Saturday, October 27, 2012

புலமைப் பரிசில் யுத்தம் ஒரு பார்வை ......

 
       கரணம் தப்பினால் மரணம் என்பது ஒரு பழமொழி ஆனால்தருணம் சொதப்பினால் மடையன் என்பது இப்போது இலங்கை கல்வித் திட்டத்தின்  போட்டித்தனக் கண்ணோட்டத்தினால் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில்  பரீட்சை க்கு    தோற்றும் மாணவர்கள் விடயத்தில் சொல்லாமல் சொல்லும் ஒரு கருத்தாகும்      
       

             வயதிற்கும் இயல்பிற்கும் மீறிய அசாதாரணமான கல்வித் திணிப்பின் படி ஒரு தக்கன   பிழைத்தலுக்கான மோதலை ஏற்படுத்தி மாணவர்களை தரப்படுத்தி தேர்ந்து எடுத்தல் எனும் இந்தப் புலமைப் பரிசில் திட்டம் அதன் நன்மைகளை விட தீமைகளால் மிகைக்கின்றது .எனும் கருத்து பலராலும் பேசப்பட்டாலும் காத்திரமான எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் அரசு இத் திட்டத்தை தொடருகிறது .
  

  
    சிறுவர் துஸ்பிரயோகம் என்பது வெறுமனே பாலியல் ரீதியாகவும் ,தொழில்முறை ரீதியாகவும், குடும்ப சூழல் ரீதியாகவும் ,சமூகசூழல் ரீதியாகவும், மட்டுப்படுத்தப் பட்ட நிலையில் பலாத்காரமான கல்வித் திணிப்பு என்ற இந்தப்பக்கம் அறிவு முதிர்ச்சி யும் அனுபவமும் மிக்க பெற்றோர்கள் ,ஆசிரியர்கள் மத்தியில் கூடபுரிந்தும் புரியாத விடயமே .

            ஒரு போட்டிச் சந்தையில் தரமான பொருட்களுக்கு  கிராக்கி அதிகமாகும் .தரமே பொருட்களின் கேள்வியையும் வழங்களையும்தீர்மானிக்கும் என்பது ஒரு பொது விதி .இதன் அடிப்படையில் பொருட்களை தரப்படுத்தல் என்பது உற்பத்தியாளர் மீது கட்டாயமாகி விடுகின்றது .இந்த நிலையில் அந்தப் பொருள் இயல்புக்கு   மீறிய பயன்பாட்டு வடிவத்தால் மெருகூட்டப்படும்  உணர்வுகள் அற்றபொருட்களுக்கும்  விற்பனைப் பண்டங்களுக்கும் பொருநதும் இவ் விதி உணர்வும் ,தமது வயதின் தேவைகளையும் தேடும்  சிறார்கள் மீதுசெலுத்தப்பட முடியுமா ?.     இது ஒரு வகை துஸ்பிரயோகமாக என   ஏன் எம்மால்  புரிந்து  கொள்ளப்படுவதில்லை .
                
   

                கரணம் இதுதான் ,மேற்கின் முதலாளித்துவ சித்தாந்தத்தின் எதிலும் இலாபம் ,நன்மை என்ற  தத்துவம் எம்மை அறியாமல் எம்மால் பின்பற்றப் படுவதாகவும் .ஆனால்இன்று  மேற்குலகு இதிலிருந்து சற்று வித்தியாசப் படுகின்றது ..அதாவது தமது இத்தகு தவறினால்  இளம்பிரா  யத்தினரின்  விரக்தி ,மற்றும் பொடுபோக்கான  மனோநிலையை  உணர்ந்து அதற்கு மாற்றீடாக இத்தகுபோட்டித்தர  வளர்ப்புக்கு குறைந்த பட்ச அழுத்த த்தையே கொடுக்க  நாம் தற்போது இது விடயத்தில்  அதிக அழுத்த த்தை  கொடுப்பது ஆபத்தானது .

                    நாங்கள் ஒரு விடயத்தை  தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் .அதாவது இதன்மூலம் நாம் ' education  machines ' களை தான் உருவாக்குகின்றோம் . அதாவது இய்ந்திரத்தனம் மிக்க  இளம் சமுதாயத்தை உருவாக்க முயல்கின்றோம் சுய இலாபம் சுய நன்மை என்பதே அந்த இளம் சமூகத்தின்இலக்காகும் . இப்போது சமூகக்கட்டமைப்பு என்பது தனி நபர் போட்டி மனோநிலையில் ஒன்றுக்கொன்று  பிணைப்பற்றபெயரளவுப் பெறுமானமுள்ள வடிவத்திலேயே  கட்டமைக்கப்படும் .  


