Thursday, January 17, 2013

'பிர் அவ் நிசத்தின் ' ,நும்ரூதிசத்தின் வாரிசுகள் யார் ?

 

                     அதிகாரம் , ஆணவம் ,ஆதிக்க வெறி என்பன அடுத்த மனிதனை இழிவாக கருத வைக்கின்றது .நான் என்ற மமதையில் தனக்கு மண்டியிடச் சொல்கிறான் .தனது கட்டளைகளை அவர்கள் மீது திணிக்கவும் ,தன் மன இச்சைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் அடுத்த மனிதர்களை பயன் படுத்தவும் துணிகின்றான் .


                            சிறிது ஆதிக்கமோ ,செல்வமோ,புத்திக் கூர்மையோ ,சாதுரியமோ அல்லது ஏதேனும் ஒருவகை திறமையோ பெற்றிருப்போர் அனேகமாக வரம்புகளை மீறி அனைத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்தவே விரும்புகின்றனர் .

 "நான்தான் உங்களின் மாபெரும் இறைவன் (அல் குர் ஆன் 79:24)
                           
        உங்களுக்கு என்னைத் தவிர இன்னொரு இறைவன் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை (அல் குர் ஆன் 28:38)
                                    

                           என்று 'பிர் அவ்ன் ' தன் அரசுரிமை ,படைபலம் ஆகியவற்றின் செருக்கில் எகிப்து நாட்டு மக்கள் முன் கூறியதற்கான காரணம் இது தான் . மூஸா (அலை ) அவர்களின் எந்த ஒரு கருத்தையும் அவன் ஏற்றுக் கொள்ளவில்லை . பதிலாக அல்லாஹ்வோடு (சுப ) தனது போர்ப் பிரகடனத்தை பின்வருமாறு செய்கிறான் . 

                                     "நீர் என்னைத் தவிர வேறு எவரையும் வணக்கத்திற்குரியவனாக ஏற்றுக் கொண்டால் ,சிறையில் வாடி வதங்கிக் கிடப்பவர்களுடன்  உம்மையும் நான் சேர்த்துவிடுவேன் "   (அல் குர் ஆன் 26:29)
                                     
                                    

                                என்று எச்சரித்ததோடு மட்டுமல்லாமல் ஒரு கோபுரத்தை கட்டி அதன் உச்சி வரை சென்று வானத்தை நோக்கி அம்பெய்கிறான் . அவன் முட்டாள் அல்ல அது ஆணவம் கலந்த வீம்பு 
இதைப் போலவே 'நும்ரூதும் ' இப்ராகிம் (அலை ) உடன் தர்க்கிக்கிறான் .

                                      ..... "எவன் வாழ்வையும் மரணத்தையும் அளிக்கிறானோ அவனே  என்னுடைய இறைவன்" என இப்ராகிம் கூறியதற்கு , (இரண்டு   மனிதர்களை அழைத்து ஒருவனை வெட்டிக் கொலை செய்து அடுத்த மனிதனை சென்று விடு எனக் கூறி விட்டு )       "நானும்   வாழ்வையும் மரணத்தையும் அளிக்கின்றேனே !" என்று கூறினான்.   அதற்கு இப்ராகிம் " அப்படியானால் அல்லாஹ் சூரியனை கிழக்கில்  இருந்து உதிக்கச் செய்கிறான் .நீ அதை சற்று மேற்கில் இருந்து   உதிக்கச் செய் " என்று கூறினார் " (இதைக் கேட்ட மாத்திரத்தில் )   சத்தியத்தை மறுத்த அவன் திகைத்துப் போனான் .
                                                                                 (அல் குர் ஆன் 2:258)
                                     
      
          இவ்வாறு தனது வல்லமையின் எல்லையை உணர்ந்த போதும்,அவனது மமதை இப்ராகிம் (அலை ) அவர்களை நெருப்புக் குண்டத்துள் வீசச் சொல்கிறது  . வஹி தெளிவு படுத்திய இத்தகு பண்புள்ள மனிதர்கள் பலர்  இன்னும் எம்மைச் சூழ இருக்கிறார்கள் . இந்த 'பிர் அவ் நிசத்தின் ' ,நும்ரூதிசத்தின் வாரிசுகளில் ஒருவன்தான் பசர் அல் அசாத் எனும் கொடியவன் என்றால் அது மிகையான கருத்தல்ல .                             
 
                                      
                                    
                                    
                                     
                                    
                                   

  
                                  

No comments:

Post a Comment