Thursday, January 10, 2013

சவூதியின் அனுசரணையில் மதவாத பெரும்பான்மைகளுக்கு விருந்தே ரிசானா நபீக்கின் மரண தண்டனை .



                                      ஆவேசமான பார்வை நிரபராதியையும் குற்றவாளியாக்கும் , அனுதாபமான பார்வை குற்றவாளியையும் நிரபராதியாக்கும் . ரிசானா நபீக்கின் ஒரு விடயத்தில்  ஏறத்தாள பல்வேறுபட்ட சுயநல பார்வைகள் புகுந்து விளையாடியுள்ளன , விளையாடுகின்றன . ரிசானா ரபீக்கின் பொறுப்பில் இருந்த குழந்தை இறந்த விடயத்தில் கொலையா தற்செயலா? எனும் சந்தேகம் சாட்சிகள் மூலம் சரியாக நிரூபிக்கப் படாத நிலையில் ,  அசமந்தமான இந்த நடவடிக்கை,   குறிப்பாக  வழமையாகவே கொட்டப்படும்  காழ்ப்புணர்ச்சி கோணத்தில் மனித உரிமை மீறல் எனும் பெயரில்  இஸ்லாத்தின் சிவில் ,கிரிமினல் சட்டங்களின் மீது தமது துவேஷத்தை துப்பும் மதவாத அரசியலுக்கு  ஆதாரமாக ஆகி விட்டது. 
                                                      
           சரி  இந்த மத வாதிகளிடமும்  ஒரு கேள்வி. புனித பூமி கோட்பாட்டில்  முஸ்லீம்களின் வாழ்வை அரசியல் ,பொருளாதார நெருக்கடிக்குள்ளாக்கி நாளை எமக்கும் மியன்மார் போல் நடக்குமா ?  என உளவியல் ரீதியில்  தினமும் உயிரோடு கொல்லும் இவர்களின் மதவாத கோட்பாட்டில் மட்டும் மனித உரிமை மீறப்படவில்லையா ? 
                                              
                   இந்த காட்டுச் சட்டத்தை அரசியலாக்கி மகிழும் இந்த கூட்டம் ரிசானா நபீக் விவகாரத்தில் கதறி அழுவது அப்பட்டமான முதலைக் கண்ணீரே தவிர வேறில்லை . சவூதியின் அனுசரணையில்  இந்த புனித பூமி கோட்பாட்டோடு வெறிகொண்டலையும்   புழுகுப் பூனைகளுக்கு சுவையான விருந்துதான் இந்த சம்பவம் . தவிர இந்த விடயத்தில் இஸ்லாத்தை இணைத்துப் பார்க்கும் தகுதி இவர்களுக்கில்லை  .
                                             

No comments:

Post a Comment