                   அதிகமாக இந்தப் போட்டிப்பரீட்சை நோக்கி நகர்த்தப்படும்  சிறார்களை சற்று அவதானித்துப்பாருங்கள்; அவர்களோடு அளவலாவிப் பாருங்கள்; அவர்கள் ஏறத்தாள மூன்றாம் வகுப்பில் இருந்து இந்த புலமைப்பரிசில் பரீட்சைக்காக தயார்படுத்தப்பட்ட நிலையில் ஆழமாக அவர்களோடு உரையாடும்போது அவர்களின் பாதிப்பு நிலைமையும் எதிர்ப்பார்ப்பையும் உங்களோடு பகிரமுடியும் . ஆனால் இதனை நீங்கள் அவர்களது வயதை ஒத்த மனோநிலைக்கு சென்றே அறிந்து கொள்ளமுடியும் .


          ''முதியோருக்கு மரியாதை செய்யாதவர்கள் சிறியோர் மீது இறக்கம் காட்டதவர்களும் நம்மைச்சார்ந்தவர் அல்ல"


       எனும் நபி எம்மால் மிகச்சரியாக உணர்த்த்தப்படவேண்டும் . இறக்கம் காட்டுதல் என்பதன் அர்த்தம்     அவர்களின் உரிமை விடயத்தில்  நாம் சிறந்த முறையில் நடந்துகொள்கின்றோமா? என்பதும் அடங்கும் மேலும் இதற்காவும் இறைவனால் விசாரிக்கப்படுவோம் என்பது தெளிவான உண்மையாகும்.
                                                                                                                                                                          

  மேலும் குரிப்பிட்டேயாகவேண்டிய இன்னொரு விடயம் இந்த புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்றவர்களின் அளவை வைத்தே குறித்த பாடசாலையின் மற்றும் குறித்த ஆசிரியரின் பிரத்தியோக நன்மதிப்பு கணக்கிடப்படும்   எனும் மனோநிலை சில ஆசிரியர்களையும் தவறாக சிந்திக்கத் தூண்டியுள்ளது .அதன் பிரதி பலனாக தவறான வழிநடாத்தல் களால் தூண்டப்படுகிறார்கள் .



                                 அதாவது பரீட்சை புள்ளியை பெற்றுக்கொள்ளும் ஒரே நோக்கம் களவு ,பொய் என்ற பாவங்களை அந்த பிஞ்சு உள்ளங்களில் பதிக்கவும் காரணமாகி விடுகின்றது .நீங்கள் சற்று ஆராய்ந்து பார்த்தல் உங்கள் பகுதிகளிலும் இதற்கு ஆதாரங்கள் கிடைக்கக் கூடும் .

                      * ஜிஹாதிய காலங்களிலும் 
                      * சமூக ஒற்றுமைக்காகவும் 
                      * கணவன் மணைவிக்கு இடையில் ஒற்றுமை ஏற்படுத்தவும் .
       தவிர இந்த பொய் எனும் தீமையை பயன்படுத்த அனுமதி இல்லை . அந்த வகையில் பார்த்தால் இந்த புலமைப்பரிசில் விவகாரம் ஒரு யுத்தக்களமாக்கப் பட்டுள்ளது . அந்த பிஞ்சு சிறார்கள் சில யுத்தப் பிரபுக்களின் இலாபங்களுக்காக பயன்படுத்தப்படும் சிப்பாய்களா ?!! சோமாலியாவின் ஜெனரல் பரா யைடிட் ,இலங்கையின் வேலுப்பிள்ளை பிரபாகரன் போன்றோர் மட்டும் சிறுவர்களை சிப்பாய் களாக பயன் படுத்தினார்கள் என்று கூறும் உலகம் .இந்த மாணவ சிப்பாய்களையும் பற்றி புரிந்து கொள்ள வேண்டும் .


                                                    முதலாளித்துவ ஏகாதிபத்திய சிந்தனா வடிவம் எந்த ரூபத்தில் வந்தாலும் சுய இலாபம் சுய நலம் என்ற அடிப்படையில் மனித சமூகத்தை தீமையை நோக்கியே இட்டுச்செல்லும் என்பதற்கு . இந்த மனோ நிலை ஒரு சிறந்த ஆதாரமாகும் .  பெற்றோர்களே ! ஆசிரியர்களே ! இது பற்றியும் சற்று நாம் சிந்திப்போமா !!?    

No comments:

Post a Comment