Tuesday, January 15, 2013

இது உங்கள் சிந்தனைக்கு .



* நான் யார் ?
*எங்கிருந்து வந்தேன் ?
*எதற்காக வந்தேன் ?
*எங்கே செல்லப் போகின்றேன் ?
                                        இந்த வினாக்களுக்கு மனிதன் சரியான விடை தேடாத வரை அவனால் உலகம் பற்றியும் அதில் அவனது வாழ்வு குறித்தும் தீர்க்கமான முடிவிற்கு வரமுடியாது .இந்த தேடல் சரியாக அமையாத நிலையில் , அல்லது தெளிவற்ற நிலையில் மனித வாழ்வு ,அவனை ஒரு பேசும் விலங்கு என்ற நிலைக்குள் சுழல வைத்து விடும் .

                                         அறிவியல் ரீதியாகவும் , தொழில் நுட்ப ரீதியாகவும் ,அவனது அடைவுகள் பல மடங்காக அதிகரித்த போதும் ;அவனது தேடல்களில் மேற்கூறிய வினாக்களுக்கு விடை காணாதபோது நாகரீகம் என்ற பெயரில் வேட்டைப் பண்புள்ள சுயநலவாத ஆதிக்க வாழ்வையே அவனால் உருவாக்க 
முடியும் .

                     
                     இங்கு நான் ,எனது ,என்னுடைய , எனக்காக ,என்ற வாதங்களே முன்னுரிமை பெறும் . அவ்வாறான மனிதன் தனது சுயநலத்தின் தேவைக்கான சட்டங்களையும் ,யாப்புகளையும் கொண்டு ஒரு கலாச்சாரத்தை சமூக மயப் படுத்துவான் . அந்த அதிகாரம் மக்களுக்காக எனது சேவை என்பதாக இருக்காது . மாற்றமாக எனக்காகவே மக்கள் என்ற அழுத்தமான சர்வாதிகாரத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ மக்கள் மீது திணித்து ,ஒரு அடிமைத்துவ அரசியலை ஏற்படுத்தி நிற்கும் .


                        இன்று உலகை ஆளும் முதலாளித்துவத்தின் தவிர்க்க முடியாத இயங்கு விதியும் இதுதான் .நேற்று அதை எதிர்க்க எழுந்து பூர்சுவாக்களை (முதலாளிகளை ) அழிப்போம் என்று கங்கணம் கட்டி ,பின்னர் பேயை விரட்டு வந்து பிசாசாய் மாறிய கம்யூனிசம், பாட்டாளி வர்க்க சர்வாதிகார வடிவம் எடுத்த காரணமும் இது தான் . 

     நான் மேலே தந்த வினாக்களுக்கு மிகச் சரியான விடையை புரிந்த மனிதர்களால் தான் வாழ்வு பற்றிய சரியான கண்ணோட்டத்தை சொல்ல முடியும் . 





No comments:

Post a Comment