மத்தியகிழக்கிலும் வட ஆபிரிக்காவிலும் ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சியானது அவர்களிற்கான விடுதலைக்கான வழி என அம்மக்களால் உணரப்பட்டுள்ளது.
அரசியல் ரீதியில் பொருளாதார ரீதியில் உரிமைகள் ரீதியில் எதிர்கால சுபீட்சமான வளங்கள் ரீதியில் தமக்கு ஒரு மாற்றத்தை இந்த போராட்டங்களின் வெற்றி கொண்டு வந்து விடும் என அவர்கள் நம்புவதன் விளைவே மேற்படி புரட்சிகள் வேகமாக வலுவடைவதும் வெற்றியை நோக்கி நகர்வதுமாகும்
இந்த மக்கள் போராட்டமானது அரசுகளை அரசியல் தலைவர்களை இராணுவங்களை ஏன் நாடுகளின் எல்லைகளில் கூட மாற்றங்களை கொண்டு வர வல்லன. சுதந்திரம் என்பதற்கும் நவீன வாழ்வியல் மாற்றம் என்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இன்றைய அராபிய மக்கள் விடுதலை எனும் பேரில் நவீனத்துவத்தை தேர்ந்தெடுக்கும் உரிமையையே கோரி நிற்கின்றனர். மாற்றங்கள் ஒரு போதும் சுதந்திரங்களை வழங்கப் போவதில்லை. சுதந்திரமே மாற்றங்களைப் பெற்றுத் தர முடியும். ஆனால் நடப்பதோ சுதந்திரத்தின் பேரால் மாற்றங்களை அடைய முற்படுவதே. மீண்டும் புதிய போத்தலில் பழைய மதுவே கிடைக்கும்.


தெருக்களில் இறங்கி போராடுபவர்கள் இறைவனை நம்புகிறார்களோ இல்லையோ மேற்குலகின் ஊடகங்களை நம்புகிறார்கள். அவையே தம் மக்கள் புரட்சியை காப்பாற்றும். உலகறியச் செய்யும் என. இறை உதவியை விட சமூக வலைத்தளங்களின் உதவி அவர்களிற்கு முக்கியமாகி போய்விட்ட அவலமான காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
போராட்டம் இஸ்லாமிய அடிப்படைவாதிளின் கைகளில் சென்று விடாமல் இருக்க அமெரிக்காவும் மேற்குலகும் பெரு முயற்ச்சி செய்கின்றன. இஸ்லாம் அல்லாத சக்திகள் தலைமைத்துவத்தை கையில் எடுக்கவும் வேண்டும். ஆட்சி மாற்றம் ஏற்படவும் வேண்டும். அப்போதுதான் அரபு தேசங்களை இன்னும் பல துண்டங்களாக பிரிக்கலாம். அதற்காகவே அவை அவசரமாக அரசியல் அணிகளுடன் பேச முற்படுகின்றன.இணையத்தளங்களை நம்புவது என்பது மேற்குலகை நம்புவது. மேற்குலகை நம்புவது என்பது அமெரிக்காவை நம்புவது. அமெரிக்காவை நம்புவது என்பது இஸ்ரேலை நம்புவது. ஆக ஸியோனிஸத்தை நம்பி முற்று முழுதாக நாம் களமிறங்கியுள்ளோம்.போராட்ட நிகழ்ச்சி நிரல் தற்போது அமெரிக்காவசம். எகிப்தில் இது தான் நடந்தது. இன்னும் பல நாடுகளில் நடக்கப்போகிறது.

ஈராக்கில் சதாமை உருவாக்கி வலுவாக்கி பின் குர்திஷ்களையும் வலுப்படுத்தி சதாமை அழித்தது இந்த அமெரிக்காதான். உஸாமா பின் லாடனை உருவாக்கி வலுப்படுத்தி பின் அவனை அழிக்க முற்படுவதும் இந்த அமெரிக்காதான். ஆப்கானிய தலிபான்களை ஒன்றினைத்து உருவாக்கியதும் பின் அவர்களை அழிப்பாதாக ஆப்கானிஸ்தானுல் உள்நுழைந்ததும் இந்த அமெரிக்காதான். அடுத்து லிபியாவின் கொழுத்த எண்ணெய் வயல்களை கைப்பற்ற சர்வதேசப் படையின் வருகை தொடர்பாக நிறையப் பேச முற்படுவதும். இந்த அமெரிக்காதான். இப்போது புரிகிறதா. ஆம் புரியத்தானே
வேண்டும்......
No comments:
Post a Comment