Saturday, January 5, 2013

சிரியாவில் இஸ்லாமிய மக்கள் படைக்கெதிராக களமிறங்கியுள்ளது 'ஹிஸ்புத் தாகூத் '.



                                  சூடு பிடித்துள்ள சிரியக் களத்தில்  இன்றைய நிலையில் முஸ்லீம் உம்மத் உணர்ந்து கொள்ளவேண்டிய இரகசிய சதி முகங்கள் தங்களை அம்பலப் படுத்த தொடங்கியுள்ளன .' டமஸ்கஸ் ' விமான நிலையத்தை கைப்பற்றும் கடுமையான சமரில் இஸ்லாமிய மக்கள் இராணுவம் ஈடுபட்டுள்ளது. பாதுகாப்பு காரணம் கருதி விமான நிலையத்தை மூடியதாக 'தாகூத்திய ' அரசு அறிவித்தாலும் , சமர் இஸ்லாமிய மக்கள் இராணுவத்திற்கு சாதகமாகிய நிலையை மறைக்கவே இந்த தகவல் வெளிப்படுத்தப் பட்டுள்ளது .

                                                                      
                                                                 மேலும் மேற்கின் மீடியாக்கள் இன்னும் சில போலித் தகவல்களை அடுக்கடுக்காக வெளியிட்டுக் கொண்டுள்ளது ; அது இஸ்லாமிய மக்கள் இராணுவத்தின் வசமாகிய சில பகுதிகளை அசாத் படை மீண்டும் கைப்பற்றியுள்ளது எனும் பொய்யான தகவலே அதுவாகும் . இது எதிர்பார்ப்போடு இருக்கும் முஸ்லீம் உம்மத்தை திசை திருப்பும் ஒரு நடவடிக்கையாகும் . சரி அப்படியானால் 'டமஸ்கஸ்' விமான நிலையத்தை சுற்றி நடக்கும் சமர் யாரின் கை ஓங்கியுள்ளது என்பதை  எடுத்துக் காட்டும் ஒரு ஆதாரமில்லையா ? எனும் வினா இங்கு எழுகின்றது .



                                                   ஆனால் இங்கு இன்னோர் அரசியல் மிக நுணுக்கமாக உள் நுழைந்துள்ளது .அது ஈரானின் ஷியா அரசியல் . இஸ்ரேலுக்கெதிரான தனிப்பெரும் எதிர்சக்தியாக படம் காட்டப் பட்ட 
இந்த 'அப்துல்லாஹ் இப்னு சபா ' எனும் சதி நாசகாரியின் சந்ததி, நேற்று லெபனானை மையம் கொண்டு 'ஹிஸ்புல்லாஹ்' எனும் பெயரில் இஸ்ரேலை பெயருக்கு சமர் கண்டது . அது ஈரானிய  ' சபாயிசத்துக்கு ' சார்பான கண்துடைப்பு போர் தான் என்பதை இன்று நிரூபிக்கும் தகவலாக அதன் சிரியாவின் உள்நுழைவு  உள்ளது .



                                         இந்த 'ஹிஸ்புல்லாக்கள் ' (தம்மை' ஹிஸ்புத் தாகூத் ' எனும் பெயர் மாற்றம் செய்யாமல் ) அசாத் பயங்கர வாதத்துக்கு சார்பாக, இஸ்லாமிய மக்கள் இராணுவத்திற்கு எதிராக களமிறங்கியுள்ளது .இந்த அசாத் உண்மையில் 'அளவி ஷியா' பிரிவை சார்ந்தவன் . மேலும் ஈரானோடு நெருங்கிய உறவும் கொண்டவன் என்பது பகிரங்க உண்மை . மேலும் ஈரானின் அரசியல் நோக்கங்களுக்காக பயன் படுத்தப்படும் இரகசிய' பிரிகேட் ' 'ஹிஸ்புல்லாஹ் ' என்பதும் அது இஸ்ரேலுக்கெதிராக மட்டும் போராடும் அமைப்பல்ல என்பதும் இப்போது வெளிப்படை உண்மையாகியுள்ளது  . 



                                    மேலும் ஈரானின் அரசியல் உருவம் மேற்கின் எதிர்பர்ப்பிட்கு அமைய ஒரு எதிர் சக்தியாக தன்னை இனம் காட்டுவதே . இங்கு 'ஷியா ' இசத்தை காட்டி சுன்னிகளோடு சார்புத்தாளம் முதலாளித்துவத்தால் செய்யமுடியும் .அரசியல் பொருளாதார ரீதியில் கொழுத்த இலாப அறுவடையையும் செய்ய முடியும் .இதைத்தான் மேற்கு இதுவரை செய்து வந்துள்ளது . இந்த சர்வதேச சதிகளுக்கெல்லாம் ஆப்பு வைக்கும் அத்திவரமாகவே சிரிய களம் மாறியுள்ளது .



                                                         இஸ்லாமிய கிலாபா அரசு தோற்றம் பெற்றால் அது யூத ,கிறிஸ்தவ அநியாக்காரர்களுக்கு மட்டுமல்ல , அவர்களின் இரகசிய படைப்பான 'ஷியாக்களுக்கும் ' கூட பலத்த அடியாகி விடும் . எனவேதான் சத்தியத்தை கொச்சைப்படுத்தும் இந்த சதி முகங்கள், தமக்குள் எழுதப்படாத ஒரு உடன்பாட்டுடன் சிரியாவில் களமாடத் துணிந்துள்ளனர் என்றால் அது மிகையான கருத்தல்ல .


                        

No comments:

Post a Comment