Thursday, January 10, 2013

மனிதாபிமான உதவியின் ஆதார வடிவம் 'அமீருல் மூமினீன் ' கால்வாய் .


 

         அது கலீபா உமர் இப்னு கத்தாப் (ரலி )யின் ஆட்சிக்காலம் . 'ஹிஜாஸ் ' மாகாணத்தில் கடுமையான பஞ்சம் ஏற்படுகின்றது . அந்த சோதனையை எதிர்கொள்ள கலீபா பாரசீகம் ,சிரியா , எகிப்து ,எமன் போன்ற பாதிக்கப் படாத பகுதிகளின் கவர்னர்களுக்கு நிவாரண உதவிகளை அனுப்புமாறு கட்டளை இடுகிறார்கள் .பல்வேறு பகுதிகளிலும் இருந்து உணவுப் பொருட்களும் ,தானியங்களும் வந்து சேர்கின்றது .ஒரே ஒரு ஆளுகை பகுதியில் இருந்து மட்டும் உதவிகள் வந்து சேரவில்லை . அது எகிப்து .


                                         கவர்னர் அம்ர் இப்னு ஆஸ் (ரலி ) இது விடயத்தில் கலீபாவினால் காரணம் கேட்கப் படுகின்றார்கள் . எகிப்திலிருந்து உதவிகள் தரைவழியாக வருவது என்றால் மிக நீண்ட கடினமான தரைவழி பாதையில் பயணித்தே 'ஹிஜாசை ' அடைய வேண்டும் .அந்த கால தாமதமே உரிய நேரத்தில் உதவி அளிக்கா முடியாமல் போனது . என  கவர்னர் அம்ர் இப்னு ஆஸ் (ரலி ) காரணத்தை கூறியதும் . கலீபா எகிப்தின் உதவி விரைவாக கிடைக்கும் மார்க்கம் பற்றி ஆராய்கிறார்கள் .

                                           முடிவாக எகிப்திலிருந்து  செங்கடல் வழியாக கப்பல்கள் மூலம் விரைவாக  'ஹிஜாஸ் ' நோக்கி உதவிகள் அனுப்பமுடியும் ; ஆனால் 69 மைல் நீளமான ஒரு தரைப்பகுதி எகிப்தின் நைல் நதியோடு இணைக்கப்பட கப்பல்கள் செல்லத்தக்க ஒரு கால்வாய் வெட்டப்பட வேண்டும்."அப்படியானால் கால்வாயை வெட்டுங்கள் ." இது கலீபாவின் கட்டளை .ஆறு மாதங்களில் செங்கடலோடு நைல் நதியை இணைக்கும் அந்த கால்வாய் வெறும் மனிதக் கரங்களால் வெட்டி முடிக்கப் பட்டது .அதுதான் 'அமீருல் மூமினீன் ' கால்வாய் என இன்றும் அழைக்கப் படுகின்றது . 


                       ஆனால் இன்று ? தேச ,தேசிய எல்லைகளுக்குள் சுயநலத்தை காலனித்துவம் கற்றுத் தந்தது . அதனால் மனிதாபிமானம் இங்கு எல்லைப் படுத்தப் பட்ட பொருள் ! மனிதாபமான உதவிக்கான இவர்களின் எதிர்பார்ப்பு தேசிய  இராஜ தந்திர அரசியல் இலாபம் ! காட்டு விலங்கு வாழ்க்கையை விட கேவலமானது இந்த எதிர்பார்ப்பு .


                                          

No comments:

Post a Comment