Wednesday, January 2, 2013

ஒரு வினா விடை தேடுகிறது .



                         அரேபிய வசந்தத்தில் மேற்கின் சதித்தனம் தெரிகின்றது என குற்றம் சாட்டும் நீங்கள் அதற்கான ஆதாரத்தை தர முடியுமா ? எனும் வினா என்னிடம் தொடுக்கப் பட்டது . அதற்கான விடையை சுருக்கமாக தருகின்றேன் . முஸ்லீம் உம்மத்தின் இயல்பான இஸ்லாத்தின் தேடல்களை நான் இங்கு குறை கூற வரவில்லை .ஆனால் அதன் வழிகாட்டிகள் மேற்கின் பெருமானத்தால் இஸ்லாத்தை வரைவிலக்கணப் படுத்திய சிந்தனைத் தரத்தில் தான் இருக்கின்றார்கள் . 
 
                                     என்னுடைய கருத்து பலமான விமர்சனத்துக்கு உட்படும் என்பது திண்ணம் .ஆனால் நான் இன்னும் ஆப்கானின் நிகழ்வுகளை மறக்கவில்லை . ஆனால் அதே நேரத்தில் சிரிய விவகாரத்தை நான் விதி விலக்காக பார்க்கின்றேன் . காரணம் அதன் அழைப்பில் இஸ்லாமிய அரசியலும் . ஆதாரத்தில் தெளிவான முன்னறிவிப்புகளையும் கொண்டது . சரி இனி அந்த கேள்விக்கான பதில் இதுதான் .


அரேபிய வசந்தத்தில் மேற்கின் சதித்தனம் தெரிகின்றது. கரணங்கள் இதுதான் .

1.அராபிய புரட்சியின் ஆரம்ப கட்டத்தில் இருந்தே மேற்குலகு அதற்கான பகிரங்க அங்கீகாரத்தை வழங்கி இருந்தது . 
2.புரட்சி நடந்த அனைத்து பகுதிகளும் கம்பியுனிசசார்பு ஆட்சி நிலவிய பகுதிகள் . 
3.துருக்கி மொடேர்ன் (ஜனநாயகம் + மதச் சார்பின்மை கொண்ட )இஸ்லாமிய அரசாக  எடுத்துக் காட்டப் பட்டது .
4. இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரித்த இஸ்லாமிய தேசியங்கள் எனும் சிந்தனை நடைமுறை அரசியலாக்கப் பட்டுள்ளது .
 5. கிலாபா அரசு ஒரு நடைமுறை சாத்தியமற்ற வாதம் எனும் கருத்தியலை இஸ்லாமிய இயக்கங்களே (ஜனநாயகத்தை) சாத்தியமாக்கி பேசுகின்றன . 
6. மக்களின் இயல்பான போராட்ட உணர்வு தேசிய அபிலாசைகள் உள்ளடங்கிய இஸ்லாமிய 'சரியா' எனும் சாத்தியப்பாடு கொண்டதாக மட்டுப்படுத்தப் பட்டுள்ளது .
7. அராபிய புரட்சியின் வன்முறை சார் பகுதிகளில் புரட்சிப் படைகளுக்கு ஆதரவாக வான்வழி உதவித் தாக்குதல்கள் N A T O நடாத்தியமை பகிரங்க உண்மை ( உதாரணம் லிபியா ).


                                             சம்பவங்களின் வடிவத்தை வைத்து மட்டுமே சதிகளை உணர்ந்து கொள்ள முடியும் . பகிரங்க ஆதாரங்களை வைத்து சதிகள் செய்யப்படுவதில்லை . ஆனாலும் எதேச்சையான ஆதாரமே புரட்சிப் படைகளுக்கு ஆதரவாக வான்வழி உதவித் தாக்குதல்கள் N A T O நடாத்தியமை பகிரங்க உண்மை ( உதாரணம் லிபியா ).

 

No comments:

Post a Comment