Monday, October 8, 2012

நவீனம் ஒரு பார்வை .


     

       அனேகமாக முஸ்லீம்  சமூகத்தில் இருந்து வரக்கூடிய கேள்விகள் ,சந்தேகங்கள் , விளக்கங்கள் எல்லாம் குப்ரின் வடிவங்களை பிரதிபளித்தே வருகின்றன .அதற்கு காரணம் இஸ்லாம் அவர்கள் முன் வெறும் வரலாறாகவே         காணப்படுகின்றமையாகும். படித்து தெளிவது என்பதை விட தாம் காண்பவற்றையும் ,உணர்ந்த வற்றையும் ,கற்ற வற்றையும் வைத்தே மனித நடத்தை என்பது தனது செயற்கலத்தின் வடிவத்தை தீர்மானிக்கும் . 
                                                                       இது இயல்பானது ஆனால் மிகச்சரியான மாற்றம் தொடர்பில் ஆபத்தானது. அதாவது நாம் எதை  பிழையானது என புறக்கணிக்க நினைப்போமோ அவை யதார்த்தம் எனும் பெயரில் எம்மோடு ஒட்டி உறவாட தலைப்பட்டு விடும் . உதாரணமாக இஸ்லாம் ஒரு விடயத்தை ஹராமானது என்று தடுத்திருக்கும் ஆனால் நடைமுறை அதிகாரம் அதை அங்கீகரிக்கும் அதை தவிர்க்க முடியாத ஒரு நடத்தையாக கட்டுப்பட தூண்டும் இப்போது முஸ்லீம் அதில் ஈடு படுவான் அப்போது அவனோடு இயல்பில் ஒட்டிநிற்கும் இஸ்லாமியம் ஒரு வகை தர்மசங்கடத்தை ஏற்படுத்த அந்த விடயத்தை ஹலாலாக்க அல்லது ஹலால் போல் சித்தரிக்க முற்படுவோம் . வட்டி 'செக்கியுலரிசம்' , ஜனநாயகம் என்பன முஸ்லீம்களாகிய எம்மவர்களால் காலத்தின் தேவை என சரிகாணப்படுவது இதனால் தான் .(ஒரு மாணவன் இஸ்லாம் பாடத்தில் வட்டியை ஹராம் எனப்பார்ப்பான் அதே நேரத்தில் கணித ,வர்த்தக பாடங்களில் அதன் விதிமுறைகள் ,விகிதாசாரம் என்பவற்றை கற்பான் இப்போது அவன் சமூக களத்துக்கு வரும்போது அங்கும் இருப்பது வட்டியை அங்கீகரிக்கும் அரசியல் பொருளாதார நடத்தைகளே !அவன் என்ன செய்வான் ?)
    அதனால் தான் என்னவோ எமது இஸ்லாமிய வாதிகள் இப்போது 'டெஸ்ட் டியுப் பேபி ' யாருடைய விந்திட்கும் கருவிற்கும் இடையில் உருவானது என்பதை பார்க்காமல் கிடைத்திருக்கும் 'பேபியை ' தாலாட்டி சீராட்டி அதற்கென 'சிலபஸ்' அமைத்து வளர்க்க வேண்டும் என்பதே சரியாக உணரப்படுகிறது . அதுவும் வந்து கொண்டே இருக்கும் இவர்களும் எடுத்துக்கொண்டே இருப்பார்கள் ! இவர்களின் முன் சரீயா ஆதாரங்களை முன்வைத்து இது பிழையானது என்று கூறினால் அது வறண்ட காலம் கடந்த சட்டம் என்பார்கள் .

                                                                                                          நிகழ் கால தொழில் நுட்ப ,அறிவியல் முன்னேற்றத்தை இணைத்து இறந்த காலத்தை நோக்கும் போது மிக அவதானமான பார்வைதேவை .ஏனென்றால் அது அந்த இறந்தகால சமூகத்துடைய அடிப்படை சித்தாந்த தெளிவில் குறைபாட்டை கொண்டதாக இனம் காட்டப்படக்கூடாது .அடிப்படை சித்தாந்த தெளிவு (அகீதா)மற்றும் அதிலிருந்து பிறக்கக்கூடிய வழிமுறை என்பன வளர்ந்து வரக்கூடிய அறிவியலாலும் தொழில் நுட்பத்தாலும் பண்படுத்தப்படும் ,கட்டமைக்கப்படும் என்பதுதான் உண்மை தவிர காலத்தின் தேவை என்ற பார்வையில் அடிப்படை 
இலட்சியமும் அதன் அடைவுகளும் மறுக்கப்பட முடியாதவை ,புறம் தள்ளப்படமுடியாதவை .
    முஸ்லீம்களாகிய நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் அறிவியலாலும்  தொழில் நுட்பத்தாலும் ஜாஹிலியா சிறந்த கட்டமைக்கப்பட்ட நிறுவனமாக்கப்பட்டு அதிகார ஆதிக்க நிலையில் எம்மை கட்டுப்படுத்தியிருக்கிறது என்பதுதான் உண்மை .இங்கு அந்தஅறிவியலையும் தொழில் நுட்பத்தையும் எடுப்பது என்ற நியாயம்அதனால் கட்டமைக் கப்பட்டுள்ள ,பண்படுத்தப்பட்டுள்ள ஜாஹிலீய அகீதாவும் அதன் வழிமுறைகளும் சேர்த்து எடுக்கப்படல் என்ற தவறை செய்யத்தூண்டக்கூடாது .


                      




                                                    
                                                                                                   



No comments:

Post a Comment