Wednesday, January 2, 2013

அராபிய வசந்தமும் 'ஷாமில்' வைக்கப் பட்ட ஆப்பும் .(சிரியா விவகாரத்தில் மீடியாக்களின் திடீர் மௌன மொழி ஏன் ? ஒரு பார்வை .)



                     மிக நீண்ட காலமாக  அநீதமான இரத்த வரலாற்றை நியாயச் சாயத்தில் மையிட்ட பேனாக்கள் தந்த  மீடியா வரிகளில் உலகம் பயங்கர வாத முத்திரையை இஸ்லாத்தின்  மீது பதித்து முற்றாக சுருங்கித்தான் போனது .

  பாலஸ்தீன வரலாறு சியோனிசத் திரைகளில் இஸ்ரேலிய நியாயங்களில் மானபங்கம் செய்யப்பட்டது .காஸ்மீரில் இரத்த வரிகளில் எழுதப்படும் கண்ணீர் கதை இந்திய தேசியத்தின் சுத்த வரிகளில் தீவிர வாதமாக நியாயக் கதை பேசியது .

  
       ஆப்கானின் அற்புத வரலாறு முதலாளித்துவ அன்பளிப்பில் அமெரிக்க சேலை கட்டி' R A M B O'பார்ட் 3 ஆக திரையிடப்பட  ,"கடாபிசம் " பசுமைப் புரட்சியாக வசந்த காலம் பேச , "பாத் " சோசலிசத்தின் தேசிய நிழலின் கீழ் மக்களை அழைத்து   'சதாம் ' சிங்கமாக  கர்ஜித்தார்  .

   அந்த சாக்கடைகள் சந்தனமாக்கப் பட்டு இந்த முஸ்லீம் உம்மத்தின்மீதும் பலாத்காரமாக தெளிக்கப் பட்டது .கருத்தியல் போராட்டங்கள் கொதிக்கும் உணர்வுகளால் அவசரமாக் மீறப்பட தற்காப்பு வேலிக்குள் மட்டுமே 'ஜிஹாத் ' முடக்கப் பட்டு முன்னெடுக்கப் பட்டது .

                 எதிரிக்கு எதிரி நண்பன் தத்துவம் ஏகமனதாக இந்த உம்மத்தால் ஜீரனிக்கப் பட பேயை  விரட்ட பிசாசோடு கூட்டுச் சேரும் கைக்கூலித்தனம் காலத்தின் தேவையாகியது !சத்துரு தோழனாகி எம் நிலங்களில் 'டென்ட் 'அடித்தது. வியாதியையே முஸ்லீம் உம்மத் மருந்தாக்கியது .
     
 வியாபித்த வைரசோடு விடுதலைக்கு வழிதேட, அரேபிய வசந்தத்தை அந்த 'தாகூதே' தந்தான். அதில் 'திமோகிரசி ' ஒரே தீர்வாக்கப்பட இஸ்லாம் அங்கு சமாளிப்பாக ஒரு பூசுபொருளாகியது ! அது தான் நவ காலனித்துவத்தின் மூன்றாம் பாகம் .

      சுரண்டல் தத்துவத்தின் இலாப அறுவடை அமோகமாக நடக்க திட்டமிட்ட பாலில் பழங்களும் வீழ்ந்தன .தேசியவாதமும் , மதச் சார்பின்மையும் மார்க்க நியாயத்தில் மக்கள் மயமாகியது. அதில் இறைவனின் மார்க்கம் முன்னுரிமை அங்கமாம் !!!

 'ஷாமிலும் ' கனியும் என  முதலாளித்துவம்  காத்திருக்க , அங்கு வெள்ளை எழுத்துக்களில் கருப்படித்த அந்த கொடிகள், இவர்களை அச்சப்படுத்தி  சுயநல வரலாற்றின் நாளைய முற்றுப்புள்ளியை அதிர்ச்சி கரமாக முன்னறிவிப்பு செய்தது .இன்று மீடியாக்களின் திடீர்  மௌன மொழிகளில் அந்த ஆப்பு அப்பட்டமாக தெரிகின்றது . உங்களுக்கும் புரிகின்றதா ?

    
  

 
   





 








No comments:

Post a Comment