Saturday, January 5, 2013

முக்கோண 'தாகூத்களின்' சவால்களுக்கு மத்தியிலும் நிமிர்ந்தெழும் இஸ்லாத்தின் கொடி .



          சிரியாவின் போர்க்களத்தில் இதுவரை ஏறத்தாள 60,000 மனித உயிர்கள் பலியான நிலையிலும் , போர் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது . அடக்குமுறை செய்து ஆண்ட 'தாக்கூத் ' வீழ்த்தப் படுவது மட்டுமல்ல இந்தப்  போராட்டத்தின் இலக்கு . மீண்டும் முஸ்லீம் உம்மத்தை ஒரே தலைமையின் கீழ் ஒன்றிணைக்கும் இஸ்லாமிய கிலாபா அரசை ஏற்படுத்துவதே ; எனும் தெளிவான அழைப்பும் அங்கு வெளிப்படுத்தப் படுகின்றது . இந்தக் கருத்து இன்றைய உலகின் ஆதிக்க சக்தியாய் வீற்றிருக்கும் முதலாளித்துவத்துக்கு பாரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .

                                       போராளிகள் தரப்பில் இருந்து நிமிர்ந்து நின்று காற்றில் ஆடும் கறுப்புக் கொடிகளும் , வெள்ளைக் கொடிகளும் எதோ எதேச்சையான தேர்வுகள் அல்ல . மாற்றமாக அவைதான் சுன்னாவின் வழி வந்த இஸ்லாத்தின் கொடிகள் .ஒரு இயக்கத்திற்கோ,அமைப்பிற்கோ சொந்தமானதல்ல  . வெண்மை கிலாபா அரசின்  ஆட்சிக் கொடியின் நிறம்  , கருமை அது இஸ்லாமிய இராணுவத்தின் அதிகார பூர்வமான கொடி . முழு முஸ்லீம் உம்மத்தையும் பிரதிபளித்தே  அங்கு போராட்டம் நடக்கின்றது . 
                                        

                                                       மேலும் ஒட்டு மொத்த மனித சமூகத்திற்கும் உயர்வான இறைவனின் வழிமுறையை பெற்றுக் கொடுக்கும் போராட்டமே அங்கு நடக்கின்றது . இஸ்லாம் என்றால் வன்முறை , முஸ்லீம் என்றால் பயங்கரவாதி ! என்ற குருட்டு முடிவில் மிரண்ட பார்வை பார்த்த உலகம் இறைவன் நாடினால் இதுதாண்டா அரசு , இதுதாண்டா நீதியின்  வடிவம் என்பதை உணர்ந்து கொள்ளும் நாள் அதிக தூரத்தில் இல்லை .

                                                     ஆரம்பத்தில் சிரியா  மக்களுக்கு  ஆதரவாக   முதலைக்  கண்ணீர் வடித்த  மேற்கு   இப்போது அடக்கி வாசிக்க தொடங்கி விட்டது  .தாம் தொடக்கி வைத்த  அரேபிய வசந்தத்தின் சிரியாவின் வடிவம் சூறாவளியாக சுழன்றடித்து , தமது முதலாளித்துவக் கொள்கைக்கே ஆப்பாகி விடுமோ ?என்ற நியாயமான அச்சமே அதற்கு காரணமாகும் . 
 
                           இப்போது மேற்கின் ஒரே குறி என்ன விலை கொடுத்தாவது சிரியாவில் ஒரு ஜனநாயக தேசிய அரசொன்றை நிறுவ வேண்டும் என்பதேயாகும் . கொடுங்கோலன் பசர் அல் அசாத் உடன் கூட ஒரு உடன்பாடு செய்வதில் தவறில்லை என்ற முடிவிற்குக் கூட மேற்கு வரலாம் . அதன் முன்னறிவிப்புதான் சிரிய விவகாரம் தொடர்பில் அமெரிக்கா ரஷ்யாவுடன் கூட்டுச் சேர்ந்திருப்பதாகும் . அமெரிக்க + ரஷ்ய + அசாத்  எனும் முக்கூட்டு வைரஸ்  வக்சின் சிலவேளை அங்கு மக்களுக்கு எதிராக பிரயோகிக்கப் படலாம் .  இப்போது பசர் அல் அசாத் பாவிக்கும் 'கெமிக்கல் வெபனை ' விட அது ஆபத்தானது . ஆனால் அசத்தியம் நிச்சயம் அழிந்து போவதே .
                                                            


No comments:

Post a Comment