Monday, January 7, 2013

' அஷ்ஷாம் ' சத்தியத்தின் மீள் வரவிற்காய் இரத்தத்தால் கழுவப்படும் தியாக நிலம் .



                              கெரில்லா  போரியல்யுக்திகளை தாண்டிய மரபுப் போரியலை உதாரணப்படுத்தும் களமாகவே இன்று சிரியா  அமைந்துள்ளது . ஆணவமான ஒரு அரச பயங்கர வாதத்தை எதிர்த்ததோடு மட்டுமல்லாமல் இஸ்லாம் தங்களை ஆளவேண்டும் என்ற மக்களின் நியாயமான எதிர்பார்ப்பை தடுத்தல் ,அழித்தல் , தவிடு பொடியாக்கள், என்ற தெளிவான முடிவோடு தாகூதிய அதிகாரம் இங்கு களமிறங்கியது .

                                  
                                   இழப்புக்களால் அந்த தூய போராட்டம் சோர்ந்து போய்விடவில்லை . அல்லாஹ்வின் உதவியும் அந்த  இலட்சியச் சமரில் இரண்டறக் கலந்தது . சிரிய இராணுவக் கட்டமைப்பின் பலம் மிக்க படைப்பிரிவுகள் அதன்' ஜெனரல் ' தரத்தில் உள்ள அதிகாரிகள் , மற்றும் ஆயுத தளபாடங்கள்  சகிதம் ஆரம்பத்திலேயே மக்கள் தரப்புடன்  சத்தியத்தின் காவலர்களாக களமிறங்கினர் . விளைவு அரச யுத்த இயந்திரம் சாவகாசமான தனது  மக்கள் அழிப்பு நிலையை மீறி தற்காப்பு நிலையெடுத்து பின்வாங்கியது .


                         மக்கள் புரட்சிக்கு ஆதரவான இந்த திருப்பம் முஸ்லீம் உலகு எதிர்கொண்ட பல புரட்சிகள், களமாடல்களுடன் ஒப்பிடும் போது விரைவான ,அதே நேரம் தெளிவான தள மாற்ற வடிவத்தை பெற்றுத் தந்தது . ஏனெனில் ஒரு பலம் மிக்க மரபுப் படையணிக்கு எதிராக  இன்னொரு தகுதி வாய்ந்த மரபுச் சமரணி களமாடல் என்பது குறுகிய கால உள்நாட்டு யுத்தத்தில் நடக்க முடியாத ஒரு விடயம் .    பலம் வாய்ந்த சிரிய அரச இராணுவம் தனது நிலைகளை விட்டு அவசரமாக பின்வாங்கியதன் காரணம் இதுதான் . தனக்கு நிகரான மரபுச் சமரணியை போரின் ஆரம்பத்தில் இருந்தே எதிர் கொண்டதே . 

                                                 
                                                              ஒரு சிறந்த கெரில்லா அணியின் ஆற்றல் மரபு முறை இராணுவத்தை பொறிமுறையான தாக்குதல் உத்திகள் மூலம் நிலைகுலையச் செய்வதோடு ,அதன் மனோவலிமையை சிறிது சிறிதாக குறைப்பதன் ஊடான உளவியல் தாக்கத்தின் மூலம் ,போரியல் ஆற்றலை சிதைத்து கால ஓட்டத்தில் சடுதியான ஒரு கூட்டுத் தாக்குதல் மூலம் எதிரியை பின் வாங்கச் செய்வதே . ஆனால் சிரியாவில் அப்படியான களமாடல் வடிவம் (ஆங்காங்கு நடந்த சில தாக்குதல் நடவடிக்கைகள் தவிர )
பெரிதாக இருக்கவில்லை .


                                                    இங்கு இன்னொரு கேள்விக்கும் நாம் விடைதேட வேண்டும் அது சிரிய மக்கள் அவசரமாக இராணுவ தாரிகளாக பரினமித்ததன் மர்மம் என்ன ? என்பதே அந்த வினாவாகும் .உண்மை என்னவென்றால் அங்கு பாடசாலைக் கல்வி முடிந்தவுடன் இரண்டு வருடங்கள் இராணுவத்தில் கட்டாய சேவை என்பதை அது சட்டமாக கொண்டியங்கிய நாடாகும் என்பதே ஆகும் .


                                                              இங்கு புரிந்து கொள்ள வேண்டிய உண்மை என்னவென்றால் மேற்குலகு போடநினைக்கும் அரசியல் , இராணுவ கடிவாளங்களை புறந்தள்ளிய ஒரு புரட்சியே அங்கு பரிணமித்துள்ளது .   மேலும்     மக்கள் தரப்பில் இருந்து களமாடும் 'ஜெனரல்களின் ' வார்த்தைகளில் பண்படுத்தப்பட்ட இஸ்லாமிய சிந்தனா வாதத்தின் தெளிவான கருத்துக்களை காண முடிகின்றது .           
அந்த நுணுக்கமான பன் படுத்தல்கள் இஸ்லாம் தொடர்பான சிரிய மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு மிகச் சரியாக பயன்பட்டுள்ளது .
1. வளம் மிக்க நிலம் .
 2. இஸ்லாத்தை நேசிக்கும் மக்கள் + தலைமைகள் .
 3. எதையும் எதிர்கொள்ள தயாரான இராணுவம் .
                                                                      இன்ஷா அல்லாஹ் எதிர்காலம் இனி இஸ்லாத்திற்கே என்பதற்கு மிகச் சிறந்த ஆதாரமாகும் . அல்லாஹு அக்பர்.

 

                             
                                           

1 comment: