Thursday, October 18, 2012

முஸ்லீம் உம்மாவின் உள்ளங்களையும் உணர்வுகளையும் குறி வைக்கும் இந்த குப்ரிய மீடியா யுத்தம் ஏன்?


           வரலாற்றுத்திருப்பத்தின் ஒரு முக்கியமான கட்டத்தினுள் உலகம் வந்துள்ளது .போலித்தனத்தாலும் சுயநல வாதத்தாலும் கட்டப்பட்ட முதலாளித்துவ கோட்டை தனது நியாயமான தோல்வியை நோக்கி தற்காப்பு நிலையையும் தாண்டி பின்வாங்கிக்கொண்டிருக்கின்றது.

                                                           அசத்தியத்தின் அழிவு என்பது நிச்சயமானது அது இஸ்லாத்தைப்போல் தனக்கென ஒரு அதிகாரமற்ற நிலையில் கூட உணர்வு ரீதியாகவும் ,சிந்தனா ரீதியாகவும் தனிமனிதர்களால் காவிச்செல்லும் தரம் வாய்ந்தது அல்ல ;உண்மையான குப்ரியத்தின் வெற்றி என்பது தனது மேலாதிக்கத்தை பேணுவதிலும் உலகியல் இலாபத்தின் உச்ச அருவடையுடனும் தான் வழக்கூடியது .அல்லாது விடின் அது செல்லாக்காசு . 


                                                            நேற்று வல்லரசாக இருந்த சோவியத் யூனியன் எனும் கம்பியுனிச சாம்ராஜ்யம் எமது கண் முன்னாலேயே 1990 களில்   தூள் தூளானது !'கார்ல் மார்க்ஸ்' எனும் அவர்களது சித்தாந்தக்கடவுளின் சிந்தனைகளுக்கு நடை முறை உருவம் கொடுத்த அவர்களது வழிமுறை தெய்வமான' லெனின் கிராடின்  ' பதப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்ட  பூதவுடல் ஒரு சாதாரண பிணமாக்கப்பட்டு புதைக்கப்பட்டது . அவனது சிலை கூட விட்டுவைக்கப்படவில்லை .ஒரு சித்தாந்த வீழ்ச்சியின் உருவம் இதுதான் என்பதற்கு கம்பியுநிசம் உதாரணமானது .இந்த இடத்தில் கண்ணால் காணாத அல்லாஹ்வின் தூதர் அவமதிக்கப்பட்ட போது பொங்கி எழுந்த இந்த முஸ்லீம் உம்மாவின் தரம் வார்த்தை களால் வடிக்க முடியாதது .



                         இதேபோல்தான் 1924 இல் இஸ்லாத்தின் அதிகார வடிவமான கிலாபா அரசும் வீழ்த்தப்பட்டது . இதையும்  குப்ரிய மேற்குலகு ஒரு சமாதியின் சரித்திரமாகவே தப்புக்கணக்குப் போட்டது .ஆனால் அங்கு அதன் அதிகார அலகுதான் வீழ்த்தப்பட்டது தவிர இஸ்லாத்தின் அடிப்படை சிந்தனையும் அதனூடாக மீண்டும் இஸ்லாத்தை சக்தியாக்கும் போராட்டமும் உடனேயே  தொடங்கப்பட்டும் விட்டது. இது  தான் இந்த குப்பார்களுக்கு காழ்ப்புணர்ச்சியையும் , குரோதத்தையும் ,துவேசத்தையும் தூண்டிவிட்டதுடன்  . இப்போதுதான் அதிதீவிரமான சிந்தனா யூத்தத்தின் அவசியத்தையும் அதன் கருவிகளாக சமூக மீடியாக்கள் பயன் படுத்தப்பட வேண்டிய தேவையையும் உணரத்தூண்டியது எனலாம் .


                                                                இஸ்லாத்தின் அரசியல் கேடயமான கிலாபா அரசு வீழ்ந்தது முஸ்லீம் உம்மாவிற்கு பேரிழப்புதான் .ஆனால் அது சித்தாந்தத் தோல்வியின் வாக்குமூலம் தான் என நிறுவ (கம்பியுநிசத்தை போல ) முஸ்லீம் உலகு தயாராக இருக்கவில்லை .குப்பார்களின் எதிர்பார்ப்பு இந்த இடத்திலே பொய்ப்பிக்கப்பட்டது . மேலும் முஸ்லீம்கள் தவறாக சிந்தித்தார்கள் , ஆனால் குப்ரை தழுவவில்லை , விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரை மட்டும் குப்ரியத் பொறுக்கிக் கொண்டது . இந்த கோடரிக் காம்புகள் முஸ்லீம் உம்மாவின் அரசியல்  தலைவர்கள் என அறிமுகப்படுத்தப் பட்டார்கள் . 



