்டத்தில் குவைத் நாட்டின் பாதுகாப்பு மற்றும் விடுதலை.
1991 ஏப்ரல் 12 முதல் 1995 நவம்பர் 30 வரை தென்மேற்கு ஆசிய போர்நிறுத்த நடவடிக்கைக்கு ஆதரவு அளிக்கப்பட்டு நவ காலனித்துவம் உறுதிப்படுத்தப்பட்டது .

Gulf War Photobox.jpg

Clockwise from top: USAF F-15EsF-16s, and a USAF F-15C flying over burning Kuwaiti oil wells; British troops from the Staffordshire Regiment in Operation Granby; camera view from a Lockheed AC-130Highway of DeathM728 Combat Engineer Vehicle


வளைகுடாப் போர்

நாள்2 August 1990 – 28 February 1991
(6 மாதங்கள், 3 கிழமைகள் மற்றும் 5 நாட்கள்)
(டெசர்ட் ஸ்ட்ரோம் நடவடிக்கையானது அதிகாரப்பூர்வமாக 1995 நவம்பர் 30 ல் முடிவுக்கு வந்தது )[1]
இடம்ஈராக்குவைத்சவூதி அரேபியாஇஸ்ரேல்
முடிவுகூட்டுப்படைகளின் வெற்றி
  • இராக் படைகள் குவைத்திலிருந்து பின் வாங்கின
  • ஈராக் மற்றும் குவைத் பெரும் அழிவுகளையும் உயிரிளைப்புகளையும் சந்தித்தது
பிரிவினர்
கூட்டுப்படைகள்

Flag of Iraq (1963-1991); Flag of Syria (1963-1972).svg ஈராக்
தளபதிகள்
குவைத்தின் கொடி ஜாபர் அல் அகமது அல்-ஜாபர் அழ-சபாஹ்

 டிக் செனி
 நார்மன் ஸ்வார்ஸ்காஃப்
 சார்லஸ் ஹார்னர்
 பிரடெரிக் பிராங்க்ஸ்
 கால்வின் வாலர்
 ஜான் ஏ வார்டன்
 ஜான் மேஜர்
 பேட்ரிக் ஹைன்
 ஆண்ட்ரூ வில்சன்
 பீட்டர் டி லா
 ஜான் சாப்பள்
 சவூதி அரசர் பஹ்த் 
 சவூதி இளவரசர் அப்துல்லா
 சுல்தான் பின் அப்துல்லாசிஸ்
 துர்கி பின் ஃபைசல் அல் சாட்
 சலே அல் முஹாயா
 காலித் பின் சுல்தான்[2][3]
 கென்னத் ஜே சம்மர்ஸ்
 பிரான்சுவா மித்திரோன்
 மைக்கேல் ரோகியுகஜியூப்ரி
 முகமது ஹுசைன் தந்வாணி
 ஹபீஸ் அல் ஆசாத்
 முஸ்தபா தலாஸ்
 சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான்
 அலி ஹஸன் அல் மஜித்

 சலாஹ் அபுத் மகமத்
 அலி ஹஸன் அல் மஜித்
பலம்
956,600,[4]அதில் 500,000 க்கும் மேற்பட்டவர்கள் அமெரிக்கர்கள்[5]650,000 இராணுவ வீரர்கள்
இழப்புகள்
கூட்டுப்படைகள்
எதிரி நடவடிக்கை மூலம் 190, நட்பு படைகள் மூலம் 44 ,உள்ளர்ந்த பகுதிகளின் தாக்குதல் காரணமாக 248
மொத்தம் 482 பேர் கொல்லப்பட்டனர்
458 பேர் காயம் பட்டனர்[6] - 776 wounded[7]

Kuwait:

200 KIA[8]
ஈராக் தரப்பு இழப்புகள் .
20,000–35,000 பேர் கொல்லப்பட்டனர்
75,000 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்[7]
குவைத் மக்கள் இறப்புகள்:
1000 க்கும் மேற்பட்டோர் இறந்தனர்[9]
ஈராக் மக்கள் இறப்புகள்:'
3,664 பேர் கொல்லப்பட்டனர்[10]

Other civilian losses:

2 இஸ்ரேலியர்கள் நேரடியாக கொல்லப்பட்டனர், 297 பேர் காயமடைந்தனர்[11]
72 இஸ்ரேலியர்கள் மறைமுகமாக இறந்தனர்[12]
1 சவுதிகள் இறந்தனர்.65 பேர் காயமடைந்தனர்d[13]

No comments:

Post a Comment