Sunday, January 13, 2013

தொடரும் பெண்கள் மீதான வன்முறைகள் தீர்வு என்ன ?(பகுதி 04)



                            முன்னைய  சமூகங்களில் பெண்களின் நிலை  பற்றி ஆராயும் தொடரில் ,கிரேக்கம் ,ரோம் , ஐரோப்பா போன்ற பகுதிகளை நாங்கள் இதுவரை பார்த்தோம் . இன்றைய உலகின் ஆதிக்க சக்தியாய் வீற்றிருக்கும் முதலாளித்துவ சிந்தனா வாதத்தின் ஆரம்ப அத்திவாரமாக குறிப்பிடப் படும் சமூகங்களே நான் இதுவரை குறிப்பிட்டவை .இதே வரிசையில் இஸ்லாத்திற்கு முந்திய அரேபியா, மற்றும் ஆபிரிக்க ,ஆசிய பகுதிகளோடு தொடர்பு பட்ட நாகரீகங்களில் பெண்கள் தொடர்பான பார்வை மற்றும் நடத்தை பற்றியும் சிறிதளவு ஆராய்வது பொருத்தம் .


                                         உண்மையில் இந்த நாகரீகங்களிலும் வழிவரான கலாச்சாரம் , மதக் கோட்பாட்டு அழுத்தங்களுடன் கூடிய சாதிக் கோட்பாடு என்பவற்றின் கீழ் பெண்கள் சமூகம் தரக்குறைவாக நடத்தப் பட்டமைக்கு பல ஆதாரங்களை  நாம் காண முடியும் . ஒப்பீட்டளவில் கிரேக்கம் ,ரோம் , ஐரோப்பா போன்ற பகுதிகளை ஒத்த செயலையே சில வடிவ மாறுபாட்டோடு இந்த சமூகங்களும் செய்துள்ளன .
# பெண் சிசுக் கொலை 
# தேவதாசிக் கோட்பாடு 
# தாழ் சாதி விதியின் கீழ் மேலாடை அணியத் தடை .
# உடன் கட்டை ஏறுதல் .
                                                                                       போன்ற விதிகளின் கீழ் தனது சமூகத்திற்கு உள்ளும் ,பிற சமூகங்களுக்கு மத்தியிலும் மிக அதிகமாகவே பெண்கள் சமூகம்  தாழ்த்தப்பட்டது .இந்த தரக்குறைவான நியதிகளின் கீழ் பேசும் விலங்கு என்ற போலித் தத்துவத்தை அவள் உருவப் படுத்தினாள் . சில ஆபிரிக்க பழங்குடியினர் அவளின் மீதான நம்பிக்கையீனத்தின் சான்றாக அவளின் யோனித் துவரங்களை கூட குறிப்பிட்ட காலம் தைத்து விடுவார்களாம் !


                                                                 தொட்டில் பழக்கத்தில் இருந்து பெண்கள் தொடர்பில் தவறான கருது கோள்களே சமூகங்காளால் கற்றுத் தரப்படுகின்றன . அதாவது கலாச்சாரப் பாரம்பரியங்கள் ,மதங்கள் ,சிந்தனைகள் போன்ற எல்லாமே பெண்கள் தொடர்பில் ஒரு வகையான வன்முறைப் பார்வையையே கற்றுக் கொடுக்கின்றன .  
      
                                                                                                                                                       (தொடரும் ...) 

No comments:

Post a Comment