                       இப்போதும் அவர்கள் அச்சப்பட்ட விடயம் இஸ்லாமிய கிலாபா வின் மீள் உதயம் தொடர்பாக இஸ்லாமிய  புத்திஜீவத்துவ சமூகம் பேசத் தொடங்கியதுதான் . எனவே இந்த சிந்தனா வாதத்தை உடைக்க வேண்டும் என்பதற்காகஒரு' பிரீ ப்ளான் மீடியா வார் ' ஐ  வரைய வேண்டிய அவசியத்தை குப்ரிய ஏகாதிபத்திய அதிகாரம் உணர்ந்தது .இந்த மீடியா யுத்தத்தில் பின்வரும்  தாக்குதல் இலக்குகளை அது உறுதிப்படுத்தியுள்ளது .



# இஸ்லாத்தை அதன் அகீதா , சரீயா , இபாதா போன்ற எல்லாப்பகுதிகளிலும் தவறாக சித்தரித்தல் .
#முஸ்லீம் உம்மாவை ஒன்றுபட முடியாத மனோபாவத்தில் இருக்கத்தூண்டுதல் .
#கிலாபா அரசுக்கு மாற்றீடாக ஒரு அரசியல் வடிவத்தை நோக்கி முஸ்லீம் உம்மாவை திசைதிருப்புதல் .
#சமரச மனோ நிலையை ஏற்படுத்துவதன் ஊடாக இஸ்லாத்தை ஒரு மதப்பெருமான மாக கொண்டு நிம்மதியாக 
முஸ்லீமும் வாழலாம் எனும் கருத்தியலை வலுப்பெறச் செய்தல் .
                                         
        கிலாபாத்தின் மீள்வருகையை நோக்கிய இஸ்லாமிய எழுச்சியை தடுக்கவும் தாமதப்படுத்தவும் 
இந்த இஸ்லாத்தின் எதிரிகள் மேற்கூறிய விடயங்களையே இலக்காக்கி உள்ளனர் . இந்த உண்மையை உணர்ந்தவர்களாக முஸ்லீம்களே உலகத்தை அவதானியுங்கள் .
         * மத்திய கிழக்கின் இஸ்லாமிய ஜனநாயகம் .
         * சாம் பாசிலின் 'அப்பாவி முஸ்லீம்கள் 'திரைப்படம் .
         * தாலிபான்களின் 'மலாலா யூசுப்' விவகாரம் 
         * 'லம்யா கடோல் ' போன்றோரின் வஹியை மிதித்து எழும் பெண்ணுரிமை .
                             .....................இப்படி ஒவ்வொரு விவகாரமும் ஒரு 'பெகேஜின் ' பிரக்டிகல் ஸ்டெப்ஸ் ' என்பது மிகத்தெளிவாகவே புரியும் . எது எப்படியோ 
                                            " சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது . அசத்தியம் நிச்சயம் அழிந்து போவதே "
                                 என்ற அல்லாஹ்வின் (சுப) வார்த்தைகளின் உண்மைகளை எமது முயற்சி மூலம் சாதித்துக்காட்ட வேண்டியது காலத்தின் தேவையான முஸ்லீம்களின் கடமை .இன்ஷா அல்லாஹ் .

1 comment:

  1. masallah excellent
    they are thinking very different angel to destroy the Islamic thinking ,so they using every media
    #is call media freedom
    #human right
    #nationalism
    .
    .
    .
    so on
    other one is our Muslim also thinking to secure Islam by kufr way of thinking
    #our ulamah telling in jummah ,show ur nationalism emotion to kuffar ,(resonantly happand sri Lanka vs Pakistan match also),
    #our ulamah saying ayyamut tasreek day 29-10-2012 for Muslim and poya day for Buddhist so avoiding performing kurban on that day
    .
    .
    .
    do on ..
    this also dangers thing

    ReplyDelete