Friday, October 19, 2012

அன்றைய ஐரோப்பாவின் நோயாளி் தேசம் இன்றைய மேற்காசியாவின் சாம்ராஜ்ய தேசமாக மாறிய அரசியல் அற்புதங்கள்!


!

Turkey Deploys Tanks on Hills Overlooking Syria Amid Tensions

by: Abu Maslama   எந்த ஆரவாரமுமில்லாமல் துருக்கியின் இராணுவ டாங்கிகள், கவச வாகன அணிகள், ஏவுகணை ஏவும் தொகுதிகள், ஆட்டிலறிகள் என்பத சிரியாவை முன்னோக்கிய நிலையில் குன்றுகளின் முகடுகளில் அணிவகுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இந்த செய்தியை துருக்கிய அரசினால் நடாத்தப்படும் அனோடொலி எனும் செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது. ஓட்டப்பந்தயம் ஒன்றில் கெட், செட் சொல்லப்பட்ட நிலையில் ரெடி, கோவிற்காக காத்திருக்கும் தன்மையை ஒத்ததது இன்றைய துருக்கிய அரசின் இராணுவ தயார் நிலை எனலாம்.


சிரிய உலங்குவானூர்த்தி ஒன்று துருக்கி எல்லையில் பறந்ததை சாக்காக வைத்து துருக்கியின் எப் 16 ரக சண்டை விமானங்கள் தங்கள் வான் பறப்பை ரோந்து என்ற பெயரில் ஆரம்பித்துள்ளன. எல்லை நகரமான Suruc வரை துருக்கிய படையினர் நகர்ந்து முகாமிட்டுள்ளனர். ஆளில்லா உளவு விமானங்களை சிரியா மீது பறக்க விட்ட துருக்கி, சிரிய உலங்குவானூர்த்தியின் பறப்பை பெரிய விடயமாக மாற்றி மேற்படி நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. நல்ல வேளை குர்திஷ் விடுதலை போராளிகள் சிரிய எல்லைகளில் இல்லை.(தென்கிழக்கு பகுதி தவிர்ந்த) இருந்திருந்தால் அதனை சாக்காக வைத்து தனது சிறப்பு கொமாண்டோ அணிகளை சிரியாவினுள் ஒரேயடியாக தளமிறக்கியிருக்கும் துருக்கி.

ஜுன் மாதம் துருக்கியின் அத்துமீறி பறந்த விமானத்தை சிரியா சுட்டு வீழ்த்தியது. அப்போதே துருக்கி தனது முதல் இராணுவ அச்சுறுத்தலை விடுத்தது. பின்னர் ஓக்டோபரில் Akcakale  பிரதேசத்தில் சிரிய எறிகணைகள் வந்து வீழ்ந்து 5 துருக்கியர் மரணித்தனர். இதன் பின்னர் துருக்கிய அரசு இராணுவ அச்சுறுத்தல் என்ற நிலையில் இருந்து நகர்ந்து சுய பாதுகாப்பிற்கான இராணுவ ஆக்கிரமிப்பின் தேவை குறித்து பிரஸ்தாபிக்க ஆரம்பித்துள்ளது.

North Atlantic Treaty Organization. நேட்டோ அடுத்த அறிவித்தலை விடுத்தது. ”துருக்கி மீது மீண்டும் தாக்குதல் நடாத்தப்பட்டால் உறுப்பு நாடென்ற வகையில் நாம் துருக்கிக்காக துணை நிற்போம். அது மட்டுமல்ல இப்போது துருக்கிக்கு, சிரியா மீது உள்நுழைந்து தாக்குதல் நாடாத்தக்கூடிய தார்மீக உரிமை உள்ளது. அது எவ்வேளையிலும் சடுதியாக சிரியாவினுள் நுழைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்படியொரு நிலை ஏற்படின், துருக்கியின் பாதுகாப்பு காரணமாக நாம் அவர்களுடன் இணைய நேரிடலாம்

இரண்டு முஸ்லிம் நாடுகளை மோத வைத்து அதனை சாக்காக கொண்டு குறைந்த சேதங்களுடன் தங்கள் படைகளை சிரியாவினுள் நகர்த்தவும், இதன் ஊடாக ரஷ்ய தலையீடுகளை தவிர்க்கவும் மேற்கு நாடுகள் விரித்துள்ள வலையிது. 569 மைல்களை (911 கிலோமீட்டர்) எல்லையாக கொண்ட சிரிய துருக்கி போர்டரில் தினமும் 700-800 சிரிய மக்கள் அகதிகளாக துருக்கியினுள் நுழைவது வழமையாக மாறியுள்ளது. சுமார் 98000 பேர் வரை அகதி முகாம்களில் அகதிகளாக பராமரிக்கப்படுகின்றனர்.

சிரிய அகதிகள் பிரச்சனையை காரணம் காட்டி சிரியாவினுள் அகதிகளாக்கப்பட்டுள்ள சிரியர்களிற்கான மனித நேய உதவியின் அவசியம் பற்றி துருக்கிய வெளியுறவுதுறை அமைச்சர் பேசியுள்ளார். எவ்விதமாயினும் சிரியாவினுள் துருக்கிய படையினர் ஊடுருவுவது என்பது மேற்படி நிகழ்வுகள் ஊடாக அனுமானிக்கக் கூடிய ஒரு விடயமாக மாறியுள்ளது. துருக்கியின் அனைத்து அரசியல் தலைவர்களும் இப்போது வெள்ளை மாளிகையின் உத்தியோகபூர்வமற்ற பேச்சாளர்களாக மாறியுள்ளனர்.

பசுத்தோல் போற்றிய புலி ஆட்டு மந்தையிடையே நுழைந்ததாக பாட்டி கால கதை ஒன்று உண்டு. அமெரிக்க ஏகாதிபத்தியமும், யூத ஸியோனிஸமும் துருக்கி என்ற பெயரில் சிரியாவில் நுழையும் காட்சிகள் அரங்கேறி வருகின்றன.

சோஷலிச முஸ்லிம் நாடுகளும் அதன் தலைமைகளும் ஒழிக்கப்பட்டு முதலாளித்துவ முஸ்லிம் நாடுகளின் தலைமை உருவாக்கப்பட்டு வருகின்றது. அதன் ஒரு உண்மை முகமே துருக்கி.

No comments:

Post a Comment