Monday, January 27, 2014

அமெரிக்க சவூதி கூட்டுச் சதியில் ஒரு தூய சலபி எவ்வாறு வீழ்த்தப் படுகிறார் !



               'இஸ்லாம் அல்லாத அனைத்தும் தாகூத்தின் வழி வருபவை .தாகூத்திடம் இருந்து வருகின்ற யாவும் ஜாஹிலீயத் ஆனவை ' என்பது இமாம் இப்னு தைமியா (ரஹ் ) உட்பட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட இமாம்களினதும் ஏகோபித்த முடிவு . தூய சலபி இமாமான அப்துல்லாஹ் பின் பாஸ் (ரஹ் ) முதல் ஜிஹாதிய சலப் கமாண்டர் கத்தாப் வரை இந்த நிலைப்பாட்டில் இருந்து இறுதிவரை மாறுபடாமல் அவரவர் வழியில் போராடியவர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை . ஆனால் இத்தகு தூய சிந்தனையை தூக்கி வீசிவிட்டு இஸ்லாத்தின் நிலங்களில் சிலுவை வீரர்களை கால் பதிக்க வைத்து தமது முடியாட்சியை காக்க நிணைக்கும் மன்னரிசத்துக்கு சோடை போன நியோ சலபிகள் நிச்சயமாக இனம் காட்டப் பட வேண்டியவர்கள் .


                 கொக்கையும் நீர்க்காகத்தையும் இனம் காண்பது இலகுவானது போலவே , இந்த தூய சலபிகளையும் , நியோ சலபிகளையும் இலகுவாக இன்று  அறிந்து கொள்ள முடியும் . அது தாகூத்களோடு முரண்பட்டு அதை எதிர்க்கத துணியும் சலபிகளை தூய சலபிகள்;தாகூத்களோடு உறவாடுவதை சொல்லால் ,செயலால் , அங்கீகாரத்தால் ஏற்றல் அல்லது ஏற்பவர்களோடு ஒத்துப் போபவர்கள் நியோ சலபிகள் எனலாம் . ஆனால் இங்கு நான் குறிப்பிடும் விடயம் ஒரு தூய சலபி அமெரிக்கன் அஜெண்டாவுக்குள் கொண்டு வரப்பட்ட துரோக வரலாறு பற்றியதே ஆகும் .அவர் ஷேக் அப்துல்லாஹ் பின் பாஸ் (ரஹ் ) . விமர்சனங்களுக்கும் கருத்து வேறுபாடுகளுக்கும் அப்பால் இருந்து பார்க்கும் நிலையில் ஒரு இஸ்லாமிய பற்றாளர் .

              கண் பார்வை புலப்படாத இவரை வைத்து வடிகட்டிய C I A தனத்தில் அந்த மகா துரோகத்தை 1990 களில் சவூதி மன்னராக இருந்த 'பஹ்த் ' செய்து முடிக்கிறார் . (அப்போது இன்றைய சவூதியின் உளவுப் பிரிவுத் தலைவர் பந்தர் பின் சுல்தான் அமெரிக்கன் அம்பாசிடர் !!)திட்டமிட்ட காட்சிகளில் வில்லன் ஈராக் ஜனாதிபதி சதாம் ஹுசைன் . அவரின் குவைத் ஆக்கிரமிப்பில் இருந்து அந்த விறுவிறுப்பான காட்சிகள் நகர்த்தப் படுகின்றன .

          தமது முடிகாக்க அமெரிக்க முதலாளித்துவ ஏகாதிபத்திய சிலுவை இராணுவ பூட்சுகளை புனித மண்ணில் பதிக்க வேண்டும் . அதுவும் எல்லா சலபி முதவாக்களையும் சுருட்டிப் போடும் ஒரு வலிமை மிக்க 
சேக் ஒருவரால் அது வெளியிடப்பட வேண்டும் . அந்த நபரும் தேர்ந்தெடுக்கப் பட்டார்  . அன்று சவூதி உலமா கவுன்சிலின் தலைமைப் பொறுப்பில் இருந்த ஷேக் அப்துல்லாஹ் பின் பாஸ் (ரஹ் ) அவர்கள்தான் அது .கண்பார்வை தெரியாத இவரது பலவீனம் அமெரிக்காவுக்கும் அதன் கௌரவ நண்பனான சவூதி மன்னர் 'பஹ்த்' இற்கும் நன்றாகவே பயன்பாட்டுப் போனது . 


           சதாமின் நகர்வுகளுக்கு பின்னால் உள்ள C I A சூத்திரங்கள் பற்றி அறியாத அரபிகள் SONY டீவியிலும் அகாய் டெக்கிலும் அராபிய சப் டைடிலோடு ஹோலிவூட் ,பொலிவூட் படங்களை ரசித்துக் கொண்டிருக்க மறுபக்கம் சற்று உலக ஆர்வம் மிக்கவர்களும் CNN தரும் சூடான செய்திகளை கூலான பெப்சி கோலாவை குடித்தவாறே பார்த்துக் கொண்டிருந்தார்கள் . அந்த பிரமாண்டத்தில் சதாம் ஆப்ரஹா போலவும் !! அவரது படைகள் ஏதோ யானைகள் போலவும் அபாபீல்களுக்கு பதிலாக அமெரிக்ககூட்டு  படைகளின் தேவையும் பற்றி மீடியாக்கள் பிளந்து கட்டின .


        கண்பார்வை தெரியாத பின் பாஸ் (ரஹ் ) அவர்களின் அகக் கண்ணுக்கும் காட்டப்பட்ட காட்சிகள் இதுதான் . இந்த இடத்தில மன்னர் பஹ்த் புனிதத் தளங்களின் காவலனாக தன்னை காட்டி குவைத் ஊடாக சதாமின் படைகள் சவூதியை ஆக்கிரமிக்க வருவதாக கூறுகிறார் . அதற்கு பதில் அளிக்கும் சேக் பின் பாஸ் (ரஹ் ) 'புனித பூமியை அண்ட விடாமல் சதாமின் படைகளை அடித்து விரட்ட சொல்கிறார் '.அவரது இந்த பதிலில் ஒரு கொடிய சூழலில் சிக்கப்போகும் 'ஹரத்தை' மீட்கும் ஆர்வம் தெரிந்தது . மன்னர் பஹ்த் இன் முதல் இலக்கு ஓகே ஆகிப்போக , இரண்டாம் இலக்கு முன்வைக்கப் படுகிறது . சதாமின் படையை எதிர்க்க எமக்கு பலம் போதாது எமக்கு உதவ அமெரிக்கா முன்வருகிறது பயன்படுத்தலாமா !? கஆபாவையும் அதன் புனித நிலையையும் காக்கும் ஆர்வம் சேக் அவர்களை அதற்கும் ஒத்துக் கொள்ள வைக்க விடயம் எழுத்து வடிவில் ஏற்கனவே தயாரிக்கப் பட்டிருக்க சேக்அவர்களின் முதன்மை மாணவரால் சரிபார்க்கப்பட விடயம் அப்துல்லாஹ் பின் பாசின் (ரஹ் ) தீர்ப்பாக வெளிவருகிறது . 


                மன்னர் பஹ்த் அல்ஹம்துலில்லாஹ் சொல்ல ! அன்றைய அமெரிக்க ஜனாதிபதி' புஷ்' ஜீசஸ் கிரேட் என்று கூற இஸ்ரேலில் யூத இராணுவத்தின் கையில் இருந்த M16 ரைபில்கள் பட்டாசு கொளுத்தின ! தயார் படுத்தி வைக்கப்பட்ட அமெரிக்க இராணுவக் கூட்டு சவூதியை தளமாக்கி தமது நிகழ்கால எதிர்கால இலக்குகளுக்காக வந்து இறங்கத் தொடங்கியது . சூழ்நிலையின் விபரீதத்தையும் சேக் அவர்கள் ஏமாற்றப் பட்டதையும் அவரோடு நெருக்கமாக இருந்த மாணவர் குலாம் தெளிவு படுத்த வெகுண்டு எழுந்தார்   சேக் அப்துல்லாஹ் பின் பாஸ்  (ரஹ் ) . அதன் பின் நடந்த கதையில் தான் நியோ சலபிகளின் பக்கா வடிவம் புரியத் தொடங்கியது . இன்ஷா அல்லாஹ் அது இன்னொரு பதிவில் .

                 

No comments:

Post a Comment