Saturday, October 13, 2012

துருக்கி முஸ்லீம் உலகில் நவ காலனித்துவத்தின் மூன்றாம் வடிவம் !?


 எப்போதும் எதிரிகள் எம்மை புகழும் போது சற்று அவதானமாக இருக்கவேண்டும் . இங்கு நான் சொல்ல வருவது துருக்கி தொடர்பில் யூத , கிறிஸ்தவ மதவாத + ஜனநாயக அரசியல் வழிமுறை முதலாளித்துவ மேற்குலகு ஓதும்வேதம் பற்றியதுதான் . அசுரத்தனமான இன்றைய துருக்கிய தோற்ற மாயை இராணுவ அரசியலின் அவசரமான தாலிபான்
 உருவாக்கத்தை ஒத்த முதலாளித்துவ  சிவில் அரசியலின் திட்டமிட்ட ஒரு நுணுக்கமான நகர்வு என்ற பார்வையை தவிர்க்க முடியாதுள்ளது .


                                                   இந்த கீழ்வரும் கருத்தை அவதானியுங்கள் .இது 27.10.2009 இல் பிரித்தானியாவில் இருந்து வெளியாகும் THE GUARDIAN பத்திரிகையில் 'ஸ்டீபன் கின்சரின்' எதிவுகூறல் இதுதான் .(அடைப்புக்குறிக்குள் இருப்பவை நான் பதிந்தவை )

  "... துருக்கி பலப்பிரயோகத்தை விடுத்து ராஜ தந்திர பயணத்தின் மூலமே தனது செல்வாக்கை வளர்த்து வருகிறது .எதிர்காலத்தில் இஸ்லாமிய உலகிற்கு தலைமைத்துவத்தை கொடுப்பதற்கு எகிப்து ,பாகிஸ்தான் ,ஈரான் போன்ற நாடுகளால் முடியாது .ஏனெனில் அவற்றின் சமூக நிறுவனங்கள் பலவீனமானவை . மக்கள் சிதறி சின்னாபின்னமாகி காணப்படுவதோடு சமூகங்களும் ஒருமுகப்படுத்த முடியாதளவு இற்றுப்போயுள்ளன . இந்தோனேசியா ஒருவேளை 
அப்படியான தலைமைத்துவத்தை வழங்க முடியும் . இருப்பினும் அந்த நாட்டுக்கு அத்தகைய எந்த வரலாற்று தகமையும் கிடையாது ."



                                   ஆனால் ,துருக்கியின் நிலை இந்த வகையில் சாதகமாக உள்ளது .அதன் பொருளாதார வல்லமை (I.M.F இற்கு கடன் வழங்கும் அளவுக்கு ) சாதகமாகவும் ,அதன் புவியியல் அமைவு (ஐரோப்பிய ஆதிக்க அரசியல் பிடியில் சுலபமாக வீழ்த்தத்தக்க 'ரேஞ்சில் ') சாதகமாகவும் ,அதன் வரலாற்றுச்சாதனைகள் (கிலாபாத்திய கற்பனா வாதத்தை மனதில் ஏந்திய முஸ்லீம் உம்மாவிற்கு படம் காட்டும்) தரமான  வடிவத்திலும், அதன் ஜனநாயக அமைப்புக்கள் (இஸ்லாமிய ஜனநாயகம் எனும் முதலாளித்துவ 'பெகேஜை ' திணிப்பதற்கு ) சாதகமாகவும் இருப்பது அதனை தன்னிகரற்ற மாதிரி வடிவமாகவும் ,('வெஸ்டன் போளிசியின் ' ) நடுநிலையான தரகராகவும் தரமுயர்த்தி விடும் ."



              மேலே தந்தது மேற்கின் நியாயமான எதிர்பார்ப்பு ! இவர்கள் சொல்ல வரும் அந்த 'நியூ இஸ்லாமிக் ரோல் மொடல் கன்றி ' உலக முஸ்லீம் உம்மாவின் தவிர்க்க முடியாத அடைக்கலமாகவேண்டும். அந்த ஒரே எதிர்பார்ப்பில்தான் நேற்றுவரை நோயுற்ற நாடாக அறிமுகப்படுத்திய துருக்கியின் வளம் கொழிக்கும் இன்றைய வடிவம் . இது முஸ்லீம் உலகில்  நவ காலனித்துவத்தின் மூன்றாம் வடிவம்

No comments:

Post a Comment