Wednesday, October 17, 2012

நேற்று இன்று நாளை !



"என்னை சிறை பிடித்ததும் சித்திரவதை செய்ததும் அல்லாஹ்வின் நாட்டம் தான் என்றால் நான் சஞ்சலப்படவில்லை என்னை சிறை பிடித்ததும் சித்திரவதை செய்ததும்  'ஜாஹிலியத் 'என்றால் நான் இந்த அல்லாஹ்வின் எதிரிகளிடம் மண்டியிடப்போவதுமில்லை ;
கல்வித்துறையை முழுமையாக இஸ்லாமிய மயமாக்கிடும் இலட்சிய இஸ்லாமிய ஆட்சியின் கீழ் மட்டுமே நான் அமைச்சர் பதவிகளை பற்றி சிந்தித்திட  முடியும் ."இந்த வார்த்தைகளின் சொந்தக்காரன் யார் தெரியுமா வேறு யாருமல்ல இஹ்வான்களின் மூத்த பிதாக்களில் ஒருவரான சையத் குத்ப் (ரஹ்) அவர்கள்தான் !




 சற்று குழப்பமாக உள்ளதா ? இன்றைய எகிப்திய கலப்பட இஸ்லாமிய அரசியலின் மத்திய கிழக்கு  'ஹோலி வூட் ' கலர் பட மொடல்  நடிகர்களுக்கு இப்படி ஒரு  தூய வரலாறும்  உண்டு ; இது நடந்தது 1960 களில் ;நான் இந்த விடயத்தை எழுதுவது அவரை 
புகழ் பாடவோ புனிதப்படுத்தவோ அல்ல மாறாக ஒரு புரட்சிகர சிந்தனாவாதம்  சிலுவை சித்தாந்தத்துடன் சமரசம்   செய்ததும் போதாமல் நேற்று கள்ளப்பிறப்பு என்று கடிந்து கூறிய இஸ்ரேலை மச்சான் என்று கூறாத குறையாகஅரவணைத்துள்ளதும்உலக வங்கியிடம் வட்டிக்கு கடன் வாங்க முயல்வதும் ,ஆடை விடயத்தில் இஸ்லாமிய 'ஷரி ஆ வை சந்திசிரிக்க வைத்து 'பிகினி மொடல்களுக்கு அங்கீகாரம் கொடுப்பதும் என நாளைய நோபல் பரிசை தட்டிச்செல்லும் நவீன இஸ்லாமிஸ்டுகளுக்கு  முன்னால் இவரை ஒப்பிட்டுப்பார்த்தால் ஒரு உண்மை புரியும் அது இதுதான் .



ஆயிரம் துண்டுப் பிரசூரங்களும் , நூறு பேச்சு மேடைகளும் சாதிக்காததை ஒரு துப்பாக்கித் தோட்டா சாத்தித்துவிடும் எனும் கருத்துடைய லெனினிய வாதிகளின் எகிப்திய எஜென்ட்டான காட்டேரி நாசருக்கும் வலித்தது இந்த இடம் தான் அது அவரது பேச்சும் ,பேனா முனையும் அணு ஆயுதங்களை விட'கிரெம்ளின்'தொடங்கி 'வைட்ஹவுஸ்'  வரை இஸ்லாத்திற்கு முன்னால் சவாலுக்கு அழைத்தது.இந்த கோதாவில் காட்டேரிநாசர் கூட்டத்தை முஸ்லிம் உம்மாவின் கோமாளித்தனமான கோடாரிக்காம்பாக இனம் காட்டினார் சையத் குத்ப் (ரஹ்)  ; சிறை ,சித்திரவதை ,எனத்தொடர்ந்து தூக்கிலிடும் வரை ஓயவில்லை அந்த நயவஞ்சக பிறவிகள் .



அநியாயக்கார ஆட்சியாளர் முன் சத்தியத்தை முழங்கினார் இதுதான் அவரது ஒரே குற்றம் ;ஆதாரத்துக்கு இழுத்து வந்தது அவர் சிறையில் இறுதியாக எழுதிய நூல் 'மைல் கற்கள் ' பன்னிரண்டு அத்தியாயங்கள் கொண்ட இந்நூலின் இறுதி அத்தியாயம் 'இதுதான் பாதை இதுதான் பயணம் ' எனும் தலைப்பு.
 அதில் 'சூரா அல் புரூஜ் குறிப்பிடும் அந்த விசுவாசிகள் பற்றிய செய்தி ! நீரில் நீராடவே அச்சப்படும் எம்மைப்போன்றவர்களுக்கு 
அநியாயக்கார ஆட்சியாளனுக்கு முன்னால் சத்தியத்தோடு வாழ்வு அல்லது வீர சுவனம் எனும் முடிவில் நெருப்பில் நீராட துணிந்த ஒரு சமூகத்தின் வரலாற்றை காலத்தால் எரிக்க முடியாமல் அல்லாஹ்(சுப்) 'வஹியாக்கிய தூய வரலாறு . பாதை தெளிவு பயணிக்க யார் தயார் கேள்வி கேட்டு 'ப்ரோபிட் பேசில் பிரிண்ட் போடும் பிறவியுமல்ல சையத் குத்ப் (ரஹ்) ;சொன்னார் செய்தார்.




இவர் 'குப்ரியத்தின்' ஏஜெண்டுகளால் மட்டும் எதிர்க்கப்படவில்லை மாற்றமாக இஸ்லாத்தை பூசு பொருள் அரசியலாக பாவிக்கும் மனிதர்களும் ,சூழ்நிலைவாத மாயம் பிடித்தவர்களும் இவரை விமர்சன மேடையில் தரம் குறைக்கப்பார்க்கிரார்கள் ! பரவாயில்லை  நாளை 'குத்சை' யூதக் குப்பை தொட்டியாக்கி சியோனிச சாம்ராஜிய எல்லைக்குள் மதீனாவையும் உள்ளடக்கி இஸ்ரேல் மச்சான் உரிமை கோரும்போது விட்டுக்கொடுப்போடு சமரசம் செய்யுமா ? சமர் செய்யுமா ?என்பது கேட்கவேண்டிய கேள்விதான் !ஏனெனில் சியோனிச ஆலோசனையில் கிறிஸ்தவர்கள் ஆயுதம் தர எமக்கான கபுருகளை நாமே தோண்டுவதுதான் காலத்தின் தேவையாக எம்மால் உணரப்பட்டுள்ளது.
.

1 comment: