Thursday, October 25, 2012

சூடான் மீதான இஸ்ரேலிய விமானத் தாக்குதல் உணர்த்தும் செய்தி என்ன ?


முஸ்லீம் உலகு மீதான இன்னொரு தெளிவான அதிர்ச்சி வைத்தியத்தை சியோனிசத்தரப்பு செய்துள்ளது . ஆனால் இத் தாக்குதல் தான் அவர்களது இலக்கு எனக் கருதினால் யஹூதிய வியூகங்கள் தொடர்பில் வெறும் மேலோட்டமான கணிப்பே ஆகும் . உண்மையில் இது இஸ்ரேலின் இராணுவ  வல்லமையை மீண்டும் ஒரு முறை பறை சாற்றுவதோடு முஸ்லீம் உலகு மீது பகிரங்க எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது .அத்தோடு இது அவர்களின் ஒரு பாரிய அறுவடை நோக்கிய விதைப்புகளின் ஒரு நடவடிக்கையே .

               சூடானிய அரச ஊடகத்துறை மூன்றாவது முறையாகவும் தாக்குதல் நடாத்திய நான்கு போர் விமானங்களும்  இஸ்ரேலுக்கு சொந்தமானவை என உறுதிப்படுத்திய நிலையில் இத்தகவலை பதியும் இந்நேரம் வரை இஸ்ரேல் தரப்பிலிருந்து எந்த மறுப்புக்களும் வெளியிடப்படவில்லை . இதற்கு முன்பும் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு சூடான் இருமுறை இலக்காகியுள்ளது .
 
                      அண்மைய அரேபிய வசந்தத்தில் பலஸ்தீனக் கவிஞ்சர் மஹ்மூத் தர்வீஸ் குறிப்பிடும் "செந்நிறத்தின் அழகை இரத்தத்தில் காணாமல் ரோஜாக்களில் காண்போம் " என்பதனை அவரது கவிதையின் முன்னடிகலான "(யூத )ஆக்கிரமிப்பின் கரங்களை அகற்றி ஸைத்தூன் தேசத்தை மீட்டெடுத்து ..." என்ற வரிகளை பாராமல் .சமாதானம் எம் ஒரே மொழி என ஒலிவ் மரக் கிளையோடு இஸ்ரேலின் கால்களில் சரண்டரான அரபுத் தலைவர்கள் இது பற்றி என்ன சொல்வார்கள்? 
   
  ஒரு சில வேலை அந்த அறிக்கையை கூட இஸ்ரேலே தயாரித்து அவர்களிடம் கொடுத்திருக்கும் .எது எப்படியோ இந்த முஸ்லீம் உம்மத்தை பலவீனப்படுத்தும் இந்த நடவடிக்கை இந்த ஈதுல் அல்ஹா பெருநாள் செய்தியாக முஸ்லீம் உம்மாவை சென்றடைய வேண்டும் என்பதே யகூதியின் எதிர்பார்ப்பாகும் . அந்த செய்தி முஸ்லீம் உம்மத்தின் நாளைய கைபரை நினைவூட்டக்கூட இருக்கலாம் .
                                                   


                                         
                                                                




No comments:

Post a Comment