Wednesday, October 3, 2012

'குடைக்குள் மழை'


'குடைக்குள் மழை' இந்த தலைப்பு ஒரு நகைப்புக்குரியதாக இருக்கும் . ஆனால் விடயம் என்னவென்றால் எம் முஸ்லீம் சமூகத்தின் கேடயமான அறிஞர் வட்டம் தவறான எடுகோள்களில் முஸ்லீம் சமூகத்தை சிந்திக்கப்பணிக்கின்றது. அது தான் 'குடைக்குள் மழை' அதுவும் சாதாரண மழை அல்ல இடியோடு கூடிய 
தொடர் மழை ! 

                  'செக்யுலரிசம் ' இந்த வார்த்தை நாம்  அறியாது அமுல் நடாத்தி வருவது இப்படி சொன்னாலும் புரியாது ,இன்னும் தெளிவாக சொன்னால் உலகக் கல்வி ,மார்க்கக் கல்வி என பிரிப்பது ஏன்? என்றாவது நாம் எமக்குள் 
கேள்விகேட்டிருப்போமா ? (ஆனால் அதன் விளைவுகளை வகை தொகை இன்றி அனுபவிக்கிறோம் .) அவ்வாறு பிரிப்பது சரியா ? சரி என்றால் இந்த    'செக்யுலரிசம் '  சரி ., பிழை என்றால் இந்த    'செக்யுலரிசம் 'பிழை. எமக்குள் இருக்கும் தவறே நாம் பருகுவது நஞ்சு எனப்புரிவதுமில்லை ! யாரால் நஞ்சு தரப்பட்டது ? என ஆராய்வதுமில்லை .

                                                                      இந்த'செக்யுலரிசத்தை ' தமிழில் மொழி பெயர்த்தால் மதச்சார்பின்மை என பொருள் கொள்ளாலாம் ஆனால் எம்மதமும் சம்மதம் என்பதும் இதில் அடங்கும் ,கடவுள் கொள்கையே அற்ற நாஸ்திகமும் இதில் அடங்கும் , இந்த' செக்யுலரிசம் ' எனும் சிந்தனை குறிக்க வருவது ஒவ்வொருவருக்கும் தனித்தனி மத சுதந்திரம் என்பதல்ல.

 மாறாக அரசியல் ,சமூகவியல் , பொருளியல் , கலாச்சாரம் என்பவற்றில் மதம் தலையிட முடியாது . அதற்கு அதிகாரமில்லை எனும் வாதத்தையே ! இங்கிருந்துதான் உலகக்கல்வி, மார்க்கக் கல்வி எனும் பிரிகோட்டை எமது சமூகமும் ஆதாரப்படுத்துகின்றது . இது தான் கிறிஸ்தவ மேற்குலகின் வாழ்க்கை முறை .

    இந்தப்பார்வை யூடாக திட்டமிட்டு பிரிக்கப்பட்டதே எமது கல்வி முறை அதிலும்  மார்க்கக்கல்வி எனும் 'மதரசா' சிஸ்டம் ,உலகம் தொடர்பான இஸ்லாத்தின் பார்வை ,அதில் எமது சரியான பங்கு இவை எல்லாவற்றையும் தவறாகக் காட்டும். இந்த சிஸ்டம் மாற்றப்பட  வேண்டும் . புரோகித பூச்சாண்டித்தனத்தின் உட்பத்திக்கூடங்களாக மாறியுள்ள இந்த மதரசா யுகம்  இரட்டை தன்மை யுடைய ( உலகம் , மார்க்கம் ) வெளியீடுகளை தர , அவை வெளியில் வந்து உலகத்தை பார்த்தால் அது குப்பாரின் அதிகார ஆதிக்க யுகம் ! 

                                                                                                  இப்போது அந்த வெளியீடுகளில் ஒருதரப்பு இஸ்லாத்தை ஒரு கருங்கல்லாக காட்டி சமூகத்தை அதில் வந்து முட்டிக்கொள்ள சொல்கிறார்கள் ,சிலபோது சமூகத்தை நோக்கி வீசியும் அடிக்கிறார்கள் ! இன்னொரு தரப்பு இஸ்லாத்தை 'மல்டி பிளே எலாஸ்டிக் போமட் ' இல் மாற்றி குப்பார் இழுக்கும் இழுவைக்கு எல்லாம் நெகிழ்ந்து கொடுக்கும் வடிவமாகவும் மாற்றிவிட்டார்கள்.இதுதான் நான் சொல்லும் குடைக்குள் மழை . இந்த 'செக்யுலரிசத்தை' விட்டு சிந்திக்காதவரை இந்த மழை எகிப்து ,இலங்கை ,இந்தியா உட்பட எங்கும் 
ஓயப்போவதில்லை . 



                                                                                                     

No comments:

Post a Comment