Friday, January 11, 2013

தொடரும் பெண்கள் மீதான வன்முறைகள் தீர்வு என்ன ? (பகுதி 02)



சமூகக் கோட்பாட்டில் பெண்கள் ஒரு சுருக்க வரலாற்றுப் 
பார்வை .

                        வரலாற்று ரீதியில் பெண்கள் தொடர்பான பல்வேறு சமூகங்களின் கருத்துக்களை முதலில் நாங்கள் ஆராய்வது பொருத்தமானது . ஏனென்றால் இந்த ஆய்வின் மூலம் இன்றைய சூழலில் அவ்வாறான பார்வைகள் இருக்கின்றதா என்பதை எம்மால் உணர்ந்து கொள்ள முடியும் .


கிரேக்க சமூகம் பெண்களைப் பற்றி எவ்வாறு கருதியது ?
                'பண்டோரா ' எனும் பெண்ணே முதல் பெண் , இவளே எல்லா தீமைகளுக்கும் ஆணி வேராகும் . இந்த அடிப்படையில் பெண்களிடமிருந்தே எல்லாத் தீமைகளும் உற்பத்தியாகின்றன . அவள் மனிதப் பிறவியே அல்ல . இந்த பார்வையின் கீழ் அவர்கள் பெண்களை விலங்குகளை விட கேவலமாக நடாத்தினார்கள் . அங்கு பெண்களின் உரிமை பற்றியோ ,சலுகை பற்றியோ எவ்வித பேச்சுக்கும் இடமிருக்கவில்லை , எவ்வளவு மோசமாக  கேவலப் படுத்த முடியுமோ அவ்வளவு மோசமாக கேவலப் படுத்தினார்கள் .

                             ஆனால் காலப் போக்கில் பெண்கள் தொடர்பான இவர்களது அணுகுமுறைகளில் சற்று மாற்றம் ஏற்பட்டது அதுவும் சிலகாலம்தான் ; மீண்டும்  கிரேக்கம் நாகரீகத்தின் உச்சமாக தன்னை காட்டி நின்ற இன்னொரு பொழுதில் காமம்  என்ற உணர்வு கட்டுப்பாடிழந்து விபச்சாரம் கட்டாய சேவையாகியது . திருமணம் என்பது ஒரு வகையான அனாவசியமான கட்டுப்பாடு என எண்ணினார்கள் .

                                         இந்த மாற்றத்தில் கிரேக்கத்தில் பெண்ணுக்கான தரத்தை கடவுள் அந்தஸ்தில் உயர்த்தினார்கள் . அதுவும் சாதாரண கடவுள் அல்ல ; காதலுக்கே உரிய கடவுள் . அவளின் பெயர் 
'APHRODITE ' இவள் ஒரு ஆண் கடவுளின் மணைவி .அத்தோடு இன்னும் மூன்று ஆண் கடவுள்களோடு காதல் தொடர்பு வேறு (கள்ளமாக ) வைத்திருந்தாள் . இந்த தகாத தொடர்பால் 'CUPID' எனும் இன்னொரு கடவுளும் பிறந்தார் என தொடர்கிறது அந்த அசிங்கப் புராணம் .



ரோம் சமூகம் பெண்களைப் பற்றி எவ்வாறு கருதியது ?    
                                                        இவர்களது அணுகு முறையும் கிரேக்கர்களைவிட சற்றும் குறைந்ததாக இருக்க வில்லை . 'பெண்ணுக்கு ஆன்மாவே இல்லை ' என்பதே இவர்களின் தத்துவம் .பின்னர் கிரேக்கர்களை போலவே ஒரு தளர்வான மனோ நிலையில் சில காலம் வாழ்ந்தார்கள் . இவர்களது வேதாளமும்  கிரேக்கர்களைப் போல்  சற்று வித்தியாசமாக முருங்கை மரத்தில் ஏறியது .

                                                       ' பெண்கள் அனுபவித்து சுவைக்கவே ' என்ற கொள்கை இங்கு நடைமுறை ஆகியது . விளைவு அவர்கள் பாலியல் கருவியாகி (SEX MACHINES ) பாவிக்கப் பட்டார்கள் . அவர்களின் இந்த அடாத செயல்களுக்கு ஒரு வரலாற்றுச் சம்பவம் இதோ .

                                                                              'ப்ளோர ' எனும் ஒரு விளையாட்டு ; இதில் பெண்கள் முழு நிர்வாணமாக ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்வார்கள் . ஆண்கள் அந்த விளையாட்டை கண்டு களிப்பார்கள் . இங்கு பெண்கள் பல ஆண்களை அடக்கி ஆண்டார்கள் அதிகாரத்தால் அல்ல , உரிமைகளால் அல்ல , மாற்றமாக தங்கள் உடல்களால் !

                                                                                  (தொடரும் ....)    



                                                                                                                                                                                                                                   
                                                                                 

No comments:

Post a Comment