Monday, October 22, 2012

அச்சத்தில் ஒரு அரசியல் அதுதான் சர்வாதிகாரம் !


அரசியல் நோக்கங்களுக்காக வன்முறையை பயன்படுத்தல் பயங்கர வாதம் என்றால் உலகின் தலைவிதி இன்று அந்த அரசியலால் தான் நிச்சயிக்கப்படுகின்றன ! . வன்முறையின் வடிவம் பற்றி எமக்குள் ஒரு மயக்கம் உண்டு ; அது அடிப்படையில் கருவி ஏந்தியிருக்கும் துன்ப்ருத்தும் ,கொலை செய்யும் ...இப்படி பல ஆனால் அதை விட ஆபத்தானது அது நான் என்ற மமதையோடு பயத்தை மூலதனமாக்கி ஆட்சி செய்வது .இப்போது அதன் கீழ் மக்கள் தினம் தினம் உயிரோடு 
இறந்து கொண்டே இருப்பார்கள் .அனேகமாக எல்லா சர்வாதிகாரத்தினதும் பொதுப்பண்பு இந்த பயத்தை 
மூலதனமாக்குதலே . 

இது நடந்தது 1985 மே மாதம் 14 ம் திகதி அது வரலாற்றுப் பிரசித்தி பெற்ற அனுராத புற நகரம் வழமை போல இயங்க ஆரம்பித்திருந்தது .இலங்கை இராணுவ சீருடையில் காவல் கடமையும் வழமை போலவே . திடீரென பொது மக்களை நோக்கி அவர்கள் சுட ஆரம்பிக்கிறார்கள் ! திகைப்பும் ஆச்சரியமும் கலக்க மக்கள் ஓடத் தொடங்கினார்கள் . அது புலிகள் என மக்களுக்கு அப்போதுதான் புரிந்தது . 



  ஈவு இரக்கமின்றி ஏறத்தாள 150 பேர் கொள்ளப்பட பலர் காயமடைந்தனர் . இலங்கையின் இனவாத யுத்தத்தில் சிங்கள சிவிலியன்களை நோக்கி மேட் கொள்ளப்பட்ட முதலாவது மிகப்பாரிய தாக்குதல் சம்பவம் இதுதான் . இதுதான் விடுதலைப்புலிகளுக்கு ஆற்றல் மிக்க 'கொலை இயந்திரம் ' என்ற பெயரை பெற்றுத்தந்தது . அந்த கொலை இயந்திரங்கள் தப்பித்து வேறு சென்றது தமிழர்களால் ஒரு சாதனையாகவும் பார்க்கப்பட்டது . "நம்மட பொடியள் கெட்டிக்காரங்கள் " மனித நேயமற்ற இந்த பார்வைக்கு நாமும் விலை கொடுக்க வேண்டும் என்பது அன்று புரியப்படவில்லை .

தாங்கள் ஆற்றல் மிக்க கொலை இயந்திரங்களை அல்ல ஒரு தெளிவான இராணுவ சர்வாதிகாரத்தை தாம் வளர்க்கிறோம் என்பது இவர்களுக்கு புரியவில்லை இது இன்னொரு சம்பவம் இது சிங்கள தேசத்தில் ஒரு சிங்கள மகனுக்கு எதிராக அல்ல அநீதியை தட்டிக்கேட்ட தமிழ் மகன் ;இவரது பெயர் ரஜனிகாந்த் யாழ் கல்வியங்காட்டை சேர்ந்த இவர் ஒரு பட்டறைத் தொழிலாளி 'டெலோ ' இயக்கத்தை சேர்ந்த சிலர் சில பெண்களுடன் தகாத செயல்களில் ஈடுபட்டதை கண்டித்துள்ளார் .

விளைவு அந்நபர் அவர்களால் கடத்திச் செல்லப்பட்டு நெல்லியடி சந்தியில் ஒரு மேடை போடப்பட்டு ஒரு நாடகக் கதை நடத்தப்பட்டது .பெண் வேடமணிந்த ஒரு டெலோ உறுப்பினர் அந்த மேடையில் தோன்றி குறித்த நபர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடித்து காட்டியதன் பின் ஒரு கத்தியால் அந்த பெண் வேடமணிந்த டெலோ உறுப்பினர் பொய் குற்றம் சுமத்தப் பட்டவரை குத்திக் கொலை செய்தார் . சம்பவமும் அவர்களால் தான் சொல்லப்பட்டது .சாட்சியும் அவர்களே மக்களை உறைய வைக்கும் ஒரு படுகொலை நாடகமாக அரங்கேற்றப்படுகிறது . இதுதான் சர்வாதிகாரம் . (தொடரும் ..)


 

No comments:

Post a Comment