Tuesday, October 30, 2012

'ஆபரேஷன் கர்தாவும்' நவீன இஸ்லாமிய இராஜதந்திரமும் ஒரு ஒப்பீடு ..



இஸ்லாமிய வரலாற்றின் சில சம்பவங்கள் அதிகம் அறியப்படாதவை . இஸ்லாம் எழுச்சிமிக்க தீர்க்கமான மதீனா காலகட்டத்தில் இருந்த போது நடந்த இந்த சம்பவம் சுவையானது மட்டுமல்ல இதில்  அல்லாஹ்வின் தூதரது (ஸல் ) தெளிவான அரசியல், இராஜதந்திர , இராணுவ நகர்வுகளின் திட்டமிடல் பற்றி அதிசயிக்கவும்  வேண்டியுள்ளது .
 
        
                     'ஆபரேஷன் பத்ரின்' பின் 'ஆபரேஷன் உஹதுக்கு ' இடையில் நடந்த இந்த 'ஆபரேஷன் கர்தா' சிலவேளை குறைசிகளை வலுக்கட்டாயமாக உஹத் நோக்கி இழுத்து வரவும் காரணமாக இருக்கலாம் . இஸ்லாமிய இராணுவத்தின் வெற்றிகரமான இந்த இராணுவ நடவடிக்கை யுத்தம் என்பது கொல்வதற்கு அல்ல வெல்வதற்கே என்பதை ஒரு நாகரீகமாக உலகத்திற்கு எடுத்துக் காட்டிய  ஒரு சிறந்த ஆதாரமாகும் .

                                       

                         ஹிஜ்ரி 3 ஜமாதுல் ஆகிர்  இல் நடைபெற்ற அந்த சம்பவம் இதோ . பத்ரின் தோல்வி குறைசிகளை உலுக்கியிருந்த நேரமது .இந்நிலையில் அவர்கள் ஷாமுக்கு செல்லும் வியாபார 
பயணத்தின் கோடைக் காலமும் நெருங்கியது . மதீனா இஸ்லாத்தின் அதிகாரத்தின் கீழ் வந்த பின் ஷாமுக்கான அவர்களின் வணிகப்பாதை பாதுகாப்பற்றதாகி இருந்தது .எனவே மாற்று வழிபற்றி குறைசிகள் சிந்தித்தார்கள் . பாதுகாப்போடு கூடிய அந்தபயணப்பாதையும் இரகசியமாக தீர்மாணிக்கப்பட்டது.
              
                        சப்வான் இப்னு உமையா தலைமையில் குறைசிகளின்  பயணக்குழு தயார். ஆனால் தகவல் துல்லியமான உளவுச் செய்தியாக அல்லாஹ்வின் தூதரை (ஸல் ) சென்றடைந்தது . அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) அதற்கு பதில் நடவடிக்கைக்காகக தேர்வு செய்த படைப்பிரிவு தான் இந்த ஸைத் இப்னு ஹாரிசா தலைமையிலான அதிரடிப்படை .
   
                                                     

                                                          100 பேரைக் கொண்டஇந்த வாகன  படைப்பிரிவு  களத்தில் இறங்கியது . வேகமாக  சென்ற  இந்தப்  படைப்பிரிவு நஜித் மாநிலத்தின் 'கர்தா'  என்ற  இடத்தில்  ஒரு  திடீர்  தாக்குதலை  நடாத்தியது. எதிர் பார்க்காத குறைசித் தரப்பு எதிர்ப்புக் கட்டாமல் பின்வாங்கியது .ஏராளமான வியாபாரப் பொருட்களை கைப்பற்றியவர்களாக ஒரு யுத்தக்கைதி சகிதம் மதீனாவை நோக்கி வெற்றியோடு திரும்பியது .

 
இந்த ஸைத் இப்னு ஹாரிசா 'பிரிகேட்' இன் இத் தாக்குதல்  குறைசிகளுக்கு.சரணடைவு அல்லது இழப்பு என்ற விதியை உணர்த்திய  தாக்குதலாகவும்  அமைந்தது .


                                                           இப்போது இஸ்ரேல் இப்படியான வெற்றிகரமான உளவியல் யுத்த உதாரணத்தை சூடனைத் தாக்கி முஸ்லீம் உலகுக்கு உணர்த்தி உள்ளது . குறைந்த பட்சம் குறைசிகள் போல் இன்னொரு யுத்த முஸ்தீபுக்கு முஸ்லீம் உலகு  தயார் இல்லை . LOVE LETTER போட்டு சரணடைவை சமாதானமாக காட்ட 100% தயார் . இந்த மானம் கெட்ட பிழைப்பின் பெயர் தான் நவீன அரசியல் இராஜதந்திரம் !!! . அல்லாஹு அக்பர் ...
                             

                            


                         

No comments:

Post a Comment