Thursday, January 10, 2013

தொடரும் பெண்கள் மீதான வன்முறைகள் தீர்வு என்ன ?(பகுதி01)



           பெண் விடுதலை , கருப்பை சுதந்திரம் , ஆணுக்கு நிகரான பெண் சமத்துவம் ,போன்ற கோஷங்கள் அன்றாடம் எழுப்பப்பட்டும் , சட்டரீதியான அதன் வடிவங்கள் நடைமுறைப்படுத்தப் பட்டும் இருக்கும் நிலையிலும், பெண்களுக்கெதிரான வன்முறைகள் ,அடக்கு முறைகள் , அத்துமீறல்கள் உலகெங்கும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது . இது தொடர்பில்  சட்டத்தின் பாதுகாப்பும் , கிரிமினல் குற்றங்களுக்கான தண்டனைகளும் கேள்விக்குறியான நிலையில் ஒவ்வொரு பெண்ணும் தனது சமூக வாழ்வு குறித்து அச்சப்பட்டே காலம் நகர்த்த வேண்டியுள்ளது . 


                                        தொட்டில் முதல் மயானம் வரை தொடரும் இந்த அநியாயம் தடுக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை . ஆனால் பெண்கள் சமூகம் மீண்டும் மீண்டும் கவர்ச்சிகரமான பாதையில்  தவறான இலக்குகளை நோக்கியே இது விடயத்தில்  இழுத்துச் செல்லப் படுகின்றது .இறுதியில் அனுசரித்தால் வாழலாம் என்ற தத்துவத்தை சொல்லாமல் சொல்லி பெண்கள் சமூகத்தை ஒரு கருத்துப் போலிக்குள் முடக்கி விடுவதே காலம் காலமாக நடந்து வரும் தீர்வெனும் தவறாகும் .


                     இது விடயத்தில் தீர்வு என முன்வைக்கப்படும் நவீனம் ,விடுதலை என்ற அப்பட்டமான முதலாளித்துவ சுயநலக்  கண்களினால் பெண்ணை ஒரு இலாபம் தரும் நடமாடும் பண்டமாகவே அலைய விட்டுள்ளது . இந்த பார்வையின் உச்ச விளைவை வன்முறை வடிவில் எதிர்நோக்கும் போது மட்டும் அவ்வப்போது ஆவேசமாக கூக்குரலிடுவதில் அர்த்தமில்லை . எனவே இதற்கு சரியான தீர்வென்ன ? இந்த அடிப்படையில் என்னால் முடிந்த வரையான ஒரு பதிவை தொடராக முன்வைக்க முயற்சிக்கிறேன் இன்ஷா அல்லாஹ்  . அதன் ஆரம்பப் பந்திகளே மேலே தந்தவை . 

                                                                                                                                          (தொடரும் ...)

No comments:

Post a Comment