Friday, October 12, 2012

ஓமர் முக்தார் திரைப்படத்தில் சிந்தனா ரீதியான 'ஆம்புஸ் அட்டாக் ' ஒரு பார்வை .

+ = 


ஒரு உண்மையான போராளி கொல்லப்படுவது  அவனது இலக்கின் நோக்கம் கொச்சைப்படுத்தப்படும் போதே ! அந்த வகையில் ஓமர் முக்தர் திரைப்படம் பார்க்கப்படும் ஒவ்வொரு தடவையும் எதிரியின் கண்ணோடு தேசிய விடுதலை எனும் நியாயத்தோடு அனுபவிக்கப்படுமாயின் அந்த ஒவ்வொரு தடவையும் அந்த பார்வையாளர்களால் தூக்கிலப்படுகிறார் என்பதுதான் உண்மை .

 ஓமர் முக்தார் திரைப்படம்  தேசிய சாக்கடையில் புரட்டி எடுக்கப்பட்ட ஒரு தூய்மையான வரலாறு .எண்பதுகளின் ஆரம்பத்தில் இலங்கையின் இனவாத யுத்தம் சூடு பிடித்திருந்த காலப்பகுதியில் இந்த திரைப்படம் வெளி வந்திருந்தது . 'முஸ்தபா அக்தாத் ' தயாரித்திருக்க 'அன்டனி குயின் ' எனும் கிறிஸ்தவ நடிகர் அதில் ஓமர் முக்தாராகவே ஆகியிருந்தார்  . விடுதலைப்போராட்டத்தில் கெரில்லா போராளிகளுக்கு ஒரு வயதான ஆசானாகவே ஓமர் முக்தார்   இந்த திரைப்படத்தின் மூலம் மாறி இருந்தார் என்பது கூட மிகையான கருத்தல்ல .
                                            'ஆம்புஸ் அட்டாக் ' பற்றி அவ்வளவு அறியப்படாத காலப்பகுதி அது .'மாஓவின் கெரில்லா தியரி 'என்ற  புத்தகப் பாடங்களை செயல் வடிவம் கொடுக்க இந்த உமர் முக்தார் வரலாறு நல்ல வாய்ப்பாய் ஆகியது . ஆம்புஸ் என்றால் எதிரியை காத்திருந்து கன்னி வைத்து தாக்கும் ஒரு கெரில்லா போர் முறையாகும் . சூழலோடு சூழலாக இணைந்து காத்திருந்து அல்லது எதிரியை வரவழைத்து துவம்சம் செய்வது .
                                               இது ஓமர் முக்தார் திரைப்படத்தின் ஒரு சம்பவம். அந்த பாலை நில பூமியில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை மண்ணும் மண் சார்ந்த இடமுமே .அங்கு அந்த இஸ்லாமிய கெரில்லா போராளிகளால் இத்தாலியப்படைபின்வாங்கும் பாணியில் இழுத்துச் செல்லப்படுகிறது .இத்தாலியப்படையும் கண்ணுக்கு முன்னே தெரியும் எதிரியை இதோ அழிப்போம் ,பிடிப்போம் என்ற நப்பாசையோடு தொடர்கின்றது .ஒரு குறிப்பிட்ட தூரம் சென்றபின் ' அல்லாஹு அக்பர்' என்ற முழக்கத்தோடு மண்ணோடு மண்ணாக 'ஆம்புஸ் 'பாணியில் மறைந்திருந்த இஸ்லாமிய படையணி ஓன்று இத்தாலியப்படை எதிபாராத விதமாக அவர்களுக்கு அருகில் இருந்து தாக்கத் தொடங்குகின்றது .இப்போது பின் வாங்கும் பாணியில் சென்ற இஸ்லாமிய படையணியும் இத்தாலியப் படையணியின் பக்கம் திரும்பி வந்தவர்களாக தாக்கத்தொடங்க இத்தாலியப்படை தாக்குதல் நிலையையும் ,தற்காப்பு நிலையையும் மீறி தோல்வியடைவதாக அந்த சம்பவம் காட்டப்படுகின்றது.


                                                  ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பு குறையாமல் அமைந்துள்ள காட்சியமைப்பு எமக்கு ஒரு வகையான புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது என்பது மறுக்க முடியாத உண்மை . ஆனால் இந்த திரைப் படத்தின் ஒரு முக்கியமான விடயம் சிந்தனா ரீதியாக முஸ்லீம் உம்மா மீது ஒரு 'ஆம்புஸ் 'தாக்குதல் நடாத்தப்படுகின்றது . அதுதான் 'லிபரேசன் போர் லிபியா' என்ற தேசிய வாதத்தை இஸ்லாமாக காட்சியமைப்போடு ஒன்றிப்போயுள்ள ஒவ்வொரு முஸ்லிமையும் சிந்திக்கத்தூண்டுவது . இந்த தேசிய வாதம் தான் எமக்குள் எல்லை பிரித்து அரபி ,அஜமி என்ற பாகுபாட்டை சரிகண்டது !இந்த தேசியவாதம் தான் முஸ்லீம்களுக்குள்ளேயே கீழ்த்தரமான எல்லை மோதல்களை நியாயப்படுத்தியது! இந்த தேசிய வாதம் தான் இஸ்லாத்தின் எதிரிகள் எமது சகோதரர்களை துவம்சம் செய்யும் போதும் பார்த்துக்கொண்டிருக்க செய்தது . 


   ஒரு தவறை சாரியால் சரிகானப்பார்க்கிறது திரையில் காட்டப்படும் ஓமர் முக்தார். அதுதான் இஸ்லாமிய ஜிஹாதின் நோக்கம் ஒரு தேசிய விடுதலை எனும் தவறு.                




                                                           

No comments:

Post a Comment