Friday, October 26, 2012

ஒரு அகதியின் நாட்குறிப்பிலிருந்து .....




                                                 யாழ் நகர் எனது பிறப்பிடம் . இருள் பிடித்த இனவாத துப்பாக்கிகளின் நிழலில் அச்சத்தோடும் ,அச்சுறுத்தலோடும் வளர்ந்தேன் வாழ்ந்தேன் என்பது 100% உண்மை ! . ஆனால் எந்த தவறான சிந்தனைகளும் என்னை ஆக்கிரமிக்க கூடாது என்பதுதான் உலகை நான் புறிய ஆரம்பித்தது ,முதல் நான் இறைவனிடம் வேண்டிக்கொண்டது . 1990 களில் விடுதலைப் புலிகளால் இரண்டு மணிநேர அவகாசத்தில் யாழ் நகரில் வாழ்ந்த இந்த முஸ்லீம் உம்மா பலாத்காரமாக விரட்டப்பட்டது ; அந்த சோகத்தோடும், சுமைகளோடும்  இவனும் ஒரு துளியாய் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி புலம் பெயர்வு .அத்தோடு எமது பெயருக்கு முன்னால் அகதி என்ற காரண இடுகுறிப் பெயரும் ஒட்டிக்கொண்டது . முஸ்லீம் என்ற காரணத்தால் விரட்டப்பட்டதால் இஸ்லாம் என்பதன் தேடல் இயல்பாகவே ஆரம்பித்தது .

                                       ஒவ்வொரு இயக்கமாக தேடினேன் பல்வேறு கோணங்களில் ஆராய்வேன் . எங்காவது தவறு என்று தெரியும் இடத்தில் கேள்விகளை தொடுப்பேன் .விளைவு விமர்சனங்களால்  விரட்டப்படுவேன் ! ஆகவே தாங்க முடியாதது இஸ்லாத்தின் எதிரிகளை விட மோசமான ஒருவனாக பார்க்கப்பட்ட சந்தர்ப்பங்களும் அமைந்ததுதான் . இந்த இயக்க வெறி இருக்கின்றதே அது மிகப் பயங்கரமான 'வைரஸ் '. ஆனால் பல இயக்கங்கள் இந்த உம்மத்தை மீள்கட்டுமானம் செய்யும் என பலரும் சொல்லும் போது எனக்குப் பட்டது அவைகள் இந்த முஸ்லீம் உம்மாவை இயல்பாக சிந்திக்க விடாமல் தமது கட்டுப்பாட்டுக்கு உற்படுத்தி பிளவு படுத்தும் என்பதே . இந்த தவறு இன்று நடந்து கொண்டிருக்கின்றது .
  

                                               எனது கருத்து இந்த இஸ்லாமிய உம்மத்தை நோக்கி இயக்கம் செல்வது தடுக்கப்பட்டு இஸ்லாம் செல்ல வேண்டும் . இதன் அர்த்தம் இயக்கம் தேவையில்லை என்பதல்ல மாறாக ஏன் இயக்கம் தேவை ?என்பதை மக்கள் உணராத வரை, இயக்கம் என்பது இஸ்லாத்தை நிலை நாட்டும் ஒரு (tool ) கருவி தான் தவிர அதுவே முடிவல்ல .


                     ஒரு கருவியில் தொங்கி இருப்பது நியாயமற்றது போல் , பொருத்தமற்ற கருவிகளை தவிர்ப்பதும் கட்டாயமானது . இதை சமூகம் உணரும் போது அது தான் மறுமலர்ச்சியின் ஆரம்பமாகும் .அப்போது தான் உண்மையான மக்கள் போராட்டம் ஆரம்பமாகும் .  அத்தோடு  விசுவாசம் என்பது வெறியாக மாறக்கூடாது என்ற அச்சத்தில் அல்லாஹ்வை பிரார்த்திக்கிறேன் . 

                                                              
                                                                                                    

No comments:

Post a Comment