Monday, January 14, 2013

தொடரும் பெண்கள் மீதான வன்முறைகள் தீர்வு என்ன ?(பகுதி 05)


" பேய் அரசாண்டால் பிணம் திண்ணும் சாத்திரங்கள்! 
  அதன் கொள்கைகள் கொலைக் களங்களை பிரசவிக்கும் !
  அதன் சட்டங்களும் கோரமாக இரத்தம் குடிக்கும் !
  சுயநல மேடை போட்டு நீதியை மிதித்து அங்கு 
  அநீதி ஆனந்தக் கூத்தாடி மகிழும் ! - இதுதான் இன்றைய 
  அதிகாரங்கள் அரசியலாக கற்றுத் தருபவை "

   டெல்லியில் நடந்த அந்த மிருகத் தனமான பாலியல் வன்முறையோடு கூடிய படு கொலையோ அல்லது அதே இந்தியாவில் காஸ்மீரில் இந்த முஸ்லீம் உம்மத்தின் சகோதரிகளின் உடல்கள் மீது படுபயங்கரமாக இந்திய இராணுவ ஜவான்களால் நிகழ்த்தப் படும் பயங்கர வாத எதிர்ப்பு யுத்தமோ, அரசியல் தரத்தில் இரண்டு வேறுபட்ட பார்வைகள் . மனித குலத்தின் கீழ்த்தரமான அணுகு முறைகளுக்கு இது சிறந்த உதாரணம் .



                                    பார்வையின் கோணத்தில் இருந்தே நடைமுறைகள் தீர்மானிக்கப் படுகின்றன . அந்த பார்வையை தீர்மானிப்பது கொள்கைகள் என்றால் அது மிகையான கருத்தல்ல .இது பொதுவாக எல்லா விடயங்களுக்கும் பொருந்தும் . எப்போதும் எமக்கு முன் ஏற்படும் அநீதமான வன்முறைகள் தொடர்பாக எமது தீர்வுகள் தற்காலிகமான சில உணர்ச்சி கரமான நடவடிக்கைகள் பற்றியே சிந்திக்கின்றன . ஒரு அடிப்படைக் கொள்கையின் தவிர்க்க முடியாத விளைவாக அந்த வன்முறை பார்க்கப் படுவதில்லை .


                                   இன்று எம்முன் நிற்கின்ற ஒட்டு மொத்த கொள்கைகள் ,சிந்தனைகள் பெண்கள் தொடர்பில் எவ்வாறான கருத்தை வைத்திருக்கின்றது ? என ஆராயப் போகும் போது ஒரு விரிவான தேடல் அவசியமாகின்றது . ஆனால் பொதுக்கருத்தில் பெண்கள் தொடர்பான கருத்தில் பல உடன்பாடுகளை அவை கொண்டிருக்கின்றது ; என்பதை நிரூபிக்க பக்கம் பக்கமாக ஆராயும் அவசியம் இருக்காது . 



                             கிரேக்கமோ , ரோம் சமூகமோ , அல்லது ஐரோப்பாவோ , அரேபியாவோ ,ஆபிரிக்காவோ , ஆசியாவோ , தமது கருத்தில் பெண்கள் தொடர்பான நிலைப்பாட்டை விளக்க , அல்லது அவைகளின் பெண் தொடர்பான பொதுப் பண்பை விளக்க சில உதாரண சம்பவங்களே போதுமாக இருந்தது . இந்த விதி இன்று எம்முன் நிற்கும் கொள்கைகள் , சிந்தனைகள் பற்றி ஆராயவும் போதுமானதாகும் .


                               அந்த வகையில் முதலாளித்துவமோ , கம்பியூனிசமோ , பெண் தொடர்பில் பார்த்த பார்வை என்ன ? என்று நாம் ஆராய முற்படுகையில், எல்லாம் பாலியல் கவர்ச்சியே என்ற 'சிக்மன் புரைடின் ' சிந்தனை ஆதிக்கமும் , சார்ல்ஸ் டாவினின் கூர்ப்புக் கொள்கையும் அறிந்தும் அறியாமலும் இரண்டறக் கலந்த கோட்பாடுகளாகவே (முதலாளித்துவமும்  , கம்பியூனிசமும் ) இருக்கின்றன . என்ற முடிவிற்கு எம்மால் வரமுடியும் .

                                                                          இந்த விடயத்தை ஆராய முன் இன்னும் ஒரு விடயத்தை விளக்க வேண்டிய தேவை 
எனக்கிருக்கின்றது . அது ஒரு கேள்விக்கான விடையாய் வந்து எம்மை ஆச்சரியப் படுத்தும் . அந்தக் கேள்வி இதுதான் ' மனித குல வரலாற்றின் மிகப் பழமையான தொழில் எது ?' என்ற வினாவே 
அதுவாகும் . பல வருடங்களுக்கு முன்னர் உளவுத்துறை சம்பந்தமான ஒரு ஆய்வு நூலில் இது பற்றி நான் படித்துள்ளேன் . அதன் விடையைக் கண்டு நான் சற்று ஆச்சரியம் அடைந்தேன் .

     அதன் விடை இவ்வாறு இருந்தது 1. விபச்சாரம் , 2. உளவு வேலை  என்பதாக இருந்தது . அதிலும் இந்த இரண்டு தொழில்களிலும் வெற்றிகரமாக இயங்கியவர்கள் பெண்கள் என்பதாகவும் , பல்வேறுபட்ட நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இன்றும் இலாபகரமாக இயங்கும் நிறுவனங்கள் இவைதான் என்றும் அதில் குறிப்பிடப் பட்டிருந்தது .

                                                                                                                                         (தொடரும் ...)



No comments:

Post a Comment