Friday, January 4, 2013

இதுதான் இஸ்லாத்தின் அகீதா வேலி இட்ட சமூகம் .



           அந்த சஹாபிப்  பெண்மணி அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) அவர்களின் சபைக்கு வந்து தான் விபச்சாரம் செய்துவிட்டேன் அதற்கான தண்டனையை தருமாறு கேட்கிறாள் ! இவ்வளவிற்கும் அவள் திருமணமானவள் . இஸ்லாத்தின் தண்டனை அதற்கு மரண தண்டனை ; அதுவும் பகிரங்கமாக கல்லால் அடித்துக் கொலை செய்ய வேண்டும் . அந்தப் பெண்மணி கர்ப்பம் தரித்து வேறு இருக்கிறாள்.

                                                                 அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) விடயத்தை உறுதிப்படுத்திய நிலையில் அந்தப் பெண் கருத்தரித்திருந்த காரணத்தினால் , குழந்தை பிறந்தவுடன் தண்டனை நிறைவேற்றப்படும் ;என்று கூறி அனுப்பி விடுகிறார் . சில நேரம் யாரும் அறியாமல் சாட்சிகள் அற்ற நிலையில் செய்யப்பட்ட தவறு இந்த இடைப்பட்ட காலத்தில் கூட தனது நிலைப்பாட்டை மாற்றியிருக்கலாம் .
                                                    
                                          ஆனால் அந்தப் பெண்மணி குழந்தையை பெற்றெடுத்து ,அந்த கைக் குழந்தையை சுமந்தவளாக தனக்கான தண்டனையை வேண்டி மீண்டும் வருகிறாள் ! குழந்தை பால்குடி மறக்க வேண்டும் என மீண்டும் கால அவகாசம் கொடுக்கப்படுகின்றது . தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது .ஆனால் அந்தப் பெண்மணி சில கால நகர்வின் பின் மீண்டும் தனது குழந்தையின் கையில் ஒரு ரொட்டித் துண்டை கொடுத்தவளாக தண்டனையை வேண்டி விரைகிறாள் .

                                                                
                                      இறை திருப்திக்காய் தன்னை தண்டனை எனும் மரணத்தின் மூலம் தூய்மை படுத்த வேண்டும் ,இந்த ஒரே எதிர்பார்ப்பின் முன் அவளின் உலக வாழ்வு அவளுக்கு சுமையாகி மரணம் சுகமாகியது . குற்றவாளி தானே முன்வந்து கேட்டுப் பெற துடித்த தண்டனை ! ஒரு சமூகம் எப்படி இருக்க வேண்டும் என்ற பண்பிற்கு ஒரு பெண்மணி எடுத்துக் காட்டாய் ஆகிறாள் . அந்த சமூகத்தின் நிலை உணர்த்த இது ஒரு உதாரணம் .ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் . அந்தப் பிள்ளையை ஒருவர் பொறுப்பெடுக்கிறார் . தண்டனையும் நிறைவேற்றப் படுகின்றது . கற்கள் சிதைக்கும் மண்டையோட்டில் இருந்து சீறிப் பாய்கின்றது இரத்தம் . இதுதான் இஸ்லாத்தின் அகீதா வேலி இட்ட சமூகம் . 

                                                                  
                                     

No comments:

Post a Comment