Sunday, October 21, 2012

இதுவும் ஒரு' ஹோலி வூட்' தானா?


சிரிய போர் விமானங்கள் கேந்திர முக்கியத்துவம் மிக்க நகரை மீளக் கைப்பற்றும் முகமாக உக்கிர தாக்குதல்
 
 


(2012-10-17 09:49:வீரகேசரி ஆன்லைன்)

சிரிய போர் விமானங்கள் மாரெட் அல் – நுமான் நகரிலுள்ள போராளிகளின் தளங்கள் மீது செவ்வாய்க்கிழமை உக்கிர தாக்குதல்களை நடத்தியுள்ளன.இட்லிப் மாகாணத்திலுள்ள மேற்படி நகரை கடந்த புதன்கிழமை கிளர்ச்சியாளர்கள் தமது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். 



மாரெட் அல்–நுமான் நகர் டமஸ்கஸையும் மோதல்கள் இடம்பெறும் அலெப்போ நகரையும் இணைக்கும் நெடுஞ்சாலையில் கேந்திர முக்கியத்துவம் மிக்க இடத்தில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் இராணுவத்தினரின் போர் விமானங்கள் ஹிஷ், மாஷம்ஷா, மார்ஷம்ரின், தல் மான்ஸ் மற்றும் டெயிர் அல் கார்பி ஆகிய பிரதேசங்களிலும் உக்கிர தாக்குதல்களை நடத்தியுள்ளன.

அத்துடன் கிழக்கு டமஸ்கஸில் கிளர்ச்சியாளர்கள் பலம் பெற்று விளங்கும் ஜோபர் பிராந்தியத்திலும் இராணுவத்தினர் செவ்வாய்க்கிழமை தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.சிரியாவெங்கும் முதல் நாள் திங்கட்கிழமை இடம்பெற்ற மோதல்களில் 78 பொதுமக்கள், 46 படைவீரர்கள், 27 கிளர்ச்சியாளர்கள் உட்பட 151 பேர் பலியாகியுள்ளனர்.

 

அத்துடன் ஞாயிற்றுக்கிழமை டமஸ்கஸுக்கு அருகில் 28 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சிரிய மனித உரிமைகள் அவதான நிலையம் தெரிவித்தது.அவை அண்மைய வாரங்களாக தலைநகருக்கு அண்மையில் இடம்பெற்ற மோதல்களில் உயிரிழந்தவர்களது சடலங்கள் ௭ன நம்பப்படுகிறது.


....................................................................................................................................................................
இரத்தம் சிந்துவதும் உடல்கள் சிதடிக்கப்படுவதும் 
சத்தியத்துக்காக என்றவகையில் எமக்கு புதியவை அல்லதான் .
ஆனால் தற்போதைய களங்கள் யாரால் திறக்கப்பட்டுள்ளன ?
எதற்காக திறக்கப்பட்டுள்ளன ? எனும் உண்மை புரியாமல் 
போராடுவதை மட்டும் எம்மீது விதியாக்கியுள்ளோம் !
நஜீசை அகற்றத்தான் வீதிக்கு இறங்கினோம் 
சைத்தானுக்கு சாம்ராஜியம் அமைத்துக்கொடுக்க அல்ல !
என்பது புரியப்படாத வரை நாம் யாரென்றால் 
பென்டகனின் நெறியாள்கையில் உள்ள 
'பிரக்டிகல் டேர்மிநேடேர்கள்' 'ஆசாத் ' கூட்டமோ 
வழமை போலவே 'பிரடேடர்கள்' தாம் !
இப்போது சிரியாவில் நடப்பது 
'டேர்மிநேடேர்ஸ் வேசஸ் பிரடேடர்ஸ்'

No comments:

Post a Comment