Friday, October 19, 2012

நேற்றைய பொன்குடம் இன்று மண்குடமா ? இது தான் அடிவருடித்தன இஸ்லாமிய எழுச்சி !!



அன்று கடாபி லிபியாவில் உடைத்த போது அது பொற்குடம் ! இன்று இவர்கள் எகிப்திலும் 
துருக்கியிலும் உடைக்கும் போது அது மண் குடம் ! கடாபியும் குர் ஆனிலும் , கம்பியுநிசம் , ஜனநாயகத்திலும் , தனது சொந்த சரக்கிலும் இருந்து தான் 'கிரீன் புக்கை ' வைத்து பசுமை புரட்சியை செய்தார்! அதற்கு எதிரானவர்களை மட்டுமே    கே.ஜி .பீ 
தனத்தோடு கிளஸ் நிகோகளால் சமாதி கட்டினார் . அதுவும் தன்னிறைவு பொருளாதாரத்தை நோக்கி லிபியாவை இட்ட
ுச்சென்றதாக அவருக்கு சார்பான விமர்சனங்களும் உண்டு . 
அப்படிப் பார்த்தால் இதுவும் வினைத்திறன் மிக்க அதிகாரம் 
தான் .

 அன்று இஸ்லாமிய சரீயாவின் சில விடயங்களில் அதற்கு எதிரான அவரது கடும் போக்கு இறை மறுப்பாக இனம் காணப்பட்டது . அப்போது கூறினோம் வஹி பூர்த்தி ஆக்கப்பட்ட பின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு , சூழ்நிலை , காலத்திற்கு ஒத்துப்போதல் 
என்பன ஹராம் ! எனவும் இப்போதைய எகிப்து ,துருக்கி என்பவற்றின் நிலைப்பாடு வினைத்திறன் ! எனவும் போற்றுகிறோம் . நாம் எங்கோ தவறு விடுகின்றோம்.

ஜனநாயகத்தின் சில பகுதிகள் இஸ்லாத்தோடு ஒத்துப்போகின்றது என்பதால் அது இஸ்லாம் எனக்கூறும் வார்த்தையை கூட நான் வேண்டாம் என்பதன் அர்த்தத்தை 
புரிந்து கொள்ளுங்கள் இஸ்லாமிய சரீயா காலத்துக்கு ஒவ்வாதது என தார்மீக விளக்கம் 
சொல்லும் ஒரு பயங்கரமான மனோ நிலைக்கு அது எம்மை தள்ளிவிட்டுள்ளது .

இஸ்லாத்தில் விடுதலை எனும் கருத்தியல் மனிதன் மனிதனுக்கு அடிமைப்பட்டு 
வாழ்வதை விட்டும் அல்லாஹ்வுக்கு அடிமைப்பட்டு வாழ்தல் என்பதே .ஜனநாயகத்தில் 
அது மனிதர்களால் மனிதர்களுக்கு மனித்தர்களுக்காக என வரைவிலக்கணப் படுத்தப்பட்டுள்ளது ! இறைவனின் சட்டத்திலும் அதிகாரத்திலும் அது தளர்வையும் ,மாற்றத்தையும் வேண்டும் போது மனிதக்கையாடல்களை வஹியின் மீது செலுத்தும் 
பாரதூரமான தவறை எம்மை செய்யத்தூண்டும்!


 ஆடை தொடர்பான சரீயா விதிகளையும் போதை தொடர்பான சரீயாவையும் நாம் இன்று மீறிநோமா ? இல்லையா ? 
இது எதனால் ? சமூக அங்கீகாரம் ,காலத்தின் தேவை , வஹியின் சட்டங்களை இந்த காலத்தின் தேவைகள் ஒரு' மியுசியப்பொருளாக' மாற்றிவிடும் என்பதற்கு இதை விட ஆதாரம் வேண்டுமா ?!! 



ஜாஹிலியா என்பது இப்போது தொழில் நுட்ப முன்னேற்றத்தாலும் ,தனது கவர்ச்சியான வடிவத்தாலும் எம்முன் நியாயப்படுத்தப்பட்டுள்ளது ?! ஆனால் அதனுடைய சாரமும் எதிர்பார்ப்பும் ஒன்றுதான் அது இறை வழிகாட்டலை புரிந்துகொள்ளாமை , சிலதை ஏற்று சிலதை புறக்கணிப்பது , அல்லது முற்றாக நிராகரிப்பது எனும் வடிவங்களே ! இந்த சிந்தனை மாற்றத்தின் கீழ் வினைத்திதிறமை மிக்க காலத்தின் தேவையாக முஸ்லீம்களாகிய எம்மை அது தழுவத் தூண்டுகின்றது .

1 comment:

  1. some muslim moment also try to acuar (riba)in islam
    # Egypt 4.8b loan take from IMF

    ReplyDelete