Monday, October 8, 2012

' அடைக்கோழித்தனம்' ஒரு கோழைத்தனம் !


"செருப்பின் வார் அறுந்தாலும் அல்லாஹ்விடம் கேளுங்கள் " இது நபிமொழி பொதுவாக இந்த 'து ஆ ' என்பது சக்தி வாய்ந்தது தான்  ஆனால் அதன் பின்னால் அது தொடர்பில் முயற்சிக்காதவரை அதன் சாத்தியப்பாடு பற்றி சற்று சந்தேகம்தான் . இதுபற்றி  நபிவழி நல்ல பல ஆதாரங்களை தருகின்றது . அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) 'பத்ரின்' அந்த நெருக்கடியான நேரத்திலும் தயார் நிலையின் உச்சத்தோடு தான் பிரார்த்தித்தார்கள்.எம்மிடம் முயற்சி இல்லாதவரை அல்லது முயற்சிக்க எண்ணாதவரை அது உறுதியான இறைவன் எதிர்பார்க்கும் 'து ஆ ' வாக இருக்காது . இப்போதைய
சூழ்நிலைகளில் எம்முடைய உலமாக்கள் து ஆ ' கேட்பது மட்டும் தான் எம்மால் செய்ய முடியுமானது என்று முயற்சி அற்ற  வெற்று 'துஆ'க்களால் சமூகத்தை பலவவீனப்படுத்த முயற்சிக்கிரார்கள் . இது தறு .
                             (ஜிஹாதுல் அக்பர் ) மிகப்பெரிய ஜிஹாத் எது என்பது பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல் ) குறிப்பிடும் போது "அநியாயக்கார ஆட்சியாளன் முன் சத்தியத்தை உரைப்பது" என்று குறிப்பிட்டுள்ளார்கள்இங்கு ஆட்சியாளன் 
 என்னும் போது அவனது அதிகாரம் , படை வல்லமை என்ற எதைப் பற்றியும் கவலை கொள்ளாது வாள் அற்று வில் அற்று வார்த்தைகளால் போராடுவது அதாவது விளைவு படு பயங்கரமாக இருக்கும் என்ற நிலையிலும்  இந்த சுப 
சோபனம் கூறப்பட்டுள்ளது . எனவே அமைதி காத்தல் என்ற'அடைக் கோழித்தனம்' எனும் கோழைத்தனம் நோக்கி சமூகம் தூண்டப்படுகின்றது

  ஓஹ் என் சமூகமே ! நீ சுவனம் செல்ல அசத்தியத்தை எதிர்த்து  போராடுவதுதான் உன் விதி அதன் மீது அப்பட்டமான சதி நடக்கின்றது என்பதை நீ புரிந்து கொள் . எனவே அவர்களது பாசையில் நீ பிரார்த்திக்க சில துஆக்களை தருகிறேன் . முயற்சியை மூலதனமாக்கி இவ்வாறும் பிரார்த்திக்கலாம் .

# யா அல்லாஹ்வே (சுப) !நீ அருளியதைக்கொண்டு தீர்ப்பளிக்காது  மனோ இச்சை வழி தீர்ப்பளிக்கும் இந்த தீய அதிகாரங்களை உனது சத்தியத்தைக்கொண்டு வெற்றி கொள்ளக்கூடிய மனோ வலிமையை எமக்களிப்பாயாக .

#யா அல்லாஹ்வே (சுப) !உனக்கே கீழ்ப்படிகிறோம் . நபிவழி நடக்கவும் உடன் படுகிறோம் .ஆனால் இவற்றை தீர்க்கமாக அமுல் நடாத்த ஒரு சிறந்த சத்தியத்தின் அதிகாரம் இல்லாத நிலையை போக்கி வைப்பாயாக .

#யா அல்லாஹ்வே (சுப) !எமக்கிடையே ஏற்படும் சச்சரவுகளில் உன்னையும் ,உனது தூதரையும் நீதிபதியாக ஏற்று எமது மனோ இச்சையையும் ,சைத்தானின் அடிச்சுவடுகளையும் புறக்கணிக்கும் மக்களாக எம்மை ஆக்குவாயாக .

#யா அல்லாஹ்வே (சுப) ! நிராகரிப்போர் எமக்கெதிராக சிலர் சிலருக்கு பாதுகாவலர்களாக இருக்கின்றனர் முஸ்லீம்களாகிய நாங்களும் எங்களுக்குள் முரண்பாடுகளை மறந்து அந்த குப்பார்களுக்கெதிராக ஓன்று சேரும் மனோ நிலையை எமக்கு ஏற்படுத்துவாயாக .

#யா அல்லாஹ்வே (சுப) ! கலீபாவிட்கு பையத் செய்யாத நிலையில் மரணித்தால் அது ஜாஹிலீய மரணம் என உனது தூதர் (ஸல் ) வழி நாமும் அறிந்துள்ளோம் ! அத்தகு கேவலமான மரணத்தை எமக்களித்து விடாதே .

#யா அல்லாஹ்வே (சுப) !எமக்கு இமாம் எனும் கேடயத்தை ஏற்படுத்தித்தா நாயனே .எமக்கு இமாம் எனும் கேடயத்தை ஏற்படுத்தித்தா நாயனே .எமக்கு இமாம் எனும் கேடயத்தை ஏற்படுத்தித்தா நாயனே .

யா அல்லாஹ்வே (சுப) ! எமது பையத்துக்காக , எமது கேடயத்துக்காக வளமும் பலமும் பொருந்திய அந்த கிலாபா அரசை ஏற்படுத்தித்தா நாயனே .

             இப்படியும் கேட்பதோடு முயற்சியுங்கள் . மீண்டும் அந்த முஹம்மதின் (ஸல் ) படை  வரும் என்ற தெளிவான முன்னறிவிப்புகள் இருக்கின்றன . இனி என்ன இதுதான் பதை இதுதான் பயணம் .
                                                                                 

            



No comments:

Post a Comment