Thursday, October 25, 2012

சூடானின் மீது இஸ்ரேலிய விமானங்கள் தாக்குதல்?




சூடானின் “யர்மூக்” ஆயுத தொழிற்சாலை மீது விமான குண்டு வீச்சு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை நான்கு குண்டு வீச்சு விமானங்கள் நடாத்தியுள்ளதாக ஆரம்பகட்ட அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.


இந்த தாக்குதலை நடாத்தியது இஸ்ரேலிய விமானங்களே என்று சூடானிய தகவல்துறை அமைச்சர் அஹ்மட் பிலால் தெரிவித்துள்ளார். சூடான் தலை நகர் கார்டூமிற்கு அருகிலேயே மேற்படி தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. 1997ல் அல்-காயிதா அமைப்பினரின் ஆயுத தொழிற்சாலை என்று கூறி அமெரிக்க ஒரு மருந்து தொழிற்சாலை மீது தாக்குதல் நடாத்தியது. 2009ல் ஹமாஸின் ஆயுத உற்பத்திய நிலையம் என்று இஸ்ரேலும் தாக்குதல் நடாத்தியது. ஆனால் அந்த தாக்குதலை இஸ்ரேல் ஒத்துக்கொள்ளவில்லை.

வெடிமருந்துகள் வானளாவ வெடித்து கிளம்புவதால் நகரமே அதிர்ந்த வண்ணம் உள்ளது. எந்த தீயணைப்பு முயற்சிகளும் செய்ய முடியாத நிலை. திடீர் திடீர் என் ஒவ்வொரு இடங்கள் வெடிப்பதனால் யாரும் நெருங்க முடியவில்லை. சூடானிய தகவல் துறை அமைச்சர் இஸ்ரேலே இந்த தாக்குதலை நடாத்தியுள்ளது என்று மூன்றாவது முறையும் அறிவித்துள்ளார். 

No comments:

Post a Comment